தமிழ்நாடு வானிலை தொடங்கியது மழை வரும் நாள்கள் எங்கெங்கே?

ஏப்ரல், மே கோடை வானிலை.

கோடை மழை இடி மின்னலுடன் பெய்யும் இடத்தில் கூடுதலாகவும், அருகே குறைவாகவும், அருகில் ஒதுக்கியும் பெய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்.

*

(1) உயர் அழுத்தம் வங்கக்கடலில் வடக்கு பகுதியில் நீடிக்கிறது.

(2)தாழ்வழுத்த காற்று சுழற்சி நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடலில் இலங்கையை ஒட்டி நீடிக்கிறது.

(3)காஷ்மீர், பஞ்சாப், சண்டிகர் ஹரியான பகுதியில் மேற்கத்திய  இடையூறு தாழ்வு சுழற்சி நீடிக்கிறது.

மேற்கு மாவட்டங்களில் வெப்பம் மேலும் உயர்ந்த நிலையில் சற்று சில டிகிரி குறையும்.

கடலோர மாவட்டங்களில் இதமான வெப்பமும் மாலை இரவு குளிந்த கிழக்கு, வடகிழக்கு காற்று வீசும்.

*ஏப்ரல் 11 இரவு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மலை பகுதிகளில் மழை வாய்ப்பு.

ஏப்ரல் 12 அதிகாலை முதல் புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோர பகுதியில் ஆங்காங்கே அதிகாலை காலை ஆங்காங்கே நல்ல மழை பொழிவு தெரிகிறது

ஏப்ரல் 12 அதே நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும்.

*ஏப்ரல் 12  வடகடலோரம்  வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே நனைக்கும் மழை பெய்யும்.

ஏப்ரல் 12 இரவு கேரளா, கர்நாடகா எல்லை ஓர மாவட்டங்கள் அனைத்து தென் மற்றும் மேற்கு மாவட்டங்கள் இடிமழை பெய்யும்.

ஏப்ரல் 13 முதல்  கேரளா எல்லை ஓர மேற்கு தொடர்ச்சி மலையில்  ஆங்காங்கே ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மாலை இரவு லேசான மழை வாய்ப்பு.

ஏப்ரல் 15 முதல் மேற்கு மாவட்டங்கள், கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் மாலை இரவு ஆங்காங்கே ஆங்காங்கே இடிமழை.

ஏப்ரல் 17,18,19 மாலை இரவு கேரளா கர்நாடகா மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே இடிமழை  வாய்ப்பு.

ஏப்ரல் 12 மாலை இரவு அதிகாலை ஆங்காங்கே கொடுக்கும் மழை மேற்கு மற்றும் தென் தமிழ்நாடு,வடக்கு தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியின் மாஹே  உப்பட தென் மாநிலங்களில் சற்று கூடுதல் பரப்பில் கொடுக்கும் வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 26 முடிய சூரியனின் குத்துக்கதிர் தமிழ்நாட்டில் விழும்.

ஏப்ரல் 12 முதல் காற்று சுழற்சி, வெப்பச் சலன மழை வாய்ப்பு ஏற்பட்டு தென் கடலோரம் ஒரு சில இடங்களில் தொடங்கும் மழை ஏப்ரல் 15 க்கு பிறகு எல்லா நாள்களும் வெயில், வெப்பம், புழுக்கம், வியர்வைக்கு பின்னர் மழை வாய்ப்பு.

ஏப்ரல் இறுதி வாரத்திலும் கடும்  வெயிலுக்கு பின்னர் மாலை இரவு அதிகாலை ஆங்காங்கே மழை வாய்ப்பு.

மே 1 க்கு மேல் 15 க்குள்  வங்கக்கடலில் வலுவான நிகழ்வு உருவாகும் இது ஒடிசா, மேற்கு வங்கம் பகுதியில் கடக்கும், நெருங்கி வந்தால் தமிழ்நாட்டிற்கு தாழ்வு மழை கிடைக்கும். இல்லாவிட்டால் வெப்பச்சலன மழை  ஆலங்கட்டி மழையாகவும் காற்றுடன் மழையாகவும் ஆங்காங்கே மாலை இரவு அதிகாலை பொழியும்.

நாட்டின் அனைத்து பகுதிக்கும் இந்த ஆண்டு கோடை சராதாரிக்கும் கூடுதல் வெயில் வெப்பம் கொடுக்கும் அதே நேரத்தில் குறைவான பரப்பில் அதிக மழை பொழிந்து ஒதுக்குதல் இருந்து  நல்ல இடி மின்னல் மழை கிடைக்கும்.

தென்மேற்கு பருவமழை:

 மே இறுதியில் வெப்பச்சலன  கோடை மழை தாழ்வு அமைவுகளால் கொடுக்கும். அது தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது போல தெரியும்.

 மே 31 அல்லது ஜூன் 1,2 தேதிகளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாழ்வு அமைவுடன் தொடங்கும்.

ஜூன் 1 முதல் ஜூலை 15 முடிய பருவமழை முன்னேற்றத்தில் இருக்கும். ஜூலை 15 முடிய சீரற்ற வானிலை நிலவும், குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் மழையும் குறிப்பிட்ட இடங்களில் குறைவான மழையும் கொடுக்கும். *ஜூலை மாதம் வடக்கு கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா நல்ல மழை தெரிகிறது. கடலோரகர்நாடகா, கோவா, தெற்கு கடலோர மகாராஷ்டிரா புயல் அல்லது தாழ்வு பாதிக்கும் மழை தெரிகிறது ஜூலை இறுதிக்கு மேல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அணைகளுக்கு நீர் வரத்து கூடும்,

மேட்டூர் நிலவரம்:

ஏப்ரல் 11-  22 TMC இருப்பு உள்ளது.

ஏப்ரல் 20 இல் 20 TMC யாகவும்,

ஏப்ரல் 30இல் 18 TMC யாகவும்

மே 31 இல் 13 TMC யாகவும் கோடை மழையை கணக்கில் வைத்தாலும் 

ஜூன் 12:இல் 12 TMC யாகவும் குறையும்.

 12 நாள் பாசனத்திற்கு மட்டும் நீர் இருக்கும்.

 குடிநீர் தேவை இருக்கும்

ஜூன், ஜூலை அணைகளுக்கு பெரிய நீர் வார்த்து கொடுக்கும் வகையில் பருவ மழை இருக்கும் ஆனால் நிரப்பும் அளவிற்கு அதிகம் இருக்காது.

டெல்டா குறுவை சாகுபடி ஆற்று பாசன வாய்ப்பு குறைவு.

ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் கொண்டு மட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியும்.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல நீர்வரத்து கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *