மூன்று நிகழ்வுகள்டிச 25,26,27டிச 30,31ஜன1, 2 ஜன 7,8,9,10மழை எங்கே?எப்படி?

22.12.2024-8.30AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு:

அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும்.*

அடுத்தடுத்த நிகழ்வுகள் வரிசையில்

நிகழ்வு-1

டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 முடிய

வங்கக் கடலில் உருவான தாழ்வுப்பகுதி கடந்த டிசம்பர் 17 18 தேதிகளில் தமிழ்நாட்டில் மிக கனமழை பொழிவை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடலில் மட்டும் இரு காற்று இணைப்பை ஏற்படுத்தி கடலில் கனமழை பொழிவை கொடுத்துக் கொண்டு சென்னை உள்ளிட்ட வடைகடலோர பகுதியில் மிதமான மழைப்பொழிவை கொடுத்துக்கொண்டு வடதமிழ்நாடு கரைக்கு கிழக்கு பகுதி வரை நகர்ந்து பிறகு ஆந்திர மாநிலக் கரையை ஒட்டி சென்று பிறகு விலகி தாழ்வு மண்டலம் வரை தீவிரமடைந்து மீண்டும் செயலிழந்து.
நம் கணிப்பில் எதிர்பார்த்தது போல

இந்த நிகழ்வு டிசம்பர் 17 18 தேதிகளில் தமிழ்நாட்டின் கரையே நெருங்காமல் விலகி சென்றாலும் மீண்டும் தமிழ்நாட்டின் கரையை நோக்கி திரும்பி மத்திய தமிழ்நாட்டின் கடலோரம் வந்தடைந்து செயலிழந்து தமிழ்நாடு ஊடாக மேற்கு நோக்கி பயணித்து அனைத்து மாவட்டங்களுக்கும் மழை பொழிவை கொடுக்கும் என்று முன்பே கணித்திருந்த நிலையிலும் தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்த நிலையிலும் நிகழ்வானது U Turn அடித்து தமிழ்நாடு நோக்கி திரும்ப தொடங்கி இருக்கிறது.

உலக வானிலை மாதிரிகள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினாலும் நாம் இமயமலை மேற்கத்திய இடையூறு இந்த நிகழ்வை ஈர்த்து செல்லாது என்பதற்கான பல்வேறு புள்ளி விபரங்களுடன் காரணிகளை தெளிவாக விளக்கி தமிழ்நாடு திரும்பும் என்று உறுதிபட அறிவித்த நிலையில் தற்பொழுது இந்திய வானிலை ஆய்வு நிறுவனமும் தமிழ்நாடு திரும்பும் என்று இன்றைய அறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கிறது.

வானிலை எதிர்பார்ப்பு

டிசம்பர் 22
மதுரை விருதுநகர் தேனி திண்டுக்கல் கரூர் ஈரோடு சேலம் நாமக்கல் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மாலைக்குப் பிறகு இரவு நேரங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பொழியும்.
தூத்துக்குடி திருநெல்வேலி இராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை தஞ்சாவூர் பெரம்பலூர் கிருஷ்ணகிரி தர்மபுரி கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இரவு நேர மழைப்பொழிவு இருக்கும்.

திருப்பூர் ,கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது.

டிசம்பர் 23

விலகி சென்ற தாழ்வு பகுதி தமிழ்நாடு கரைக்கு நெருக்கமாக நேர்கிழக்கே வந்துவிடும் என்பதால் மேற்கு திசை காற்று தமிழ்நாடு ஊடாக ஈர்ப்பதற்கு பதிலாக வடக்கு திசை குளிர் காற்று தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 23 ஒரு நாள் மட்டும் அமைந்து குளிரை கொண்டுவரும் அது அன்றைய தினம் ஒரு நாள் மட்டும் குளிரை கொடுக்கும். மழைப்பொழிவை கொடுக்காது போல் சந்தேகப்பார்வையை மக்களிடையே ஏற்படுத்தும் இருந்த போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைப்பொழிவை கொடுக்கலாம்.

. டிசம்பர் 24

நிகழ்வு டெல்டா மாவட்டங்களுக்கு நெருக்கமாக கிழக்கு புறம் வந்து அமைந்ததும் கிழக்கு வடகிழக்கு காற்று இணைவு வடகடலோர மாவட்டங்களில் அமைந்து சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் புதுச்சேரி ஆகிய மாவட்ட பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமழை பதிவை கொடுக்கும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் வட உள் மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் லேசான மழை ஆங்காங்கே ஆங்காங்கே கொடுத்து மழையின் தொடக்கமாக அமையும்.

டிசம்பர் 25 26 27 28
நிகழ்வானது டெல்டா கரையை நெருங்கி செயலிழந்து தமிழ்நாட்டின் வளிமண்டலம் வழியாக மேற்கு நோக்கி பயணிக்கும் என்பதனால் கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் அனைத்து உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கர்நாடக ஆந்திர எல்லையோரம் மாவட்டங்கள் அனைத்திற்கும் மிதமானது முதல் சற்று கனமழை வரை பரவலாக கொடுக்கும். ஆங்காங்கே ஆங்காங்கே கன மிக கனமழை மொழிவையும் கொடுக்க வாய்ப்பு.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மேற்கண்ட நாள்களில் சில மணி நேரங்கள் பரவலான கன மிக கனமழை பொழிவு தெரிகிறது. ஆனால் மேற்கண்ட அனைத்து நாள்களும் மழைப்பொழிவுக்கு சாதகமாக தெரிகிறது.

நிகழ்வு 2
தெற்கு மதிய வங்கக் கடற் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையுடன் தென் சீன கடல் நிகழ்வும் இணைந்து டிசம்பர் 28 தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கி டிசம்பர் 29 30 31 ஜனவரி 1 ,2 தேதிகளில் இலங்கை கரையை நெருங்கி இலங்கை தென் தமிழ்நாடு டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் கன மழைப்பொழிவு தெரிகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் அந்த நாளில் மழை வாய்ப்பு தெரிகிறது. ஆனால் டெல்டா தென்கடல் வரும் ஒட்டுமொத்த தென் மாவட்டங்கள் நிறைய மழை பதிவை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வு 3
ஜனவரி 7 8 9 10 ஆகிய தினங்களில் புதிய நிகழ்வு உருவாகி
நிகழ்வு இரண்டு வந்த வழித்தடத்தில் நிகழ்வு மூன்றும் வந்து மீண்டும் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் நிகழ்வு இரண்டு கொடுத்தது போலவே அனைத்து மாவட்டங்களுக்கும் அதே மழைப்பொழிவை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நிகழ்வுகள் ஜனவரியில் இலங்கை ஒட்டி வந்து பொங்கல் பொங்கலுக்குப் பிறகும் தூறல் சாரல் லேசான மழை பொழிவுகள் கொடுக்க வாய்ப்பு தெரிகிறது.

ந. செல்வகுமார்
22.12.2024-8.30AM
வெளியீடு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *