பருவமழை தமிழ்நாட்டில் மாலை இரவு இடிமழை எங்கே? எப்படி?

2023 ஜூன் 13 செவ்வாய் அதிகாலை ஆய்வறிக்கை

அதிதிவிர பிப்பர்ஜாய் புயல் மிக மெல்ல நகர்கிறது.

இது குஜராத்தின் கரை கடக்கும் இடத்திற்கு தென் மேற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்த 280 கிமீ தொலைவை மூன்று நாள்கள் நகர்ந்து
ஜூன் 15 குஜராத் மாநிலம் துவாரகா வடக்கே ஹட்சி வளைகுடா வழியாக கடந்து ஜூன் 16 குஜராத், ஜூன் 17 ராஜஸ்தான், ஜூன் 18 பாகிஸ்தான் அடையும்.

150 கிலோமீட்டருக்கு குறையாத வேகத்தில் அதீத கனமழையை கொடுத்துக்கொண்டு மெல்ல இராஜஸ்தான் நோக்கி நகரும் என்பதால் குஜராத் இராஜஸ்தான் கடும் காற்று வெள்ள பாதிப்பு ஜூன் 15,16,17,18 இல் சந்திக்கும்.

புயலானது குஜராத் பகுதியை நெருங்கி விலகி சென்று இருப்பதால் தெற்கு அரபிக் கடல் காற்று கேரளாவிலே சற்று அதிகரிக்கும் இதன் காரணமாக கேரளாவில் இனி லேசானது முதல் மிதமான மழையாக தொடங்கி பொழியும்.
இதன் தாக்கம் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் சாரல் வழியாக இருக்கும்.

கணவாய் பகுதிகளில் மேகமூட்டம் தூறல் இருக்கும்.
ஜூன் 13 14 15,16,17,18 தேதிகளில் காற்று பகுதிகள் தவிர்த்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே மாலை இரவு மழை இருக்கும்.

ஜூன் 18க்கு மேல் காற்று சுழற்சி வங்கக் கடலில் உருவாகும் என்பதால் மெல்ல நகரும் காற்று கிழக்கு நோக்கி வந்து
வெப்ப சலன இடிமழை பரப்பில் கூடும்.

ஜூன் இறுதி வாரத்தில் தென்மேற்கு பருவமழையை தீவிரப்படுத்தும் வங்க கடல் நிகழ்வு உருவாகும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வெப்ப சலன மழையும் தொடரும்.

ஜூன் இறுதியில் காற்று போதிக்கும் மழை வாய்ப்பு தெரிகிறது.
ஜூலை 15 வரை சீரான மிதமான சற்று கனமான தென்மேற்கு பருவமடைக்கு மட்டுமே வாய்ப்பு.

டெல்டா உள் பகுதி உட்பட ஒதுக்கி ஒதுக்கி நல்ல மழை கிடைக்கும்.ஜூன் 13 முதல் மாலை இரவில் வட கடலோரம் ஆங்காங்கே கூடுதல் இடங்களில் நல்லமழை காற்றுடன் பொழியும்.ஜூன் 17 முடிய வெப்பம் உயரும் ஜூன் 18 முதல் வெப்பம் குறையும்.

கிழக்கு கடற்காற்று முற்பகலில் நுழையாமல்
வெப்பம் உயர செய்கிறது.

மேற்கு காற்றும் வறண்ட காற்றாக
வருவதால்
வங்கக் கடலோர மாவட்டங்கள் உட்பட கடும் வெப்பம், புழுக்கம் நிலவும்.

C’-F’
38-100.4
39-102.2
40-104
41-105.8

அனைத்து மாவட்டங்களிலும் 100’F டிகிரிக்கு மேல் வெப்பம் உயர்ந்திருக்கும்.

மேற்கு மாவட்டங்களிலும் கேரளா கர்நாடகா விலும் வெப்பம் உயரும்.அங்கும் 98’F க்கு மேல் வெப்பம் உயரும்.

