ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை. அதிகாரப் பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும்.
நாள்: 13.12.2024
நேரம்:5.30PM
வானிலை சுருக்கம்
நிகழ்வு 1 (டிசம்பர் 11,12,13,14)
தற்போதைய நிகழ்வு டிசம்பர் 11,12 நிறைய மழை பொழிவை கொடுத்து மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட வட கடலோரம், வட உள் மாவட்டங்களில் விலகிய நிலையில்
டிசம்பர் 14 காலை டெல்டாவில் மழை விலகும்.
டிசம்பர் 14 மதியம் மதுரைக்கு வடக்கே உள்ள தென் மாவட்ட மழை விலகும்.
டிசம்பர் 14 இரவு தென் கோடி மாவட்டங்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இந்த நிகழ்வு மழை விலகும்.
டிசம்பர் 15 முழு இடைவெளி.
நிகழ்வு 2 (டிசம்பர் 16,17,18,19,20,21)
அடுத்தடுத்த நிகழ்வுகள் வரிசையில் அடுத்த நிகழ்வாக டிசம்பர் 13 தற்போது அந்தமான் கடல் பகுதிக்கு காற்று சுழற்சியாக வந்துள்ளது.
*அது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வு மண்டலம் வரை கண்டிப்பாக தீவிரம் அடையும். நெருங்கி வந்து சக்தி என்ற பெயரில் புயலாக தீவிரம் அடைந்தாலும் செயலிழந்து தான் தமிழ்நாடு கரையை கடக்க வாய்ப்புள்ளது
இது தொலைவில் இருக்கும் போதே அதாவது டிசம்பர் 16 முதல் மழை பொழிவை கொடுக்கத்தொடங்கி டிசம்பர் 17,18,19 அனைத்து மாவட்டங்களுக்கும் நிறைய மழை பொழிவை கொடுத்து *டிசம்பர் 18,19,20 இல் வட இலங்கை, பாக் நீரிணை மற்றும் டெல்டா மாவட்ட கரை நெருங்கி செயலிழந்து காற்று பாதிப்பு கொடுக்காமல் டெல்டா மாவட்டங்கள் வழியாகவோ புதுக்கோட்டை அல்லது இராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாகவோ கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இந்த நிகழ்வு டிசம்பர் 16,17,18,19,20,21 இல் நிறைய மழை பொழிவை கொடுக்க வாய்ப்பு.
நிகழ்வு 3 (டிசம்பர் 22,23,24,25)
*
இலங்கை, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு தாழ்வு சுழற்சி வருகை தந்து ஆங்காங்கே ஆங்காங்கே அனைத்து மாவட்டங்களிலும் மிதமானது முதல் சற்று கனமழை வரை கொடுக்க வாய்ப்பு.
நிகழ்வு 4 (டிசம்பர் 27,28,29,30)
இந்த நிகழ்வு புருனே, இந்தோனேஷ்யா இடைப்பட்ட பகுதியில் டிசம்பர் 13 தேதியில் உள்ளது முன்னேறி வர முடியாதபடி அங்கு காற்றின் போக்கு உள்ளது. தாமதமாக மாத இறுதியில் வர வாய்ப்புள்ளது.இதன் வருகை, அதன் தீவிரம் மற்றும் கடக்கும் இடம் பற்றி துல்லியம் அறிய ஆய்வில் உள்ளது.
ந. செல்வகுமார்,
மன்னார்குடி.
13.12.2024-5.30PM