17.9.2024-4AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு:*
*
அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பசர்க்கவும்.
தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்தில்
கோடை காலம் போல
அனல் வெப்பம் வீசுவதற்கு காரணம் என்ன?
வெப்பம் விலகி மழை பொழிவது எப்போது?
பொதுவாக மார்ச் 21 நில நாட்டுக்கோட்டிற்கு வரும் சூரியனின் செங்குத்துக் கதிர் ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு வழியாக ஜூன் 21 இல் வட மாநிலங்கள் பயணிக்கும் கற்பனை கோடு கடக ரேகையில் விழுந்து மீண்டும் நில நடுக்கோட்டை நோக்கி பயணித்து செப்டம்பர் 21 நில நாடுக்கோட்டில் விழும்.
ஏப்ரல் மே அடுத்து ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டிலும் அதன் அருகிலும் செங்குத்து கதிர் விழும்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவக்காற்று ஈரக்காற்றாக கேரளா, தமிழ்நாடு வழியாக பயணிக்கும் என்பதால் வெப்பம் தெரியாது.
தற்போது பருவக்காற்று தென்சீனக்கடல் அதனை ஒட்டி பசிபிக் கடலில் நீடிக்கும் வலுவான நிகழ்வுகள் நோக்கியும், செயலிழந்து இந்தியா வந்து வட இந்தியாவில் நீடிக்கும் யாகி புயலின் மண்டலம் நோக்கியும் காற்று திசை மாறி உள்ளது.
மிகவும் குறைந்த வேகத்தில் மேற்கில் இருந்து வரும் காற்றும் வெப்பம் அடைந்து அனல் காற்றாக கடலோரம் வந்தடைக்கிறது.
இதன் காரணமாக சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் வெப்பம் மிகுந்த ஏப்ரல் மே கோடை போல வெயில் சுட்டெரிகிறது.
வட இந்திய நிகழ்வு டெல்லி, ராஜஸ்தான் சென்று செப்டம்பர் 19 செயலிழந்த பிறகு புதிய வளிமண்டல சுழற்சி வங்கக்கடலில் மேல் செப்டம்பர் 21,22,23,24 இல் உருவாகி ஆந்திரப்பிரதேசம் ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் மாலை இரவு இடிமழை ஆங்காங்கே கொடுக்கும்.
செப்டம்பர் 25 க்கு மேல் அந்தமான் கடல் பகுதிக்கு தென் சீனக்கடல் நிகழ்வுகள் செப்டம்பர் 28 முதல் அக் 5 வரை வந்தடைந்து தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழையை தீவிரப்படுத்தும்.
ஒட்டு மொத்தத்தில் செப்டம்பர் இறுதி வெப்பம் குறைந்து மாலை இரவு இடிமழை கொடுக்கும்.
இடிமழை எதிர்பார்ப்புகள்.:
*
செப் 17,18,19 கடும் வெயிலுக்கு பின்னர் மாலை இரவில் ஒரு சில இடங்களில் லேசான இடிமழை பொழியும்.
அடுத்த நிகழ்வு :
செப்டம்பர் 22,23,24,25இல் ஆந்திரா, அந்தமான் இடையே வளி மண்டல சுழற்சி உருவாகி,வட தமிழ்நாடு மற்றும் மத்திய கடலோர மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவு மழை அமைப்பை ஏற்படுத்தும்.
செப்டம்பர் 28,29,30
அக்டோபர் 1,2,3,4
ஆந்திரா கரையோரம் அமையும் அடுத்தடுத்த இரண்டு வலுவான நிகழ்வுகள் தமிழ்நாடு உட்பட தென் இந்தியாவிற்கு சிறப்பான மழை தரும்.
அக்டோபர் 10,11,12,13 ஆந்திரா வரும் நிகழ்வு காரணமாக தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் நல்ல மழை தரும்.
அக்டோபர் 11,12 ஆயுதபூஜை விஜய தசமி மழை குழப்ப வானிலை தெரிகிறது.
2024 தென் மேற்கு பருவமழை அக்டோபர் 14 முடிவுக்கு வரும்.
