இன்று மழை எங்கே?ஆகஸ்ட் 22 இரவுஆகஸ்ட் 23 அதிகாலைநல்ல மழை வாய்ப்புவரும் நாள்கள் எப்படி?

2023 ஆகஸ்ட் 21 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை.

ஆகஸ்ட் 22 முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மாலை இரவு நள்ளிரவு அதிகாலை மழை பொழிவு கிடைக்கும்.

எங்கு பெய்தாலும் அரை மணி நேரம் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில் மழை பொழிவுக்கு வாய்ப்பு இல்லை.

சில இடங்களில் குறைந்த இடைவெளியில் கனமழை பொழிவு இருக்கும்.

குறிப்பாக திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரை கடலோரம் நள்ளிரவு அதிகாலை காலை நேரங்களில் மழை பொழிவு கொடுக்கும்.

ஆகஸ்ட் இறுதி நாள்களில் வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடித்து கடலோர மாவட்டங்களில் நள்ளிரவு, அதிகாலை மழை பதிவை கொடுக்கும்.

செப்டம்பரில் தென் சீனக் கடல் நிகழ்வு வருகை உறுதி
ஆகஸ்ட் இறுதியில் தென் சீனா கடல் பகுதியில் உருவாகும்
நிகழ்வுகள் செயலிழந்து வங்கக் கடலுக்கு செப்டம்பரில் அடுத்தடுத்து வந்து காற்று சுழற்சியுடன் இணைந்த மழை பொழிவை செப்டம்பர் அக்டோபரில் கொடுக்கும்.

செப்டம்பர் 10 தேதிக்கு மேல்
வலுவான தென் சின்ன கடல் நிகழ்வு வங்கக் கடலுக்கு வந்து தென் மேற்கு பருவமழையை தீவிரப் படுத்துவதுடன் தமிழ்நாட்டிலும் காற்று சுழற்சி வெப்ப சலனம் இணைந்த மழைப்பொழிவை கொடுக்கும்.

தற்பொழுது சூரியன் குத்து கதிர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி இருப்பதன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் குத்து கதிர் தமிழ்நாட்டில் விடுகிறது என்பதால் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

ஏப்ரல் மே போல் ஆகஸ்ட் செப்டம்பர் சூரியனின் குத்து கதிர் தமிழ்நாடு இலங்கை நில நடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதி வரை விழும் என்பதால் வெயில் அதிகரித்து காணப்படும்.
வழக்கமாக ஆகஸ்டில் தென்மேற்கு பருவமழை சாரல் கிடைக்கும் என்பதால் தமிழ்நாட்டில் வெப்பம் தெரியாது.

இப்பொழுது தென்மேற்கு பருவமழையை தீவிர படுத்த சரியான செட்டிங் இல்லாத காரணத்தால் பெரிய அளவில் சாரல் இல்லை குத்துக் கதிர் காரணமாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு கிடைக்கும்.

ஒரு நிகழ்வு உருவானால் அதன் குணம் அந்த நிகழ்வு செயலிழக்கு வரை நீடிக்கும்.

செப்டம்பர் அக்டோபரில்
ஆந்திர பகுதியில் உருவாக்கி மழை பொழிவை தீவிரப்படுத்தும்.

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் தென்னிந்தியாவிற்கே அதிகம் மழை பொழிவாக அமையும்.

செப்டம்பர் அக்டோபர் கூடுதல் மழை இருக்கும்.

தென்மேற்கு பருவமழை அக்டோபர் 20 வரை தொடர வாய்ப்பு உள்ளது.

படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை.*

எல் நினோ அச்சம் வேண்டாம்

எதிர்பார்த்தது போலவே
பசிபிக் பெருங்கடலில் வலுவான எல் நினோ உருவாகி மெக்சிகோ நாட்டின் கடற் பகுதிக்கு வலுவான புயலை உருவாக்கி உள்ளது.

அதே நேரத்தில்
வங்கக்கடல் வெப்பம் அரபிக்கடல் வெப்பம் நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் வெப்பம் உயர்ந்து எல் நினோ கொடுக்கும் பாதிப்பை சரி செய்யும் வகையில்
தென் சீன கடல் வெப்பம், வடக்கு இந்திய பெருங்கடல் வெப்பம் சாதகமாக இருக்கிறது.
எல்-நினோ கவலை வேண்டாம்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
செப்டம்பர் அக்டோபர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

நாம் அறிவித்தது போல செப்டம்பர் அக்டோபரில் தென்னிந்தியாவிற்கு சிறப்பான மழை இருக்கிறது.
அதுவும் குறிப்பாக
செப்டம்பர் 10 தேதிக்கு மேல் தொடங்கி அக்டோபர் 20 வரை சராசரிக்கு கூடுதலான மழைப்பொழிவு இருக்கிறது புரிந்து பொறுமையுடன் இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.
வாய்ப்பு தெரிகிறது.*

வரும் காலங்களில் பருவ மழை சீராக இல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் அதிக மழை பதிவை பொழிந்து சராசரியை அதிகப்படுத்தும். அதாவது தேவையான பொழுது மழை கொடுக்காது தேவையில்லாத பொழுது மழை கொடுக்கும். பருவம் தப்பி பெய்யும் மழையை பருவத்தில் பயன்படுத்த மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துவோம். தங்கள் விலை நிலத்தில் 10 சதவிகித இடங்களில் பண்ணை குட்டை அமைப்போம். மழை கொடுக்கும் அமைப்பு மாறி அமையும் பொழுது கைவசம் நீர் வைத்து கவலை இல்லாமல் விவசாயம் செய்வோம்.

வரும் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் சேமிக்கும் அளவிற்கு உபரி நீர் தரும் சேமித்து பருவத்தில் பயன்படுத்துவோம்.
2023 வடகிழக்கு பருவமழை கண்டிப்பாக சராசரிக்கு மிகுதியாக இருக்கும் அதுவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகம் இருக்கும்.
அதை சேமிப்போம் தேவையானபோது பயன்படுத்துவோம்.

ந. செல்வகுமார்.
21.8.2023-4AM வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *