தீவிரமடையும் தீவிரத்தாழ்வு.பருவமழை தீவிரம்.இன்றும் வரும் நாள்களும் எப்படி?

2023 ஜூலை 25 செவ்வாய்அதிகாலை ஆய்வறிக்கை


ஆந்திரப் பகுதியில் உருவான தாழ்வு பகுதி இன்று அதிகாலை நன்கமைந்த பகுதியாக தீவிரமடைந்தது இது இன்று மாலை இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் நாளை ஜூலை 26 ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை தீவிரமடையும்.

இதன் காரணமாக ஆந்திர பிரதேசம் தெலுங்கானா கர்நாடகா வடக்கு கேரளா மழை தீவிரமடையும்.

ஜூலை 27 வரை
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கர்நாடக எல்லையோரம் மாவட்டங்கள் ஆந்திர எல்லையோரம் மாவட்டங்கள் கணவாய் பகுதிகள் நல்ல மழை பொழிவு கிடைக்கும்.

தென்மேற்கு பருவமழை ஆந்திர பிரதேசத்தின் வடக்கு பகுதி, ஒட்டுமொத்த தெலுங்கானா, ஒடிசா,சட்டீஸ்கர், மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்களை மையமாக வைத்து தாழ்வு பகுதி கனமழை பொழிவு வரையும் கடலோர பகுதிகள் கேரளாவின் கடலோரப் பகுதிகள் தென்மேற்கு பருவமழை சற்று வலுப்பெறும்.


தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கணவாய் பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழை சாரல் மழையாக பொழியும்.

இனிமேல் தென்மேற்கு பருவமழையில் பெரிய இடைவெளி அமையாது.
அரை நாள் அல்லது சில மணி நேரங்களில் மட்டுமே தென்மேற்கு பருவமழை இடைவெளி அமையும்.

தமிழ்நாட்டிலும்
ஈரக்காற்று நுழைய தொடங்கியதால் மாலை இரவு வெப்ப சலனம் மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழையுடன் இணைந்து ஆங்காங்கே பொழிகிறது.

விடிந்தும் வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி புதுச்சேரி கடலூர் மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு உள்ளது.

இந்த நிகழ்வு மீண்டும் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா கர்நாடகாவின் வட கிழக்கு பகுதிகள் மகாராஷ்டிராவில் உள்பகுதி மற்றும் கடலோரப் பகுதிகள் அதிக மழை பொழிவை கொடுக்கும்.

அந்த சுற்று கூடுதல் தென்மேற்கு பருவமழையை கேரளா கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கும் கொடுக்கும்.

ஜூலை இறுதி நிகழ்வு ஒடிசாவின் வடக்கு பகுதியில் அமையலாம். அந்த ஒரு நிகழ்வு மழை பொழிவை கேரளா கர்நாடகாவில் அந்த ஓரிரு நாள்களில் மட்டும் குறைக்கலாம்.
மழை தொடரும்.

*ஆகஸ்ட் 15 க்கு மேல் அக்டோபர் 20 வரை தெற்கு பருவமழையும் தமிழ்நாட்டில் காற்று சுழற்சி வெப்பச்சலன மழையும் சிறப்பாக அமையும்.

மேட்டூர் மட்டம் இறங்கு முகத்தில் இருந்தாலும் ஜூலை 26 முதல் கர்நாடகா நீர் கிடைக்கும் வகையில் கர்நாடகாவில் மழைப்பொழிவு அமையும்.

கர்நாடக அணைகளில் கபினி ஜூலை 26 ககுள் நிரம்பும். பாதுகாப்பு கருதி ஆகஸ்ட் 25 இல் இருந்தது கூடுதல் உபரி நீர் திறக்க வாய்ப்பு.

KRS அணை ஆகஸ்ட் முதல் வாரத்தின் பின் பகுதியில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

செப்டம்பர் அக்டோபர் உபரி நீர் கொடுக்கும் வகையில் மழை இருக்கும்.

தென்மேற்கு பருவமழை அக்டோபர் 20 வரை தொடர வாய்ப்பு உள்ளது.

படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *