02.02.2023-4PM தமிழ்நாடு மாலை வானிலை ஆய்வறிக்கை
இலங்கையின் திரிகோணமலை அருகே கரை கடந்து அனுராதாபுரம் அருகே மன்னார் வளைகுடா பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ள தீவிர தாழ்வு பகுதி.
2023 பிப்ரவரி 2 அதிகாலை ஆய்வறிக்கை
வேதாரண்யம் , தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் மழை தொடரும் கனமழை.
இராமேஸ்வரத்திற்கு தெற்கே மன்னார் வளைகுடாவில் இறங்கி 24 மணி நேரம் மன்னார் வளைகுடாவிலும் அடுத்த 24 மணி நேரம் குமரி கடலிலும் நகரும் என்பதால் பிற பகுதிகளில் மழை தொடங்கும்.
தானியங்களை மூடி பாதுகாத்திடுங்கள்.
விளக்க அறிக்கை
தாழ்வு மண்டலம் 2.2.23 அதிகாலை 4 மணி நிலவரம்.நேற்று இரவு இலங்கையின் திரிகோணமலையில் கரை கடந்து தீவிர தாழ்வு பகுதியாக இலங்கையின் வடக்கு மத்திய பகுதியில் இருக்கக்கூடிய அனுராதாபுரம் அருகே நகர்ந்து கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தலைமன்னார் புத்தளம் இடையே மீண்டும் வங்க கடலின் இறங்கி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக நெருக்கமாக மன்னார்வளைகுடாவில் நகர்ந்து நாளை பிப்ரவரி 3 அதிகாலை குமரி கடலை அடையும், கன்னியாகுமரி முனைக்கு மிக நெருக்கமாக குமரி கடலில் நகர்ந்து பிப்ரவரி 4 லட்சத்தீவின் தெற்கு பகுதியை அடையும். பிறகு அதே இடத்தில் செயலிழக்கும்.
கனமழை வாய்ப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைஞாயிறு வேதாரண்யம் பகுதியில் மட்டும் கனமழை நீடித்து வந்த நிலையில் அது நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்கு பகுதியிலும்
டெல்டாவின் பிற பகுதிகளில் படிப்படியாக மழை தொடங்கி பரவும்.
படிப்படியாக மழை சற்று தீவிரமடையும் அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் பரவி பிப்ரவரி 3 இரவு வரை நீடிக்கும்.
மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைவாய்ப்பு கூடுதல் பரப்பில் தெரிகிறது. ஓரிரு இடங்களில் மிக கனமழை இருக்கலாம்.
புதுச்சேரி,தமிழ்நாட்டில் கடலூர் புதுச்சேரி, மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி விருதுநகர் தென்காசி தேனி மதுரை சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கன மழை வாய்ப்பு உள்ளது.
இம் மாவட்டங்களில் பரவலான மழைப்பொழிவு இருக்கும்.
அரியலூர் பெரம்பலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருச்சி திண்டுக்கல் நாமக்கல் கரூர் திருப்பூர் தெற்கு கோயம்புத்தூர் தெற்கு ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை இருக்கும்.
திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழைப்பொழிவு அவ்வப்பொழுது இருக்கும்.
சேலம் ஈரோடு கோயம்புத்தூர் வடக்கு திருப்பூர் வடக்கு நீலகிரி ஆங்காங்கே லேசான மழைப்பொழிவு இருக்கும்.
திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நனைக்கும் மழை ஆங்காங்கே இருக்கும்.
கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நனைக்கும் மழை தூறல் மழை இருக்கும்.
கனமழை உறுதியாக எதிர்பார்க்கும் மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதி, தென்கடலோரப் பகுதிகள், ஒட்டுமொத்த தென் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் கன மழை உறுதி.
தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு.
ராமேஸ்வரம் பகுதிக்கும், தூத்துக்குடி திருநெல்வேலி கடலோர பகுதிக்கும் மிக கனமழை வாய்ப்பு
இராமேஸ்வரத்திற்கு தெற்கு புறம் மன்னார்வளைகுடாவில் இறங்கி தெற்கு நோக்கி பயணிக்கும் என்பதால் பிப்ரவரி 1 தொடங்கும் மழை, ராமேஸ்வரம் பகுதியில் பிப்ரவரி 2 அதிகாலை முதல் மாலை வரை தொடர் கனமழை பொழிவை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதே பகுதியில் பிப்ரவரி 4 வரை மழை தொடரும்.
