2023 ஜூலை 27 வியாழன் அதிகாலை ஆய்வறிக்கை:
ஆந்திர தீவிர தாழ்வு பகுதி காரணமாக ஆந்திர பிரதேசம் தெலுங்கானா , கிழக்கு மகாராஷ்ட்ரா மழை தீவிரமடையும்.
கேரளாவிலும் கர்நாடகாவிலும் சீரான தென்மேற்கு பருவமழை பெரும்பாலும் மாலை இரவில் சற்று தீவிரமடைந்து காணப்படும்.
மேற்கு தொடர்ச்சி மலை கணவாய் பகுதிகளிலும்
தென்மேற்கு பருவமழையில் பெரிய இடைவெளி அமையாது.
அரை நாள் அல்லது சில மணி நேரங்களில் மட்டுமே தென்மேற்கு பருவமழை இடைவெளி அமையும்.
பெரும்பாலும் மாலை இரவிலே சாரல் மழை மேற்கு தொடர்ச்சி மலை கணவாய் பகுதிகளுக்கு எட்டும்.
தமிழ்நாட்டிலும் ஈரக்காற்று நுழைய தொடங்கியதால் மாலை இரவு வெப்ப சலனம் மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழையுடன் இணைந்து ஆங்காங்கே ஆங்காங்கே குறைவான பரப்பில் பொழியும்.
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த மாலை இரவு லேசான மழை ஆங்காங்கே பெய்ய கூடுதல் வாய்ப்பு உள்ளது.
இந்த நிகழ்வு மீண்டும் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா கர்நாடகாவின் வட கிழக்கு பகுதிகள் மகாராஷ்டிராவில் உள்பகுதி மற்றும் கடலோரப் பகுதிகள் அதிக மழை பொழிவை கொடுக்கும்.
ஜூலை இறுதி நிகழ்வு ஒடிசாவின் வடக்கு பகுதியில் அமையலாம். அந்த ஒரு நிகழ்வு மழை பொழிவை கேரளா கர்நாடகாவில் அந்த ஓரிரு நாள்களில் மட்டும் குறைக்கலாம்.
மழை தொடரும்.
ஆகஸ்ட் 10 க்கு மேல் அக்டோபர் 20 வரை தென்மேற்கு பருவமழையும் தமிழ்நாட்டில் காற்று சுழற்சி வெப்பச்சலன மழையும் சிறப்பாக அமையும்.
மேட்டூர் மட்டம் இனி இறங்கு முகம் இருக்காது.
ஜூலை 27 முதல் கர்நாடகா நீர் கிடைக்கும் வகையில் கர்நாடகாவில் மழைப்பொழிவு அமையும்.
கர்நாடக அணைகளில் கபினி ஜூலை 26 நிரம்பி பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 26,27, 28இல் கூடுதல் உபரி நீர் 25000 கனஅடி முதல் 30,000 கனஅடி வரை திறக்க வாய்ப்பு.
KRS அணை ஆகஸ்ட் முதல் வாரத்தின் முன் பகுதியில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.
செப்டம்பர் அக்டோபர் உபரி நீர் கொடுக்கும் வகையில் மழை இருக்கும்.
தென்மேற்கு பருவமழை அக்டோபர் 20 வரை தொடர வாய்ப்பு உள்ளது.
படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை