10.1.2025 – 4.30AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு:
அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும்.*
அடுத்தடுத்த நிகழ்வுகள்
பசிபிக் பெருங்கடலில் இருந்து தென் சீனக்கடல் தாய்லாந்து வளைகுடா வழியாக அதாவது மலேசியா சிங்கப்பூர் வழியாக சுமத்ராதீவு பகுதிக்கு அடுத்தடுத்த காற்று சுழற்சிகள் வந்து தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு தென்கிழக்கு பகுதிகள் அடைந்து பிறகு இலங்கையின் தென்கிழக்கு முனை தெற்கு பகுதி வழியாக குமரிக்கடலின் தெற்கு பகுதி மாலத்தீவு கடற்பகுதிக்கு அடுத்தடுத்து நிகழ்வுகள் வரும் என்பதால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக குளிர்கால வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர இருக்கிறது இடையிடையே நிகழ்வுக்கு நிகழ்வு இடைவெளி இருந்தாலும் மழை பொழிவு நாட்கள் இடைவெளி நாள்களை விட கூடுதலாக தெரிகிறது. மழைப்பொழிவு ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே பொழிந்தாலும் அறுவடைக்கு இடையூறு கொடுக்கக்கூடிய வகையிலும் தானியங்களை உலர்த்துதலுக்கு தெளிவற்ற வானிலையும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வு-1 & 2
(ஜனவரி 11 12 13 14 15 16 தேதிகள்.)
அமைவு நகர்வு எதிர்பார்ப்பு.
அடுத்தடுத்த இரண்டு நிகழ்வுகள் இலங்கையின் கிழக்கு பகுதியை அடைந்து தென்கிழக்குபகுதி, தெற்கு பகுதி மற்றும் குமரி கடல் பகுதி வழியாக மாலத்தீவு பகுதியை நோக்கி நகரும்.
வட இந்திய நிலப்பகுதி தாழ்வு பகுதியுடன் வங்கக்கடல் தாழ்வு சுழற்சிக்கு வரும் காற்று இணைப்பைப் பெறும் என்பதால் தெற்கு ஆந்திர பிரதேசம் தெற்கு கர்நாடகா கேரளா புதுச்சேரி காரைக்கால் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்தச் சுற்றின் மழைப்பொழிவு பரவலாக கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 10 வெள்ளிக்கிழமை கடலோர மாவட்டங்களில் மேகம் சூழ்ந்து காணப்படும் ஒரு சில இடங்களில் லேசாக நனைக்கும் மழை கொடுக்கவும் பரவலாக தூறல் மழை கொடுக்க உறுதியான வாய்ப்பு தெரிகிறது.
ஜனவரி 11 சனிக்கிழமை மதியம் மாலை கடலோரம் ஒரு சில இடங்களில் தூறல் நனைக்கும் மழை கொடுக்கலாம்.
ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் தொடங்கி அனைத்து உள் மாவட்டங்களிலும் கேரளா கர்நாடகா ஆந்திர எல்லையோரம் வரை அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழிவை கொடுக்கலாம்.
ஜனவரி 13 திங்கள் கிழமை போகி பண்டிகை தினத்தன்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழைப்பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே பொழியும். ஒரு சில இடங்களில் சற்று கனமழையும் ஓரிரு இடங்களில் கன மழை பொழிவிற்கும் வாய்ப்பு இருக்கிறது. கண்டிப்பாக கர்நாடகா ஆந்திரா கேரளா எல்லையோரம் வரை அனைத்து மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு தெரிகிறது.
ஜனவரி 14 15 16 பொங்கல் மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் தினங்களில் அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழியும்.
டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களுக்கு நல்ல மழை தெரிகிறது. வடகிழக்கு வடக்கு குளிர் காற்று வட இந்திய நிலப்பகுதியை நோக்கி திசை மாறும் என்பதால் கர்நாடக ஆந்திர கேரளா எல்லையோர மாவட்டங்கள் வரை அண்டை மாநிலத்திற்கும் மழை பொழிவை கொடுக்கும் வகையில் வானிலை அமைப்பு அமையும்.
மழை இடைவெளி:
ஜனவரி 17 18 ஆகிய இரண்டு தினங்கள் நிகழ்வுகளுக்கு இடையே இடைவெளி வாய்ப்புள்ளது. இடைவெளியை பயன்படுத்தி திட்டமிட்டு அறுவடை செய்திடுக.
அடுத்த நிகழ்வு:
ஜனவரி 19 20 21 22
வழக்கமான வழித்தடத்தில் மலேசியா சிங்கப்பூர் சுமத்ரா தீவு இலங்கை வழியாக தமிழ்நாடு வரும் காற்று சுழற்சி செயலிழந்து தமிழகம் ஊடாக மேற்கு நோக்கி நகரம் வாய்ப்புள்ளது.
