2022 டிசம்பர் 27 இரவு ஆய்வறிக்கை:
தாழ்வு பகுதியானது குமரி கடலில் இருந்து அரபிக் கடல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இது செயலிழந்த காரணத்தினால் மிக கனமழை பெய்யாமல் ஆங்காங்கே கனமழையை கொடுத்து, விட்டு விட்டு மிதமான மழை முதல் சற்று கனமழை வரை கொடுத்து வருகிறது.
27.12.22 வானிலை எதிர்பார்ப்பு:
கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி தேனி ராமநாதபுரம் விருதுநகர் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பொழிவு கூடுதல் மணி நேரங்கள் இருக்கும்.
இதே மாவட்டங்களில் மதியம் மாலை இரவு அதிகாலை ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி நல்ல மழை பொழிவு எதிர்பார்க்கலாம்.
கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி விருதுநகர் தேனி ஆகிய மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 27 செவ்வாய்க்கிழமை டெல்டா (தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை காரைக்கால்) மாவட்டங்கள், மத்திய உள் (புதுக்கோட்டை சிவகங்கை திண்டுக்கல் திருச்சி கரூர் நாமக்கல் அரியலூர் பெரம்பலூர்) மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை இருக்கக்கூடியவடக்கு(திண்டுக்கல், திருப்பூர் கோயம்புத்தூர் நீலகிரி) மாவட்டங்கள். மற்றும் ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே வெயில் வந்த பிறகு வெப்பம் உயர்ந்த பிறகு மதியம் மாலை இரவு நேரங்களில் மழை பொழிவு காணப்படும். பரவலாக பெய்ய வாய்ப்பில்லை ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி பெய்யும்.
வட உள் மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 28 புதன் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை இருக்கும்.
டெல்டா மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நனைக்கும் மழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 29 தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. டெல்டா மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் பகுதிகளில் குழப்பமான வானிலை ஒரு சில இடங்களில் தூறலாம்.
டிசம்பர் 30 முதல் பகலில் வறண்ட வானிலையும் இரவில் பனிப்பொழிவு காணப்படும்.
டிசம்பர் 28 29 தேதிகளில் குறைவான பகுதிகள் மழை வாய்ப்பு இருக்கிறது.
டிசம்பர் 29 முதல் மழை இல்லாத நாட்களை எதிர்நோக்கி இருக்கக்கூடிய விவசாய பணிகளை தொடங்கலாம்.
பூச்சி விரட்டி அடித்தல், விதைப்பு செய்தல், உப்பு உற்பத்தி பணி தொடங்குதல், அறுவடை செய்தல் போன்ற பணியை டிசம்பர் 29 முதல் தொடங்கலாம்.
ஆனால் ஜனவரி 6 இல் இருந்து இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரம் மேகமூட்டங்கள் உருவாகும். குழப்பமான வானிலையை கொடுக்கும். ஜனவரி 8க்குள் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஜனவரி 6,7, 8 இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் கடலோரம் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் தூறலாம் .
ஜனவரி 8 இல் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய நிகழ்வு இலங்கை வரை வருவது உறுதியாக தெரிகிறது. வட இலங்கைக்கு எந்த அளவிற்கு மழை கொடுக்கும். உயர் அழுத்தம் தமிழகத்தை எட்டிப் பிடிக்க எந்த அளவிற்கு வழிவிடும். கடலோரம் மட்டும் எட்டிப் பிடிக்குமா? உள்ளேயும் மழை கொடுக்குமா? வட துருவ குளிரலை வரத்து அதன் இடையூறு போன்றவை ஆய்வில் உள்ளது. ஜனவரி 8 க்கு மேல் வரக்கூடிய நிகழ்வு தீவிர ஆய்வில் உள்ளது. ஜனவரி 1,2, தேதிகளில் உறுதிப்படுத்தலாம்
மீனவர்களுக்கான வானிலை அறிக்கை
வங்கக்கடலில் நிகழ்வு ஏதும் இல்லை. அரபிக்கடலை நோக்கி குமரி கடல் நிகழ்வு நகர்கிறது.
இதன் காரணமாக மன்னார் வளைகுடாவின் தெற்கு பகுதி, குமரிக்கடல் பகுதி, கோழிக்கோட்டிற்கு தெற்கே உள்ள அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவு பகுதி மீனவர்கள் மட்டும் டிசம்பர் 28 முடிய கடலுக்குள் செல்ல வேண்டாம்.
இராமநாதபுரம் மாவட்டம் தொடங்கி திருவள்ளூர் வரை உள்ள அனைத்து கடலோர மீனவர்களும் கடலுக்குள் செல்லலாம். அச்சமின்றி மீன் பிடிக்கலாம்.
தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டம் மீனவர்கள் மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதிக்கு டிசம்பர் 29 முதல் செல்லலாம்.
தெற்கு கேரளா கோழிக்கோட்டிற்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் டிசம்பர் 28 முடிய வலுவான காற்று இருக்கும் என்பதால் டிசம்பர் 29 முதல் நீங்கள் கடலுக்குள் இறங்கலாம்.
ந. செல்வகுமார்