மான்டோஸ் புயல் 9.12.22 8PMநிலவர ஆய்வறிக்கை: மாண்டோஸ் புயல் கரையை தொட்டது மாமல்லபுரத்திற்கு தெற்கு புறம் மையமாக வைத்து அதிகாலை வரை கரையை கடக்கும். பிறகு தாழ்வு மண்டலமாக காஞ்சிபுரம் மாவட்ட பகுதிக்கும் ராணிப்பேட்டை மாவட்ட பகுதிக்கும் செல்லும். ராணிபேட்டை மாவட்டத்தை நாளை டிசம்பர் 10 காலை 11 30 அடையும். பிறகு தாழ்வு பகுதியாக செயலிழந்து மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடல் செல்லும்.
வட கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 10 அதிகாலை வரை 55KM முதல் 85KM காற்றுடன் மழை இருக்கும்.காற்றின் வேகம் குறைவு என்றாலும் நாள் கணக்கில் தரைக்காற்று செல்வதால் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் சற்று பாதிக்கும் என்று தெரிகிறது.
நில நடுக்கோட்டு பகுதிக்கு தெற்கே உள்ள வெப்பமான நீராவிக்காற்றை ஈர்க்க தொடங்கியுள்ளதாலும் கரையேறி செயலிழக்கும் என்பதாலும் மாமல்லபுரம் கரையை நெருங்க நெருங்க புயல் மையத்திற்கு வடக்கே உள்ள மாவட்டங்களில் அதீத மழை பொழியும்.புயல் நெருங்கி கரை கடக்கும் வரை அதீத கனமழை( 30CM ) க்கு வாய்ப்பு தெரிகிறது.இதே நேரத்தில் சென்னை, திருவள்ளுர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர் வடக்குப்பகுதி ஆகிய மாவட்டங்கள் அதீத மழை பொழிவு பெரும்.
மான்டோஸ் புயல் நீடித்து நின்று தரைக்காற்றை ஈர்க்கும் என்பதால் வட கடலோர மாவட்டங்கள் இயல்பு வாழ்க்கை முடங்கும்.
டிசம்பர் 10 காலை செயலிழந்து தாழ்வு மண்டலமாக கடந்து,பிறகு தாழ்வு பகுதியாக பரவி உள் மாவட்டங்கள் வழி அரபிக்கடல் நகரும். இதனால் உள் மாவட்டங்களில் மழை பொழிவு கொடுக்கும். தொடர்ந்து வங்கக்கடல் காற்று ஈர்த்து டிசம்பர் 13 வரை ஆங்காங்கே நல்ல மழை கொடுக்கும்.
மான்டோஸ் புயல் 100 கிலோமீட்டர் வரை டெல்டா மாவட்டங்களுக்கு நெருக்கமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 210வது கிலோமீட்டர் தொலைவில் தீவிரப் புயலாக மாறி உடனடியாக மேற்கு வட மேற்கு திசை நோக்கி திரும்பி மாமல்லபுரம் நோக்கி பயணிப்பதால் எதிர்பார்க்கப்பட்ட டெல்டாவில் பெரிய தரைக்காற்று இல்லாமல் போனது. அனைத்து தென் மாவட்டங்களிலும் மழையின் தீவிரம் குறைந்தது இருந்த போதிலும் டிசம்பர் 9 இரவு மற்றும் டிசம்பர் 10 11 தேதிகளில் சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை இருக்கும். டிசம்பர் 14 வரை அனைத்து மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே ஆங்காங்கே கூடுதல் பரப்பில் கிழக்கு காற்று ஈர்த்து மதிய மாலை இரவு மழைப்பொழிவு இருக்கும்.
மழையை எதிர்நோக்கி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த மாவட்டம் மக்களுக்கு அன்பான வேண்டுகோள்
இதற்கு அடுத்தபடியாக டிசம்பர் 16 17 18,19 தேதிகளில் தாழ்வு மண்டலம் அல்லது தாழ்வு பகுதி வட இலங்கை டெல்டா மாவட்டங்கள் வழி அரபிக்கடல் சென்று அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகம் மழை கொடுப்பதற்கும் அதிக வாய்ப்பு
நன்றிகள் அண்ணா