ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை. அதிகாரப் பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும். 7.11.2024 வெளியீடு. காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் மழை வானிலை மாறி அமையும்.
A-வானிலை அமைப்பு :
(1)தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு இலங்கையை ஒட்டிய பகுதியில் காற்று சுழற்சி நிலை.
(2)அந்தமான் பகுதிக்கு புதிய காற்று சுழற்சியும் வந்துள்ளது.
B- வானிலை எதிர்பார்ப்பு :
தென்மேற்கு வங்கக்கடல் காற்றுசுழற்சி நவம்பர் 8 அதிகாலை டெல்டா கடலோரம், தென்கடலோரம் மழை தொடங்கி, மதியம், மாலை தென் மாவட்டங்களில் சற்று பரவலான மழையும், ஆங்காங்கே கனமழையும், தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிககனமழை வாய்ப்புள்ளது.
வட கடலோரம், வட உள் மாவட்டங்களில் நவம்பர் 8 பெரிதாக மழை இருக்காது.
தென்மேற்கு வங்கக்கடல் காற்று சுழற்சி அந்தமான் காற்று சுழற்சியுடன் இணைய விலகி செல்லும் என்பதால் நவம்பர் 9,10 சனி, ஞாயிறு தமிழ்நாட்டில் பெரிதாக மழை இருக்காது.
நவம்பர் 11 முதல் நவம்பர் 17 முடிய மீண்டும் தமிழநாடு நெருங்கி கடந்து அரபிக்கடல் செல்லும் என்பதால் நவம்பர் 11 முதல் மழை படிப்படியாக அதிகரித்து நவம்பர் 13,14,15,16,17 பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்.
வங்கக்கடலுக்கு தெற்கே MJO வரும் என்பதால் நவம்பர் இறுதி வாரம் மற்றும் டிசம்பர் வலுவான நிகழ்வுகளால் நிறைய மழை தரும்.
வானிலை அறிவியல் மற்றும் உழவன் Youtube இல் விரிவாக அறிக்கை பார்த்து பயன்பெறவும்.
ந. செல்வகுமார்
7.11.2024