ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை. அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும்.
நாள்: 11.12.2024
நேரம்: 8.30 AM
வானிலை சுருக்கம்
டிசம்பர் 11 முதல் டிசம்பர் 31 முடிய அடுத்தடுத்த 5 நிகழ்வுகள் இலங்கை & தமிழ்நாடு அருகே வந்து பிறகு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வழியாக அரபிக்கடல் செல்லும் என்பதால் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் டிசம்பர் 31 வரை பெரும்பாலான நாள்கள் கன மழை வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதன்படி ஐந்தில் முதல் நிகழ்வு டிசம்பர் 11 புதன் இலங்கையை நெருங்கிகொண்டுள்ளது.
உச்சபட்ச எச்சரிக்கை.
இதன் காரணமாக இன்று டிசம்பர் 11 காலை நாகப்பட்டினம், திருவாரூர்,தஞ்சாவூர்,மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மிதமான மழை பொழிதொடங்கியுள்ளது.
அதே நேரத்தில் திருவள்ளூர் , சென்னை, செங்கல்பட்டு ,விழுப்புரம் , புதுச்சேரி உள்ளிட மாவட்ட கடலோரம் மிதமான மழை பொழியும்.
அது டிச 11 மாலை முன்னிரவு வட இலங்கை முல்லைத்தீவு அருகே வரும் பிறகு நள்ளிரவு கோடியக்கரை -யாழ்ப்பாணம் இடைப்பட்ட பாக்நீரிணைப்பு பகுதிக்கு வந்து டிசம்பர் 12 நாள்முழுவதும் டெல்டா மாவட்டங்களுக்கு தெற்கேயும் புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிழக்கேயும் நீடிக்கும் .
டிசம்பர் 11 இரவு முதல் டிசம்பர் 12 இரவு வரை அனைத்து மாவட்டங்களுக்கும் கர்நாடகா , கேரளா எல்லையோரம் வரையும் பரவலான மிதமான மழை முதல் கனமழை வரை பொழியும்.
குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர்,கடலூர் ,புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை,திண்டுக்கல், தேனி,திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,சேலம், கரூர், திருப்பூர், ஈரோடு கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை முதல் தொடர் கனமழை வரை கொடுக்க வாய்ப்பு.அவ்வப்போது ஆங்காங்கே மிக கனமழை பொழிவும், ஒரு சில இடங்களில் அதி கனமழை பொழிவையும், மாவட்டத்திற்கு தலா ஓரிரு இடங்களில் அதீத மழை பொழிவையும் கொடுக்க வாய்ப்பு.
அதிலும் இராமநாதபுரம் முதல் கடலூர் வரை டெல்டாவை மையமாக வைத்து அதாவது கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் , நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள் மாவட்ட மழை நீர் ஆற்றில் கூடுதலாக வரும் வாய்ப்புள்ளது. மேற்கண்ட மாவட்டங்களிலும் அதீத மழை பொழிவு இருக்கும் என்பதாலும் கடலூர் முதல் இராமநாதபுரம் வரை கடை மடை பகுதிகளுக்கு வெள்ள பாதிப்பை கொடுக்க வாய்ப்பு தெரிகிறது. எனவே தேவையான முன்னெச்சரிக்கையை பதட்டம், அச்சம் இன்றி நிதானமாக எடுத்திருக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்
ஏரி, குளங்கள் நிரம்பாத மழை பெய்யாத தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கும் அதாவது விருதுநகர்,மதுரை, தேனி,திண்டுக்கல், கரூர், நாமக்கல் , சேலம்,திருப்பூர், ஈரோடு,கோயம்புத்தூர், நீலகிரி,ஆகிய மாவட்டங்களில் நிறைய நிறைய மழை பொழியும் என்பதை நினைவில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கையை பதட்டம், அச்சம் இன்றி நிதானமாக எடுத்திருக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்
கிருஷ்ணகிரி,தர்மபுரி,திருப்பத்தூர், வேலூர் , ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம்,சென்னை ,திருவள்ளூர்,
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கும்
மிதமான மழை முதல் கனமழை வரை பொழியும்.
ஏற்கெனவே வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மீண்டும் பாதிக்காத அளவிற்கு அளவான கனமழை பொழியும். அச்சம் வேண்டாம்.
டிசம்பர்13 14 தேதிகளில் மேற்கு தொடர்சசி மலை மாவட்டங்கள் கேரளா பகுதி வழி அரபிக்கடல் சென்று கொண்டிருக்கும் என்பதால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களுக்கும் கனமழை பொழியும்.
காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் அதீத மழை பகுதிகள் மாறி மாறி அமையும்.
டிசம்பர் 15 இல் இந்த நிகழ்வு அரபிக்கடல் சென்று விலகி செல்லும் என்பதால் டிசம்பர் 15 தமிழ்நாட்டில் மழை வாய்ப்பில்லை.
அடுத்த நிகழ்வு டிசம்பர் 16 முதல் மழை தொடங்க டிசம்பர் 15இல் நெருங்கிக் கொண்டிருக்கும்.
ந. செல்வகுமார்
11.12.2024-8.30AM
வெளியீடு.