15.9.2024-4AM  ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை  தொகுப்பு:

15.9.2024-4AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு:*
*
அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பசர்க்கவும்.
*
நிகழ்வு 1
பிலிப்பைன்ஸ் தென்சீனா, வியட்நாம், லாவோஸ் கடந்து செயலிழந்த யாகி சூப்பர் புயல். தாழ்வு பகுதியாக மியான்மர் வழியாக வட கிழக்கு மாநிலங்களில் நுழைந்தது பங்களாதேஷ்,மேற்கு வங்கம் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிக்கு வந்து செப்டம்பர் 13 இல் தாழ்வு மண்டலமாக மாறியது. வரும் நாள்களில் ஜார்கண்ட், சட்டிஸ்கர், மத்திய பிரதேசம் வழியாக மேற்கு நோக்கி நகரும்.
*
நிகழ்வு 2.
ஒடிசா மாநிலம் கடந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் செப் 12,13 இல் டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் நிறைய மழை கொடுத்து செயலிழந்து கொண்டுள்ளது.
*
இடிமழை எதிர்பார்ப்புகள்.:
*
செப் ,15 சனி ஞாயிறு மாலை இரவு விருதுநகர்,மதுரை, சிவகங்கை,இராமநாதபுரம், தூத்துக்குடி,புதுக்கோட்டை, திண்டுக்கல் தெற்கு,திருச்சி தொடங்கி சேலம் கிழக்கு, நாமக்கல் கிழக்கு,, ஈரோடு வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு, நீலகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு, தர்மபுரி கிழக்கு, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி இடிமழை வாய்ப்புள்ளது.

அடுத்த நிகழ்வு :
செப்டம்பர் 23,24,25,26,27இல் ஆந்திரா, அந்தமான் இடையே வளி மண்டல சுழற்சி உருவாகி,தாழ்வு பகுதி வரை தீவிரம் அடைந்து ஆந்திரா கரையை அடையும்.

இந்த காலத்தில் வட தமிழ்நாடு மற்றும் மத்திய கடலோர மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே மாலை இரவு மழை அமைப்பை ஏற்படுத்தும்.

செப்டம்பர் 28,29,30
அக்டோபர் 1,2,3,4
ஆந்திரா கரையோரம் அமையும் அடுத்தடுத்த இரண்டு வலுவான நிகழ்வுகள் தமிழ்நாடு உட்பட தென் இந்தியாவிற்கு சிறப்பான மழை தரும்.

அக்டோபர் 10,11,12,13 ஆந்திரா வரும் நிகழ்வு காரணமாக தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் நல்ல மழை தரும்.
அக்டோபர் 11,12 ஆயுதபூஜை விஜய தசமி மழை குழப்ப வானிலை தெரிகிறது.

2024 தென் மேற்கு பருவமழை அக்டோபர் 14 முடிவுக்கு வரும்.

கடல் வெப்பம் லா -நினா அமைப்பும் நெகடிவ் IOD அமைப்பும்
*
இந்தியப் பெருங்கடல் IOD அக்டோபர் முதல் நடுநிலையில் இருந்து நெகடிவ் IOD அடையும்.

பசிபிக்கடல் அக்டோபர் முதல் லா-நினா அமைப்பை அடையும்.

ஆக பசிபிக் கடலின் ஆசிய நாடுகளின் பகுதி வெப்பம் அதிகரிக்கும்,வங்கக்கடல் , அதற்கு தெற்கே உள்ள நில நடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் வெப்பம் உயர்ந்து இருக்கும் என்பதால் 2024 அக்டோபர் முதல் ஜனவரி முடிய தென் சீனா கடல் நிகழ்வு வங்கக்கடலுக்கு வலுவாக வரும்.

காற்று திசை மாறும் காலம் :
அக்டோபர் 13 to 16

வடகிழக்கு பருவமழை.
அக் 17,18 இல் தொடங்கும்.

இக்காலத்தில் வலுவான நிகழ்வுகள் வலுவான மழை தரும் வடகிழக்கு பருவமழை சராசரிக்கும் கூடுதல் தரும் என்றே தெரிகிறது.

மழை அமைவு எதிர்பார்ப்பு :

அமைவு 1
அக்டோபர் 18 முதல் 25 முடிய தென் மாநிலங்கள் பரவலாக மிதமானது முதல் சற்று கனமழை வரை.

அமைவு 2
அடுத்த நிகழ்வு உருவாகி அக்டோபர் 28 முதல் நவம்பர் 4 முடிய நல்ல மழை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி தெரிகிறது.
அக்டோபர் 31 தீபாவளி நாள்களில் மழை தெரிகிறது.

அமைவு 3
நவம்பர் 7 முதல் நவம்பர் 14 வலுவான நிகழ்வுகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உட்பட நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது.
நவம்பர் 15, 16,17, 18 நல்ல மழை தெரிகிறது.

அமைவு 4
நவம்பர் 22,23,24,25,26 மீண்டும் வலுவான நிகழ்வுகள் அனைத்து மாவட்டங்களில் அதிக மழை தெரிகிறது.

அமைவு 5
நவம்பர் 27 முதல் டிசம்பர் 10 முடிய வலுவான நிகழ்வுகள் நல்ல மழை தெரிகிறது.

அமைவு 6
டிசம்பர் 14 முதல் டிசம்பர் 23 முடிய மன்னார் வளைகுடா தென் தமிழ்நாடு வழி அரபிக்கடல் நிகழ்வு நல்ல மழை.

அமைவு 7
டிசம்பர் 26 முதல் 31 இலங்கை, குமரிக் கடல் நிகழ்வு.

அமைவு 8
ஜனவரி முதல் வாரம் நிலநடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் குமரிக் கடல் நிகழ்வு தென் மாவட்ட மிதமான மழை வாய்ப்பு.

*குறிப்பு 2024 வட கிழக்கு பருவமழை காலத்தில் வலுவான நிகழ்வுகள் அடுத்தடுத்து வரும், ஒரு நிகழ்விற்கும் அடுத்த நிகழ்விற்கும் இடைவெளி இருக்கும். வலுவான நிகழ்வுகள் வடகிழக்கு மாநிலங்கள் முதல் தமிழ்நாடு வரை மழை கொடுக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் முற்பகுதி நிகழ்வுகள் வட மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களில் அதிக மழை தரும். டிசம்பர் பிற்பகுதி தென் மாவட்டங்களில் அதிக மழை தரும். ஒவ்வொரு நிகழ்வும் கடக்கும் இடம் ஒன்றாக இருக்கும், மழை தரும் இரு காற்று இணையும் இடம் வேறு இடமாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பொழிவை தரும். அரபிக்கடல் காற்று வங்கக்கடல் வரும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கும் நல்ல மழை தரும்.

தினசரி அப்டேட்ஸ் வழங்கப்படும் மாறுதல், துல்லியம் அறிந்து பணிசெய்து லாபம் அடைய கேட்டுக்கொள்கிறேன்.*

ந. செல்வகுமார்
15.9.2024-4AM
வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *