2023 பிப்ரவரி 24 வெள்ளி இரவு ஆய்வறிக்கை
2023 பிப் 28 மழை உறுதி எங்கெங்கே?
வங்கக்கடல் நிகழ்வு மண்டலமாக மார்ச் 6,7,8,9 இல் தமிழ்நாடு வந்து கனமழை தர வாய்ப்பு.
2023 பிப்ரவரி 24 வெள்ளி அதிகாலை ஆய்வறிக்கை
பிப்ரவரி 24 வானிலை
வெயில் அதிகரித்து காணப்படும். இரவு அதிகாலை குளிர் நிலவும். மழை வாய்ப்பு இல்லை.
மார்ச் 25 26,27வானிலை.
மார்ச் 25 26,27 சனி ஞாயிறு திங்கள் வெயில் சற்று குறைந்து காணப்படும். கருமேகம் சூழ்ந்த நிலையில் குழப்பமான வானிலை நிலவும். மழைக்கு வாய்ப்பு இல்லை. இரவு நேர குளிர் குறைந்து காணப்படும்.
பிப்ரவரி 28,மார்ச் 1 வானிலை
பிப்ரவரி 28 செவ்வாய்க்கிழமை கடலோர மாவட்டங்களில் அதிகாலை காலை நேரத்திலும் உள்ளே மதியம் மாலை நேரத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவு மற்றும் மார்ச் 1 அதிகாலையும் ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும்.
தமிழ்நாட்டில் பிப்ரவரி 28 வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் தூறல்,நனைக்கும் மழை வாய்ப்பு உள்ளது.
டெல்டா மற்றும் தென்கடலோரத்திற்கு சற்று கன மழை முதல் கனமழை வரை தெரிகிறது.
பிப்ரவரி 28 அதி காலை நாகப்பட்டினம், திருவாரூர் ,காரைக்கால் ,மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தொடங்கும் மழை படிப்படியாக கடலூர், அரியலூர், புதுக்கோட்டை இராமநாதபுரம் ,சிவகங்கை, தூத்துக்குடி திருநெல்வேலி ,கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே சற்றுகனமழை வரை பொழியும்.
தென்காசி, விருதுநகர் ,தேனி ,மதுரை, திண்டுக்கல் ,திருச்சி, கரூர்,திருப்பூர், கோயம்புத்தூர் ,பெரம்பலூர் மாவட்டங்களிலும் மிதமான மழை ஆங்காங்கே பொழியும்.
பெரம்பலூர் ,திருச்சி வடக்கு, நாமக்கல் ,ஈரோடு, நீலகிரி, கடலூர் ,மேற்கு விழுப்புரம் ,புதுச்சேரி கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் நனைக்கும் மழை முதல் லேசான மழை வரை ஆங்காங்கே ஆங்காங்கே இருக்கும்.
திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே தூறல் விழும்.
ஓரிரு இடங்களில் நனைக்கலாம்.
மார்ச் 2 முதல் 10 வரை வானிலை.
நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் காற்று சுழற்சி நீடிக்கும். இந்தக் காற்று சுழற்சியுடன்
தென் சீனா கடற்பகுதியிலிருந்து தாய்லாந்து வளைகுடா வழியாக வரும் காற்று சுழற்சியும் அந்தமான் கடல் பகுதிக்கு மார்ச் 5,6 தேதிகளில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு வேறு நிகழ்வுகள் இணைந்து தெற்கு அந்தமான் மற்றும் இலங்கை இடைப்பட்ட கடற்பகுதியில் மண்டலமாக தீவிரமடையும் சூழல் தெரிகிறது. மேலும் புயலாக தீவிரமடைந்தால் வடக்கு திசை நோக்கி நகர்ந்து விலகிச் செல்லும். இதே மண்டலமாக செயல் குறைந்த நிலையில் இருந்தால் மேற்கு வடமேற்கு நோக்கி தமிழகம் வரலாம். வந்தால் ஓரிரு நாள்கள் கனமழை வாய்ப்பு தெரிகிறது. . புயலாக மாறி வடக்கு நோக்கி சென்று உயர் அழுத்தத்தின் எதிர்ப்பால் செயலிழந்து மண்டலமாக தமிழ்நாட்டிற்கு மார்ச் 7 8 9 10 வர வாய்ப்பு தெரிகிறது.ஆய்வு தொடர்கிறது.
இலங்கைக்கு மிக நெருக்கமாக இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகி இலங்கையை ஒட்டி வந்து மழைதரும் வலுவான நிகழ்வாக இலங்கை தமிழ்நாடு வருவதற்கே அதிக வாய்ப்பு தெரிகிறது. அப்படி வந்தால் மார்ச் 6 7 8 9 தேதிகளில் ஏதேனும் இரண்டு நாள் கனமழை பரவலாக கொடுக்கும்.
மார்ச் 11 க்கு மேல் வானிலை
வெயில் அதிகரிக்கும் வெப்பச்சலன மழை ஆங்காங்கே ஆங்காங்கே தொடங்கும் .
ஏப்ரல் மே கோடை மழை
ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.
தென்மேற்கு பருவமழை 2023
தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.
பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.
பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.
வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.
வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.
குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.
ந. செல்வகுமார்.
24.2,.2023-4AM வெளியீடு.