கடல் வெப்பம் லா -நினா அமைப்பும் நெகடிவ் IOD அமைப்பும்
*
இந்தியப் பெருங்கடல் IOD அக்டோபர் முதல் நடுநிலையில் இருந்து நெகடிவ் IOD அடையும்.
பசிபிக்கடல் அக்டோபர் முதல் லா-நினா அமைப்பை அடையும்.
ஆக பசிபிக் கடலின் ஆசிய நாடுகளின் பகுதி வெப்பம் அதிகரிக்கும்,வங்கக்கடல் , அதற்கு தெற்கே உள்ள நில நடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் வெப்பம் உயர்ந்து இருக்கும் என்பதால் 2024 அக்டோபர் முதல் ஜனவரி முடிய தென் சீனா கடல் நிகழ்வு வங்கக்கடலுக்கு வலுவாக வரும்.
காற்று திசை மாறும் காலம் :
அக்டோபர் 13 to 16
வடகிழக்கு பருவமழை.
அக் 17,18 இல் தொடங்கும்.
இக்காலத்தில் வலுவான நிகழ்வுகள் வலுவான மழை தரும் வடகிழக்கு பருவமழை சராசரிக்கும் கூடுதல் தரும் என்றே தெரிகிறது.
மழை அமைவு எதிர்பார்ப்பு :
அமைவு 1
அக்டோபர் 18 முதல் 25 முடிய தென் மாநிலங்கள் பரவலாக மிதமானது முதல் சற்று கனமழை வரை.
அமைவு 2
அடுத்த நிகழ்வு உருவாகி அக்டோபர் 28 முதல் நவம்பர் 4 முடிய நல்ல மழை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி தெரிகிறது.
அக்டோபர் 31 தீபாவளி நாள்களில் மழை தெரிகிறது.
அமைவு 3
நவம்பர் 7 முதல் நவம்பர் 14 வலுவான நிகழ்வுகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உட்பட நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது.
நவம்பர் 15, 16,17, 18 நல்ல மழை தெரிகிறது.
அமைவு 4
நவம்பர் 22,23,24,25,26 மீண்டும் வலுவான நிகழ்வுகள் அனைத்து மாவட்டங்களில் அதிக மழை தெரிகிறது.
அமைவு 5
நவம்பர் 27 முதல் டிசம்பர் 10 முடிய வலுவான நிகழ்வுகள் நல்ல மழை தெரிகிறது.
அமைவு 6
டிசம்பர் 14 முதல் டிசம்பர் 23 முடிய மன்னார் வளைகுடா தென் தமிழ்நாடு வழி அரபிக்கடல் நிகழ்வு நல்ல மழை.
அமைவு 7
டிசம்பர் 26 முதல் 31 இலங்கை, குமரிக் கடல் நிகழ்வு.
அமைவு 8
ஜனவரி முதல் வாரம் நிலநடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் குமரிக் கடல் நிகழ்வு தென் மாவட்ட மிதமான மழை வாய்ப்பு.
*குறிப்பு 2024 வட கிழக்கு பருவமழை காலத்தில் வலுவான நிகழ்வுகள் அடுத்தடுத்து வரும், ஒரு நிகழ்விற்கும் அடுத்த நிகழ்விற்கும் இடைவெளி இருக்கும். வலுவான நிகழ்வுகள் வடகிழக்கு மாநிலங்கள் முதல் தமிழ்நாடு வரை மழை கொடுக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் முற்பகுதி நிகழ்வுகள் வட மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களில் அதிக மழை தரும். டிசம்பர் பிற்பகுதி தென் மாவட்டங்களில் அதிக மழை தரும். ஒவ்வொரு நிகழ்வும் கடக்கும் இடம் ஒன்றாக இருக்கும், மழை தரும் இரு காற்று இணையும் இடம் வேறு இடமாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பொழிவை தரும். அரபிக்கடல் காற்று வங்கக்கடல் வரும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கும் நல்ல மழை தரும்.
தினசரி அப்டேட்ஸ் வழங்கப்படும் மாறுதல், துல்லியம் அறிந்து பணிசெய்து லாபம் அடைய கேட்டுக்கொள்கிறேன்.*
ந. செல்வகுமார்
17.9.2024-4AM
வெளியீடு