மார்ச் 15 க்குள் மழைஎப்படி? எங்கெங்கே? மார்ச் 15 க்கு மேல் கோடை வெயில் & கோடை மழை எப்படி?

2023 மார்ச் 2 வியாழன் இரவு ஆய்வறிக்கை

2023 மார்ச் 2 வியாழன் அதிகாலை ஆய்வறிக்கை


மார்ச் 2,3,4 வானிலை
நேற்று தூத்துக்குடி திருநெல்வேலி இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கு மழை கொடுத்த காற்று சுழற்சி நிலநடுகோட்டை ஒட்டி மேற்கு நோக்கி நகந்துவிட்டது. புதிய காற்று சுழற்சியுடன் இணைந்து தீவிரமடைய வாய்ப்பு இல்லாமல் போகிறது. புதிய காற்று சுழற்சி நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் மேற்கு நோக்கி வருகிறது.


மார்ச் 5 6 7 வானிலை
புதிய காற்று சுழற்சி நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் இலங்கைக்கு தெற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மார்ச் 5 6 தேதிகளில் கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி ராமநாதபுரம் பகுதிகளில் மட்டும் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி லேசான மழை வாய்ப்பு தெரிகிறது.


ராமநாதபுரம் வடக்கு புதுக்கோட்டை கடலோரம் தெற்கு டெல்டா கடலோரம் தூறல் வாய்ப்பு தெரிகிறது. தூத்துக்குடி திருநெல்வேலி கடலோரத்திற்கு மட்டும் மிதமான மழை வாய்ப்பு தெரிகிறது. டெல்டா மற்றும் தென் தமிழ்நாடு பிற பகுதிகள் வேகம் சூழ்ந்து குழப்பமான வானிலை மட்டும் கொடுக்கும்.

மார்ச் 8 9 வானிலை
தென் தமிழ்நாட்டில வெயிலுக்கு இடையே வானம் மேகம் சூழ்ந்து காணப்படும் தூறல் துளிகள் ஆங்காங்கே விடலாம்.

மார்ச் 10 முதல் 14 முடிய வானிலை:
அடுத்த காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்ட கடலோர பகுதிகளில் லேசான மழை வாய்ப்பு தெரிகிறது. டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் பிற பகுதிகளில் வெயிலுக்கு இடையே வேகம் சூழ்ந்து காணப்படும்.துல்லியம் அறிய ஆய்வு தொடர்கிறது.

மார்ச் 15 க்கு மேல் வானிலை
மார்ச் 15க்கு மேல் வெயில் அதிகரிக்கும் வெப்பச்சலன மழை கேரள எல்லையோர மாவட்டங்கள் கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி தொடங்கும் . வெப்பச்சலன இடி மழை படிப்படியாக உள் மாவட்டங்களுக்கும் மார்ச் இறுதியில் இருந்து தொடங்கும். கடும் வெயில் வாட்டும் நிலையில் ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவில் இடி மழை இருக்கும் தவிர பரவலாக இருக்காது அருகருகே பொழியும்.

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
2.3.2023-4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *