25.12.2024-5.30PM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு:
அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும்.*
அடுத்தடுத்த நிகழ்வுகள்
நிகழ்வு-1
அமைவு நகர்வு எதிர்பார்ப்பு.
வட கடலோரம் நீடிக்கும் தாழ்வு நிகழ்வானது தெற்கு தென் மேற்காக நகர்ந்து டெல்டா கரையை நெருங்கி செயலிழந்து தமிழ்நாட்டின் வளிமண்டலம் வழியாக மேற்கு தென் மேற்கு நோக்கி பயணிக்கும்.
டிசம்பர் 25,26,27
இம்மழையின் குணம் :
வங்கக்கடல் நிகழ்வு தமிழ்நாடு கரையை நெருங்கி வருகின்ற போதிலும் நிகழ்விற்கு நிலநடுக்கோட்டு வெப்பநீராவில் கிடைக்கப்பெறவில்லை. காரணம் தென் அரைக்கோளத்தில் வலுவான நிகழ்வு உருவாகி நீராவி காற்றை வடக்கே அனுப்பாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.
பசிபிக் பெருங்கடலில் இருந்து வரும் நீராவி காற்றை சுமத்திரா தீவு அருகே உருவாகி இருக்கக்கூடிய காற்று சுழற்சி கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்நாடு கரை நெருங்கக் கூடிய நிகழ்விற்கு வெப்ப நீராவி காற்று கிடைக்கப் பெறாமல் ஒற்றை குளிர் காற்று மட்டும் கிடைக்கப்பெற்று தமிழ்நாடு கரை நெருங்கும்.
டிசம்பர் 25 புதன்
குளிர் காற்று மழை பொழிவை ஏற்படுத்த வெப்பம் தேவை என்பதால் டிசம்பர் 25 சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு திசை சாரல் குளிர் காற்றுடன் தூறல் மழை பொழிவை பகலிலும் இரவிலும் கொடுத்துக்கொண்டிருக்கும்.
டிசம்பர் 26 வியாழன் அதிகாலை
விழுப்புரம்,புதுச்சேரி,கடலூர்,ராணிப்பேட்டை,மாவட்டங்களில் அதே குளிர் தூறல் மழை தொடங்கும். அதே நேரத்தில சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மழை சற்று அதிகரித்து குளிருடன் லேசான/மிதமான மழையாக மாறி தொடர்ந்து கொண்டிருக்கும்.
டிசம்பர் 26 காலை
வெயில் வந்ததும்,படிப்படியாக வெப்பம் உயர உயர காலை முதல் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மழை தீவிரம் அடையும்.
அதே நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டங்களில் மழை தொடங்கிய ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழியும்.
டிசம்பர் 26 மதியம் மாலை இரவு
வளிமண்டல வெப்பம் பகலில் உயர்ந்ததும் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை தொடங்கி மாலைக்கு மேல் உள் மாவட்டங்களில் பரவலான நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது. டிசம்பர் 26 நள்ளிரவு, டிசம்பர் 27 அதிகாலை நேரங்களில் உள் மாவட்டங்கள்,மேற்கு மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் ஒருசில இடங்களில் கனமழை வாய்ப்பும் உள்ளது.
அதே நேரத்தில் பகலில் கடலோரம் பெய்யும் மழை மாலைக்கு மேல் தீவிரம் குறைந்து மேகமூட்ட, தூறல் குளிர் வானிலையாக மாறி விடியும் வரை தொடரும்.
டிசம்பர் 27 வெள்ளி
மீண்டும் பொழுது விடிந்ததும் வளி வெப்பம் உயர உயர படிப்படியாக பகலில் அனைத்து மாவட்டங்களுக்கும் மழை தீவிரம் அடைந்து ஆங்காங்கே ஆங்காங்கே மழை பொழிய மாலை கடலோரம் விலகும். டிசம்பர் 27 நள்ளிரவு டிசம்பர் 28 அதிகாலை மலை மாவட்டங்கள்,தென்மாவட்டங்களில் விலகும்.
ஒட்டு மொத்த சுருக்கம்.
. கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் அனைத்து உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கர்நாடக ஆந்திர எல்லையோரம் மாவட்டங்கள் அனைத்திற்கும் மிதமானது முதல் சற்று கனமழை வரை பரவலாக கொடுக்கும். ஆங்காங்கே ஆங்காங்கே கனமழை மொழிவையும் கொடுக்க வாய்ப்பு.
பெரும்பாலும் மழை பொழிவு வெயில் வந்ததும் வெப்பம் உயர்ந்ததும் பகல் நேரங்களில் இருக்கும். இரவு நேரங்களில் கடலோரம் மேகமூட்டத்துடன் குளிர் சாரல் தூறல் நிலவும், அதிகாலை நேரத்தில் கரையை ஒட்டிய கடற்பகுதியில் மழை இருக்கும். கடலோரம் காலை மதியம் வெப்பமடையும் காற்று இரவு நள்ளிரவு நேரங்களில் மேற்கு நல்ல மழை கொடுக்கும்.
டிசம்பர் 26 27 இரண்டு நாட்களும் தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு சாதகம் தெரிகிறது.
நிகழ்வு 2
தெற்கு மத்திய வங்கக் கடற் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையுடன் தென் சீன கடல் நிகழ்வும் இணைந்து டிசம்பர் 29 தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கி டிசம்பர் 30 31 ஜனவரி 1 ,2 தேதிகளில் இலங்கை கரையை நெருங்கி இலங்கை தென் தமிழ்நாடு டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் கன மழைப்பொழிவு தெரிகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் அந்த நாளில் மழை வாய்ப்பு தெரிகிறது. ஆனால் டெல்டா தென்கடல் வரும் ஒட்டுமொத்த தென் மாவட்டங்கள் நிறைய மழை பொழிவை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வு 3
ஜனவரி 8 9 10,11,12 ஆகிய தினங்களில் புதிய நிகழ்வு உருவாகி
நிகழ்வு இரண்டு வந்த வழித்தடத்தில் நிகழ்வு மூன்றும் வந்து மீண்டும் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் நிகழ்வு இரண்டு கொடுத்தது போலவே அனைத்து மாவட்டங்களுக்கும் அதே மழைப்பொழிவை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நிகழ்வுகள் ஜனவரியில் இலங்கை ஒட்டி வந்து பொங்கல் பொங்கலுக்குப் பிறகும் தூறல் சாரல் லேசான மழை பொழிவுகள் கொடுக்க வாய்ப்பு தெரிகிறது.
குறிப்பு
டிசம்பர் 26 27 மழை பொழிவை விட டிசம்பர் 30 31 ஜனவரி 1 2 நிகழ்வில் மழைப்பொழிவு கூடுதல் தெரிகிறது. அதைவிட ஜனவரி 8 9 10 11 12 தேதிகளில் வரும் வலுவான நிகழ்வு நிறைய மழைப்பொழிவை கொடுப்பதற்கு சாதகம் தெரிகிறது
ந.செல்வகுமார்
25.12.2024-5.30PM
வெளியீடு.