அதேபோல் தூத்துக்குடி கடலோரம் திருநெல்வேலி கடலோரம் மிக கனமழை சாதகம் தெரிகிறது.
கன்னியாகுமரிக்கு மிக நெருக்கமாக நகர்ந்து செல்லும் என்பதால் பிப்ரவரி 2 3 4 தேதிகளில் மழை கொடுக்கும் நிலையில் பிப்ரவரி 3 4 தேதிகளில் திருநெல்வேலி கன்னியாகுமரி இடைப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான மாஞ்சோலை, ஊத்து நாலுமுக்கு போன்ற பகுதிகளில் மிக கனமழைவாய்ப்பு தெரிகிறது.
அதேபோல் குற்றாலம் செங்கோட்டை பாபநாசம் மணிமுத்தாறு பேச்சுப்பறை பெருஞ்சாணி சிற்றாறு போன்ற அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மிக கனமழைவாய்ப்பு தெரிகிறது.
அறுவடை விவசாயிகளுக்கு ஆலோசனை
வானிலை அறிக்கை அறிந்து பலர் முன்னெச்சரிக்கையாக முதிர்ந்த நெல் தானியங்களை அறுவடை செய்து விட்டார்கள்.
பிப்ரவரி 4 வரை டெல்டா மாவட்டங்கள் ,தென் மாவட்டங்களில் அறுவடை செய்வது கடினம் மழை பொழிவு இருக்கும்.
அறுவடை செய்வது எப்போது?
பிப்ரவரி 4 க்குப் பிறகு மழை விலகும் என்பதால் பிப்ரவரி 4 க்கு பிறகு காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம். அச்சம், பீதி வேண்டாம்.
இலங்கைக்கான வானிலை அறிக்கை
இலங்கை தரையில் நகர்ந்து கொண்டுள்ள தீவிர தாழ்வு பகுதி மன்னார் வளைகுடாவில் இறங்கி குமரிக்கடல் பகுதியை நோக்கி நகரும்.
இலங்கைக்கு எதிர்பார்க்கப்பட்ட பெரிய பாதிக்கும் மழை அச்சம் வேண்டாம்.
வட இலங்கையில் கனமிக கனமழையும் மத்திய இலங்கையில் கனமழையும் தென் இலங்கையில் மிதமான சற்று கனமழையும் இருக்கும். அறுவடை நேரத்தில் இந்த மழை உங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கலாம். ஆங்காங்கே அறுவடைக்கு பாதிப்பையும் கொடுக்கலாம். இம்மழை பிப்ரவரி 4ல் விலகும். பிறகு அறுவடை செய்யலாம்.
பிப்ரவரி 8,9 இல் குழப்பும் மேகமூட்ட வானிலை மற்றும் பிப்ரவரி மார்ச் வானிலை அறிக்கை.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடங்கிய அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்ச்சியாக பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் சரியாக வெப்ப நீராவி, குளிர் நீராவி, வெப்பம், குளிர், இந்த செட்டிங் சரியாக செட்டாகும் பொழுது அவ்வப்பொழுது மழை கொடுக்கும்.
அதன் அடிப்படையில் பிப்ரவரி 8 ,9 தேதியில் மேலும் ஒரு காற்று சுழற்சி இலங்கை நெருங்கும் என்பதால் தூறல் மழை குழப்பமான வானிலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் முன் எச்சரிக்கைக்கு மட்டுமே.
பிப்ரவரி 5 முதல் தொடங்கும் லேசான மிதமான வெயில் காரணமாக காய்ந்த பிறகு அறுவடை செய்து மீட்டெடுக்க திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஏப்ரல் மே கோடை மழை
ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.
தென்மேற்கு பருவமழை 2023
தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.
பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.
பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.
வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.
வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.
குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.
ந. செல்வகுமார்.
2..2.2023-4AM வெளியீடு.