11.11.2024-8PM வெளியீடு.ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை. அதிகாரப் பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும். காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் வெப்பம், குளிர் நீராவி இணைவு இடம் அடிப்படையில் மழை அமையும்.
*
2024 நவம்பர் 11 திங்கள் இரவு முதல் டிசம்பர் 31 முடிய வானிலை எதிர்பார்ப்பு.
*தென்மேற்கு வங்கக்கடல் காற்று சுழற்சியும் மத்திய வங்கக்கடல் காற்று சுழற்சியும் இணைப்பு சுழற்சியால் பிணைக்கப்பட்டு தமிழ்நாடு, நெருங்கியது *
காற்றுசுழற்சி தாழ்வு பகுதியாக நவம்பர் 11 மதியம் தீவிரமடைந்தது. இது மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து செயலிழந்து காற்று சுழற்சியாக நவம்பர் 13 தமிழ்நாடு கரை கடக்கும்
நவம்பர் 14,15,16 இல் மேலும் ஒரு காற்று சுழற்சி தமிழ்நாடு கரையை அடையும். இவை இரண்டும் நவம்பர் 18 முடிய மழை தரும்.
நவம்பர் 11 திங்கள் இரவு
நவம்பர் 11 இரவு 11.30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கடலோரம் கேளம்பாக்கம் மாமல்லபுரம், கல்பாக்கம் முதலில் மழை தொடங்கி நள்ளிரவுக்கு பின்னர் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை தொடங்கி படிப்படியாக தீவிரமடையும்
நவம்பர் 12 செவ்வாய்:
சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு,, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை,, காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடலோரம் மழை தொடங்கி காலை, மதியம், மாலை, இரவு வரை படிப்படியாக முன்னேறி திருவாரூர், தஞ்சாவூர்,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மேற்கு பகுதி , கள்ளக்குறிச்சி,கடலூர் மேற்கு பகுதி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி வரை தமிழ்நாட்டின் மாவட்டங்களில் மழை தொடங்கிவிடும்.புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கும் நவம்பர் 12 தொடங்க வாய்ப்பு.
அதே நேரத்தில் கடலோர ஆந்திரா, ஏனாம், கடப்பா, ஆனந்தப்பூர் ஹாசன் வரை பெங்களூரு, மைசூரு, திருப்பதி உட்பட கர்நாடக, ஆந்திரா பகுதிகளிலும் தொடங்கும்.
நவம்பர் 13 புதன் :
தமிழ்நாடு வளி மண்டலத்தில் மேற்கு நோக்கி நகரும் என்பதால்
தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தாண்டி கேரள மாநிலம் வரை தொடங்கிவிடும். ஆக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்வெல்வேறு நேரங்களில் மழை முதல் கனமழை வரை பொழியும்.ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மிக கனமழை பொழியும். அதே நேரத்தில் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளிலும் பொழியும்.
நவம்பர் 14,15,16 வியாழன், வெள்ளி, சனி
அரபிக்கடலில் கடந்து சென்ற காற்று சுழற்சி நீடிக்கும் அதே நாளில் வங்கக்கடலில் தமிழ்நாடு கரையை மேலும் ஒரு சுழற்சி நெருங்கி நீடித்து, கடந்து தமிழநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமழை வரை பொழியும். ஆங்காங்கே மிக கன மழை பொழியும். ஒரு சில இடங்களில் அதி கன மழை 20 செமீ வரை கூட எட்டலாம். இதே மழை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பகுதிகளிலும் பொழியும்.
நவம்பர் 13,14,15,16 தேதிகளின் சில நாள்கள் இந்தியா வானிலை நிறுவனம் Red Alert கொடுக்கவும் வாய்ப்புள்ளது.
ஒருசில இடங்களில் எதிர்பார்க்கும் மிக கன மழைக்கான Red Alert ஆக இருக்கும். அச்சம் வேண்டாம். பரவலாக நல்ல மழை பொழியும்.
*நவம்பர் 17,18 ஞாயிறு, திங்கள் *
*
நிகழ்வு அரபிக்கடல் சென்று வடகிழக்கு காற்றை தமிழ்நாடு வழியாக ஈர்க்கும் என்பதால் நவம்பர் 17,18 ஆங்காங்கே, ஆங்காங்கே நல்ல மழை பொழியும்.
வங்கக்கடலுக்கு தெற்கே MJO வரும் என்பதால் நவம்பர் 18 க்கு மேல் வரும் என்பதால்,நவம்பர் இறுதி வாரம் மற்றும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி முடிய டிசம்பர் மாதமும் அடுத்தடுத்த வலுவான நிகழ்வுகளால் நிறைய மழை தரும்.
அதன் அடிப்படையில் அடுத்தடுத்த நிகழ்வு நெருங்கும் நாள்கள்
நவம்பர் 22 முதல் 25 முடிய -சற்று வலுவானது
நவம்பர் 27 முதல் டிச 3 முடிய -வலுவானது
டிசம்பர் 4 முதல் 10 முடிய.-வலுவானது
டிசம்பர் 13 முதல் 24 முடிய வலுவானது
டிசம்பர் 26 முதல் 30 முடிய சற்று வலுவானது.
வானிலை அறிவியல் மற்றும் உழவன் Youtube இல் விரிவாக அறிக்கை பார்த்து பயன்பெறவும்.
ந. செல்வகுமார்,
மன்னார்குடி.
11.11.2024-8PM