பப்பர்ஜாய் புயல் செயலிழந்து , வங்கக்கடல் நிகழ்வு நோக்கி அரபிக் கடல் நீராவி காற்று கேரள வழியாக மேற்கு தொடர்ச்சி மலை தமிழ்நாடு வழியாக வங்கக் கடலுக்கு ஜூன் 17க்கு மேல் திரும்பும் என்பதால் ஜூன் 18 க்கு மேல் வெப்பம் தணியும்.

ஜூன் 17 வரை இதே வெப்பம் தொடர வாய்ப்பு அதிகம் உள்ளது.
காற்றுப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் வறண்ட வானிலையும் உண்டு வானிலை மாறி மழையும் உண்டு என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் மாறும் எல்லாம் கலந்து இருக்கும். பப்பர் ஜாய் புயல் தற்பொழுது உங்களை குழப்பத்தில் தள்ளி இருக்கிறது. படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை.

எல் நினோ அச்சம் வேண்டாம்
பசுபிக் பெருங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவான எல் நினோவை உருவாக்க சாதக சூழலை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் என்று பெருங்கடலில் வலுவான எல் நினோ உருவானாலும், வங்கக்கடல் வெப்பம் அரபிக்கடல் வெப்பம் நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் வெப்பம் 30 டிகிரி3 செல்சியஸ் , 31 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் உயர்ந்து காணப்படுகிறது. எல் நினோ கொடுக்கும் பாதிப்பை சரி செய்யும் வகையில் வடக்கு இந்திய பெருங்கடல் வெப்பம் சாதகமாக இருக்கிறது.எல்-நினோ கவலை வேண்டாம்.

தற்பொழுது வங்கக் கடலில் உருவாகி இருக்கக்கூடிய நிகழ்வு வலுவான மேற்கு காற்ற இருப்பதால் ஜூன் இறுதி வரை பாலக்காடு கணவாய் ஆரியங்காவு கணவாய் ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக நுழையும் காற்று வலுவாக இருக்கும்.

ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பெரும்பாலான நாட்கள் காற்றின் வேகம் குறைந்து இருக்கும் ஒரு சில நாட்கள் அதிகரித்து இருந்தாலும் குறைந்திருக்கும் நாட்களில் பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

தற்பொழுது வீசும் தென்மேற்கு வறண்ட காற்று மழை பொழிவை தடுக்கிறது இது உங்களுக்கு குழப்பத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துகிறது. இது போல இந்த ஆண்டு இருக்கும் என்று உங்களை கற்பனையில் ஆழ்த்துகிறது.

நாம் அறிவித்தது போல ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபரில் தென்னிந்தியாவிற்கு சிறப்பான மழை இருக்கிறது புரிந்து பொறுமையுடன் இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.

தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.

நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.

நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
13.6.2023-4AM வெளியீடு

chennai weather news tamil, chennai weather today live news in tamil, indraya vaanilai arikkai selvakumar, latest tamil weather news, live tamil weather news, selvakumar vaanilai, selvakumar vaanilai arikkai, selvakumar vaanilai arikkai app, selvakumar vaanilai arikkai latest, selvakumar vaanilai arikkai today, selvakumar vaanilai arikkai today live, selvakumar vaanilai arikkai today news, selvakumar weather, Selvakumar weather news, Selvakumar weather report tamil latest news, sri lanka weather news in tamil, tamil nadu weather news, tamil nadu weather news live today, Tamil weather news, tamil weather news in chennai, tamil weather news live, tamil weather news today, tamil weather newstoday tamil weather news, tamil weather report, tamilnadu weather news, tamilnadu weather news today, today selvakumar vaanilai arikkai, today weather news in tamil, today weather report tamil, United States weather news, vaanilai arikkai selvakumar, weather in chennai tamil news, weather news in tami, weather news today tamil, world weather news,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *