டிச 11 to 3020 நாள்களில்15 நாள்கள் RED ALERT வாய்ப்பு.

ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை. அதிகாரப் பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும். 9.12.2024 -8.30AM வெளியீடு.

பொருள்
டிசம்பர் 11 முதல் டிசம்பர் 31 முடிய அடுத்தடுத்த நான்கு நிகழ்வுகள் வட இலங்கை & டெல்டா மாவட்டங்கள் அருகே அமைந்து அரபிக்கடல் செல்லும் என்பதால் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு மீண்டும் மிதமான வெள்ளம் பாதிக்கவும், இராமநாதபுரம் முதல் கடலூர் வரை டெல்டாவை மையமாக வைத்து அடுத்தடுத்த நான்கு நிகழ்வுகள் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர்,பெரம்பலூர் திருச்சி ஆகிய மாவட்டங்கள் வெள்ளம் பாதிக்கும் மழையை கொடுக்கும் என்று தெரிகிறது. ஏரி, குளங்கள் நிரம்பாத மழை பெய்யாத தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களுக்கும் நிறைய நிறைய மழை பொழியும் என்பதை நினைவில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கையை பதட்டம், அச்சம் இன்றி நிதானமாக எடுத்திருக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.


காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் அதீத மழை பகுதிகள் மாறி மாறி அமையும்.

வானிலை அமைப்பு :
நிகழ்வு 1 (டிசம்பர் 11,12,13,14 )


வங்கக்கடலின் தெற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி முதல் கட்டமாக மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து பின்னர் மேற்கு திசை நோக்கி நகர்ந்து வடஇலங்கை மற்றும் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் ஒட்டி வந்து அமையும்.
டெல்டாவை நெருங்கி மண்டலமாக தீவிரமடைந்தால் தென் மாவட்டங்கள் வழி அரபிக்கடல் போகும்.
நன்கு அமைந்த தாழ்வு பகுதியாக தொட்டால் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி கரையோரம் வழி அரபிக்கடல் போகும்.
பெரும்பாலும் அடுத்தடுத்த நான்கு நிகழ்வுகளும் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஊடாக பயணித்து அரபிக்கடல் செல்ல அதிக வாய்ப்பாக தெரிகிறது.

டிசம்பர் 11,12,13,14 மழை எதிர்பார்ப்பு :

*டிசம்பர் 10 செவ்வாய் நள்ளிரவு டெல்டா கடலோரம் தொடங்கும் மழை டிசம்பர் 11 அதிகாலை காலை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி,கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பாரவலாக பெய்யத்தொடங்கி படிப்படியாக கன, மிககன, அதிகன மழையாக பெய்யும்.அன்றே காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உட்பட வட உள்மாவட்டங்களுக்கும் கன மழை பொழிய வாய்ப்பு.

டிசம்பர் 12 வியாழன் ஒட்டு மொத்த டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் தொடர் கன மழை பொழிய வாய்ப்பு.
டிசம்பர் 13,14 டெல்டா & தென் கடலோர மாவட்டங்களில் கன மழை பொழியும். அதே நாளில் உள் மாவட்டங்களுக்கும், தென் உள் மாவட்டங்களுக்கும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பொழியும்.

நிகழ்வு 2 (டிசம்பர் 16,17,18,19,20)

தென் சீனக்கடலில் இருந்து வரும் நிகழ்வு டிசம்பர 14,15 தேதிகளில் வங்கக்கடலில் தாழ்வு மண்டலம் வரை தீவிரம் அடைந்து டிசம்பர் 16 தேதியில் ஆழ்ந்த தாழ்வு மண்டலம் வரை தீவிரமடைந்து டிசம்பர் 17 இல் டெல்டா மாவட்டங்கள் நெருங்கி டிசம்பர் 18 டெல்டா கரையை கடந்து டிசம்பர் 20 முடிய அனைத்து மாவட்டங்களுக்கும் மிக கனமழையும் 75 சதவிகித மாவட்டங்களில் அதீத மழை வாய்ப்பும் தெரிகிறது.

டிசம்பர் 16,17,18,19,20 ஆகிய நாள்களில் அனைத்து மாவட்டங்களுக்கும்
மிக கனமழையும் 75 சதவிகித மாவட்டங்களில் அதிக மழை தெரிகிறது. பல்வேறு மாவட்டங்கள் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள்
பாதிக்கும் மழை தெரிகிறது. முன்னெச்சரிக்கை தேவை.

நிகழ்வு 3 (டிசம்பர் 21,22,23,24 )

*தென் சீனக்கடல் நிகழ்வு சுமத்ரா தீவு அருகே தாழ்வு பகுதியாக வந்து
*வேகமாக தீவிரம் அடைந்து காற்று பாதிப்பு இல்லாத சாதாரண புயலாகி வட இலங்கை, டெல்டாவிற்கு தெற்கே பாக்ஜலசந்தி கடந்து மேற்கு நோக்கி சென்று அரபிக்கடல் செல்லும்.அதிக மழை பாதிப்பை டெல்டா தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களுக்கு தரும்.

நிகழ்வு 4 (டிசம்பர் 26,27,28,29,30)

மேலும் ஒரு நிகழ்வு இலங்கை கடந்து மன்னார் வளைகுடா வந்து அனைத்து மாவட்டங்களிலும் கன மழை தந்து மேலும் சில மாவட்டங்களில் பாதிக்கும்.

குறிப்பு
டிசம்பர் 11 முதல் டிசம்பர் 31 முடிய அடுத்தடுத்த நான்கு நிகழ்வுகள் வட இலங்கை & டெல்டா மாவட்டங்கள் அருகே அமைந்து அரபிக்கடல் செல்லும் என்பதால் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு மீண்டும் பாதிக்கும் மழை தெரிகிறது. ஏரி, குளங்கள் நிரம்பாத மழை பெய்யாத மாவட்டங்களுக்கும் நிறைய நிறைய மழை பொழியும் என்பதை நினைவில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கையை பதட்டம், அச்சம் இன்றி நிதானமாக எடுத்திருக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.

ந. செல்வகுமார்,
மன்னார்குடி.
9.12.2024-8.30AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *