*ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை. அதிகாரப் பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும். 18.11.2024-4AM வெளியீடு.
காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் மழை வானிலை மாறி அமையும்.
A-வானிலை அமைப்பு :
வங்கக்கடலுக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் MJO வந்தது
,நவம்பர் இறுதி வாரம் முதல் டிசம்பர் இறுதி வாரம் முடிய அடுத்தடுத்த வலுவான நிகழ்வுகளால் நிறைய மழை தரும்.
அதன் அடிப்படையில் அடுத்தடுத்த நிகழ்வு நெருங்கும் நாள்கள்
*
(1)நவம்பர் 18 குமரிக்கடல் பகுதியில் இருந்து மாலத்தீவு பகுதியை ஒட்டிய பகுதி வழியாக மேற்கு நோக்கி நகரும் காற்று சுழற்சி.
தெற்கு டெல்டாவின் வேதாரண்யம் பகுதியில் மிக கனமழையும் தெற்கு டெல்டாவில் பரவலாக கனமழையும் பெய்த நிலையில் வடகிழக்கு குளிர்காற்றும் கிழக்கு வெப்ப நீராவிக் காற்றும் வட இலங்கை, தமிழ்நாட்டின் தென் கடலோரம் இணையும் என்பதால் மழை.
நவம்பர் 18 அதிகாலை டெல்டா, தென் கடலோரம் மழை பெய்யும்.
நவம்பர் 18 மதியம் டெல்டா& தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும்.
நவம்பர் 19,20,21 கோடியக்கரை முனை, இராமேஸ்வரம் லேசான மழை
(2) நவம்பர் 22 முதல் 24 முடிய -இலங்கைக்கு தெற்கே காற்று சுழற்சி அமையும் என்பதால் .தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே லேசான, மிதமான மழை வாய்ப்பு.
(3)நவம்பர் 27 முதல் 30 முடிய -தொடர்ச்சியாக 48 மணிநேரம் இடைநில்லா கனமழை தரும் நிகழ்வு ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது FENGAL (உச்சரிப்பு Feinjal )புயலாகவோ மத்திய தமிழ்நாடு கடந்து அரபிக்கடல் போகும். நவம்பர் 26 டெல்டா தொடங்கும் மழை நவம்பர் 27 அதிகாலைக்குள் திருவள்ளூர் சென்னை முதல் இராமநாதபுரம் வரை டெல்டாவை மையமாக வைத்து தொடங்கும் மழை நவம்பர் 27, 28,30 இடைநில்லாமல் 48 மணிநேரம் தொடர்ச்சியாக பொழியும். அனைத்து மாவட்டங்களுக்கும் நிறைய மழை தரும்.
(4)டிசம்பர் 1,2,3 தாழ்வுப்பகுதி
(5)டிசம்பர் 4 முதல் 13 முடிய.-வலுவானது
(6)டிசம்பர் 13 முதல் 24 முடிய வலுவானது
(7)டிசம்பர் 26 முதல் 30 முடிய சற்று வலுவானது.
வானிலை அறிவியல் மற்றும் உழவன் Youtube இல் விரிவாக அறிக்கை பார்த்து பயன்பெறவும்.
ந. செல்வகுமார்,
மன்னார்குடி.