ஜனவரி 19 20 21 22 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களுக்கு கனமிக கன மழை வாய்ப்பு தெரிகிறது. அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கும் நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது. ஜனவரி 19 20 21 22 நிகழ்வு வடகடலோரம் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழைப்பொழிவை கொடுக்கலாம் .அது வட உள் மாவட்டங்களுக்கு எந்த அளவிற்கு முன்னேறி மழை பொழவை கொடுக்கும் என்பது ஆய்வில் உள்ளது.
மழை இடைவெளி
ஜனவரி 23 24 25 26 ஆகிய தேதிகள் மழைக்கு இடைவெளி வாய்ப்புள்ளது இந்த இடைவெளியை பயன்படுத்தி திட்டமிட்ட அறுவடை செய்திடுக.
மேற்கண்ட ஜனவரி 23 24 25 26 இடைவெளி நாள்களில் சிறு மாறுதல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. நாட்கள் நெருங்கியதும் துல்லியமான இடைவெளி நாள் அறிய முடியும்.
அதற்கு அடுத்த நிகழ்வு:
ஜனவரி இறுதி நாள்களில் மேலும் ஒரு நிகழ்வு தமிழக கடலோர மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மழை தர வாய்ப்புள்ளது. ஜனவரி இறுதி நாள்கள் நிகழ்வின் துல்லியம் அறிய அப்டேட்ஸ் பார்த்து இருக்கவும்
இப்படி பிப்ரவரி 15 வரை நிகழ்வுகளும் இடைவெளிகளும் மாறி மாறி தெரிகிறது.
இடைவெளி அறிந்து அறுவடை செய்யவும், விற்பனைக்கு வைக்க உள்ள தானியங்களை மேடான பகுதிகளில் நீர் புகாதவாறு வைத்து மூடி பாதுகாத்து விற்பனை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
வானிலை அமைப்புகள்:
வலுவான கடல் வெப்ப நீரோட்டம், தொடர்ந்து கடல் வெப்ப உயர்வு, நெகட்டிவ் மற்றும் நடுநிலை IOD க்கு சாதகம்,லா நினா அமைப்பு,MJO அமைவுகள் அனைத்தும் கோடை மழை, மற்றும் இருவேறு பருவ மழைகள் அனைத்தும் சராசரிக்க கூடுதல் அமையவே சாதகங்கள் தெரிகிறது.
கோடை மழை 2025:
இந்த ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் அவ்வப்பொழுது காற்று சுழற்சி காரணமாக லேசான மிதமான மழை பொழிவுகள் இருக்கும்.
ஏப்ரல் மே மாதங்களில் சராசரி வெயிலும் மாதத்திற்கு தலா ஒரு வலுவான நிகழ்வு மழை பொழிவை தருவதற்கு ஜாதகம் தெரிகிறது
இந்த ஆண்டு கோடையில் வெயில் அனலை விட புழுக்கம் வியர்வை கோடை மழை கூடுதல் தெரிகிறது.
தென்மேற்கு பருவமழை 2025:
இந்த ஆண்டு கோடை மழை கூடுதல் கொடுத்தாலும் அரபிக்கடல் வெப்ப உயர்வு அரபிக்கடல் வெப்ப நீரோட்டம் வலிமை காரணமாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை சராசரிக்க கூடுதலாக கொடுக்கும்.
தென்மேற்கு பருவமழை விவசாயத்துக்கு ஏற்ற மழையாக அனைத்து மாநிலங்களிலும் பொழியும் அதே வேளையில் பல மாநிலங்களில் பாதிக்கும் மழை பொழிவை கொடுக்கும். தென்மேற்கு பருவ மழை பற்றாக்குறையாக அமைய வாய்ப்பு இல்லை.
மேட்டூர் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி உள்ள காரணத்தால் அணைகள் முன்கூட்டியே திறப்பதற்கு வாய்ப்பு தெளிவாக தென்படுகிறது.
வடகிழக்கு பருவமழை 2025;
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கண்டிப்பாக வலுவான நிகழ்வுகளால் நிறைய மழை தர வாய்ப்புள்ளது. சிறு நிகழவும் வலுவான மழை தரும். குறைந்த நேரத்தில் அதிகம் மழை பொழிவும். குறிப்பிட்ட இடத்தில் குறைந்த நேரத்தில் அதிக மழை தர வாய்ப்புள்ளது. 2025 மழை பொழிவிற்கு பற்றாக்குறை இருக்க வாய்ப்பு இல்லை , சராசரிக்கு கூடுதல் வடகிழக்கு பருவமழை தெரிகிறது.
ந.செல்வகுமார்
10.1.2025 – 4.30AM
வெளியீடு.