மதியம் முதல்மழை தீவிரம்.மே 23 முடியதீவிர மழை.

19.5.2024-4AM வானிலை தகவல் தொகுப்பு:

2024 கோடை மழையும் பருவமழையும் ந. செல்வகுமார் ஆய்வறிக்கை.

தலைப்பு செய்தியாக நேற்றைய அறிக்கையில் சிறு மாறுதல் செய்யப்பபோட்டுள்ள இடம் பொருள்.
(1)கோடை மழை கோடை மழை பதிவில் வரலாற்றை திருத்தி புதிய வரலாறு படைக்கும்.
(2)அணைகள் நீர் வரத்து கூடும்.
(3) மே 19 இலங்கை அருகே நீடிக்கும் காற்று சுழற்சி மே 19 ஞாயிறு மதியம் முதல் தமிழ்நாடு அருகே நெருங்கி, தமிழ்நாடு கரையோரமாக படிப்படியாக தீவிரம் அடைந்து மே 24 இல் விலகி REMAL புயலாகி விலகி சென்று மே 26,27 தேதிகளில் வடக்கு ஆந்திரா அல்லது ஒடிசா கரையை கடக்கும்.

(4)இந்த நிகழ்வு தமிழ்நாடு அருகே நீடித்து மேற்கு, தென் மேற்கு, வட மேற்கு காற்றை ஈர்த்து கேரளாவிற்கு வெள்ள பாதிப்பை கொடுக்கலாம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கன, மிக கன, அதி கன, அதீத மழை பொழிவை ஆங்காங்கே கொடுக்கலாம்.இது டெல்டா மற்றும் வட கடலோரம் மிகவும் நெருங்கினால் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களுக்கு நிறைய மழை தரலாம்.கன்னியாகுமரி மாவட்ட அணைகளை நிரப்பலாம்.அப்போதும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும்நல்ல மழை பொழியும்.
(4)Remal புயலால் ஈரப்பதம் போகாது, மேற்கு வட மேற்கு காற்றால் நிறைய மழை, மிகவும் குளிர்ந்த சூழல் நிலவும்.
(5)மே இறுதியிலும் ஒரு காற்று சுழற்சி அமைந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரை கோடை கனமழை தொடரும். இதனால் கோடை அனல், கோடை வெப்பம் விலகி கோடையே நிறைவடைந்தது எனலாம்.

(6)கேரளா மற்றும் வேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு பொதுமக்கள் தங்கள் பயணங்களை தவிர்க்கவும்.

மே 27 முதல் 31 முடிய எதிர்பார்ப்பு.

மே இறுதியில் தாழ்வு அமைவுகளால் கொடுக்கும். அது தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது போல தெரியும்.
மே 31 அல்லது ஜூன் 1,2 தேதிகளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாழ்வு அமைவுடன் தொடங்கும்.

தென்மேற்கு பருவமழை 2024

ஜூன் 1, 2 தேதிகளில் அரபிக்கடல் தாழ்வு பகுதியால் பருவ மழை தொடங்கும்.
அது ASNA புயலாகி மகாராஷ்டிரா அல்லது குஜராத் கடக்கும்.
அடுத்து ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரம் DANA என்ற புயல் அரபிக்கடலில் உருவாகி கோவா, மகாராஷ்டிரா,கடக்க வாய்ப்பு.

ஜூன் 1 முதல் ஜூலை 15 முடிய பருவமழை முன்னேற்றத்தில் இருக்கும். ஜூலை 15 முடிய சீரற்ற வானிலை நிலவும், புயல் நெருங்கும் குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் மழையும் குறிப்பிட்ட இடங்களில் குறைவான மழையும் கொடுக்கும். *ஜூலை மாதம் வடக்கு கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா நல்ல மழை தெரிகிறது. கடலோர கர்நாடகா, கோவா, தெற்கு கடலோர மகாராஷ்டிரா புயல் அல்லது தாழ்வு பாதிக்கும் மழை தெரிகிறது ஜூலை இறுதிக்கு மேல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அணைகளுக்கு நீர் வரத்து கூடும்,

தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் காற்று சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் சராசரிக்கும் கூடுதல் மழை கிடைக்கும்.
*
மேட்டூர் நிலவரம்:

மே 19 இல் 17 TMC யாகவும்
*மே 24 வரை பெய்யும் மழையால் தொடக்கத்தில் வினாடிக்கு 1000 கன அடியாக இருக்கும் நீர் வரத்து மே 19,20,21,22 இல் 10,000 கன அடிவரை வரலாம். இதனால் குடி நீர் திறப்பு போக 5TMC கிடைக்கலாம். மே 24 இல் 20 TMC முதல் 22 TMC வரை இருப்பை அடைந்து மே 31 இல் 20 TMC யாகவும் கோடை மழையை கணக்கில் வைத்தாலும்
உயர்ந்தலும் ஜூன் 12:இல் 22 TMC யாக இருக்கும்.
15 நாள் பாசனத்திற்கு மட்டும் நீர் இருக்கும்.
குடிநீர் தேவை இருக்கும்.
ஜூன், ஜூலை அணைகளுக்கு நீர் வார்த்து கொடுக்கும் வகையில் பருவ மழை இருக்கும் ஆனால் நிரப்பும் அளவிற்கு அதிகம் இருக்காது.

டெல்டா குறுவை சாகுபடி ஆற்று பாசன வாய்ப்பு குறைவு.
ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் கொண்டு மட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியும்.
ஜூன், ஜூலை மாதங்களில் ஆறுகளில் பாசனத்திற்கு நீர் கிடைக்காவிட்டாலும் ஆங்காங்கே மழை இருக்கும்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல நீர்வரத்து கொடுக்கும்.

இந்தியப் பெருங்கடல் IOD செப்டம்பர் முதல் நடுநிலையில் இருந்து நெகடிவ் IOD அடையும்.

பசிபிக்கடல் எல்-நினோ செப்டம்பர் மாத லா-நினா அமைப்பை அடையும்.

ஆக பசிபிக் கடலின் ஆசிய நாடுகளின் பகுதி வெப்பம் அதிகரிக்கும்,வங்கக்கடல் , அதற்கு தெற்கே உள்ள நில நடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் வெப்பம் உயர்ந்து இருக்கும் என்பதால் 2024 செப்டம்பர் முதல் டிசம்பர் முடிய தென் சீனா கடல் நிகழ்வு வங்கக்கடலுக்கு வலுவாக வரும்.

வடகிழக்கு பருவமழை.
அக் 20,21,22 இல் தொடங்கும்.
இக்காலத்தில் வலுவான நிகழ்வுகள் வலுவான மழை தரும் வடகிழக்கு பருவமழை சராசரிக்கும் கூடுதல் தரும் என்றே தெரிகிறது.

ந. செல்வகுமார்
19.5.2024-4AM வெளியீடு.

2 comments

  1. Vada mavattam mazhai illa sir veppam erukudhu vada mavattam thaniyaga vanilai podunga.southwest monsoon and northeast monsoon pathi podunga. Southwest monsoon vada mavattathala evlo mazhi pozhiyum solluga south district vita north district athigamai mazhai pozhiyuma.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *