மழை பரவலாகி கனமாகும்,ஜன 11 முடிய வாய்ப்பு.

5.1.24-வெள்ளி அதிகாலை ஆய்வறிக்கை.

கடல் தொழில் செய்ய கடலில் காற்று எப்படி?இலங்கை வானிலை

கடந்த இரவு மழை பெய்த இடங்கள்

கடலோர கர்நாடகா கேரளாவில் தொடங்கிய மழை தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மழைபகுதிகள் வால்பாறை தொடங்கி பிறகு தேனி, விருதுநகர் மதுரை ,திண்டுக்கல் , திருப்பூர்,கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே லேசாக, மிதமாக பொழிந்தது.
அதிகாலை ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களிலும் ஆங்காங்கே லேசாக பொழிகிறது.நீலகிரி மேற்கில் நல்ல மழை பொழிகிறது.

கேரளா, லட்சத்தீவு இடைப்பட்ட பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாகஜன 5 வெள்ளி கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை அனைத்து மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் நல்ல மழை பொழியும்.


அதனை ஒட்டியுள்ள மேற்கு மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழியும்.
தென் கடலோரம், தென் உள்ள பகுதிகளிலும் மழை வாய்ப்புள்ளது.

புதிய காற்று சுழற்சி ஜன 6,7,8,9 தேதிகளில் இலங்கைக்கு தெற்கு புறமாக குமரிக்கடலின் தெற்கு புறமாக மேற்கு நோக்கி நகரும் என்பதால்

ஜன 6 சனிக்கிழமை மதியம் கடலோரம் மழை தொடங்கும்.

ஜன 6 சனிக்கிழமை மாலை தென் மாவட்டங்களில் தொடங்கும்.

ஜன 6 சனிக்கிழமை இரவு தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் கேரளா, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு எல்லையோர ஆந்திரா எங்கும் ஆங்காங்கே மழை தொடங்கும்.

ஜன 7 ஞாயிறு மதியம் வரை படிப்படியாக பரவலாகும்.

ஜன 7 ஞாயிறு மாலை, இரவு ஜன 8,9 திங்கள், செவ்வாய் ஒட்டு மொத்த
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, கேரளா, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு எல்லையோர ஆந்திரா ஆங்காங்கே ஆங்காங்கே அவ்வப்போது மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு பொழியும்.

ஜன 10,11 அடுத்த காற்று சுழற்சி வருகையும், முதல் சுழற்சி நீடிப்பும்

ஜன 10,11 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் மிதமான மழை இருந்து படிப்படியாக விலகும்.

ந. செல்வகுமார்
5.1.24-4AM
வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *