2024 கோடை மழையும் தென்மேற்கு பருவமழையும் ந. செல்வகுமார் ஆய்வறிக்கை.
ஏப்ரல், மே கோடை வானிலை.
உயர் அழுத்தம் வங்கக்கடலில் நீடிக்க கடலோர மாவட்டங்கள் வழியாக
கிழக்கு தென் கிழக்கு திசை காற்றாக உள்ளே நுழையும் காற்று
மேற்கு, வடமேற்கு மாவட்டங்களில் வெப்ப அலை கொடுக்கிறது.
இந்த நிலையில் கேரளாவில் இடிமழை கொடுத்து, மேற்கு தொடர்ச்சி மலையில்
ஆங்காங்கே தூறல், நனைக்கும் மழை கொடுக்கிறது.
மேற்கு மாவட்டங்களில் வெப்பம் மேலும் உயரும்.. கடலோர மாவட்டங்களில் படிப்படியாக உயரும்.
ஏப்ரல் 9 முதல் வெயிலுக்கு பின்னர் புழுக்கம் வியர்வைக்கு பின்னர் புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதியில் ஆங்காங்கே அதிகாலை காலை மழை வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 13 முதல் கேரளா எல்லை ஓர மேற்கு தொடர்ச்சி மலையில் ஆங்காங்கே ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மாலை இரவு லேசான மழை வாய்ப்பு.
ஏப்ரல் 15 முதல் மேற்கு மாவட்டங்கள், கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் மாலை இரவு ஆங்காங்கே ஆங்காங்கே இடிமழை வாய்ப்பு.
ஏப்ரல் 17,18,19 மாலை இரவு கடலோரம் உட்பட அனைத்து மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே இடிமழை நல்ல மழை வாய்ப்பு.
ஏப்ரல் 17,18,19 மாலை இரவு அதிகாலை ஆங்காங்கே கொடுக்கும் மழை தமிழ்நாடு,ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உப்பட தென் மாநிலங்களில் சற்று கூடுதல் பரப்பில் கொடுக்கும் வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 26 முடிய சூரியனின் குத்துக்கதிர் தமிழ்நாட்டில் விழும்.
ஏப்ரல் 9 முதல் வளி மண்டல சுழற்சி, வெப்பச் சலன மழை வாய்ப்பு ஏற்பட்டு தென் கடலோரம் ஒரு சில இடங்களில் தொடங்கும் மழை ஏப்ரல் 15 க்கு பிறகு எல்லா நாள்களும் வெயில், வெப்பம், புழுக்கம், வியர்வைக்கு பின்னர் மழை வாய்ப்பு.
ஏப்ரல் இறுதி வாரத்திலும் கடும் வெயிலுக்கு பின்னர் மாலை இரவு அதிகாலை ஆங்காங்கே மழை வாய்ப்பு.
மே 1 க்கு மேல் 15 க்குள் வங்கக்கடலில் வலுவான நிகழ்வு உருவாகும் இது ஒடிசா, மேற்கு வங்கம் பகுதியில் கடக்கும், நெருங்கி வந்தால் தமிழ்நாட்டிற்கு தாழ்வு மழை கிடைக்கும். இல்லாவிட்டால் வெப்பச்சலன மழை ஆலங்கட்டி மழையாகவும் காற்றுடன் மழையாகவும் ஆங்காங்கே மாலை இரவு அதிகாலை பொழியும்.
நாட்டின் அனைத்து பகுதிக்கும் இந்த ஆண்டு கோடை சராதாரிக்கும் கூடுதல் வெயில் வெப்பம் கொடுக்கும் அதே நேரத்தில் குறைவான பரப்பில் அதிக மழை பொழிந்து ஒதுக்குதல் இருந்து நல்ல இடி மின்னல் மழை கிடைக்கும்.
தென்மேற்கு பருவமழை:
மே இறுதியில் வெப்பச்சலன கோடை மழை தாழ்வு அமைவுகளால் கொடுக்கும். அது தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது போல தெரியும்.
மே 31 அல்லது ஜூன் 1,2 தேதிகளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாழ்வு அமைவுடன் தொடங்கும்.
ஜூன் 1 முதல் ஜூலை 15 முடிய பருவமழை முன்னேற்றத்தில் இருக்கும். ஜூலை 15 முடிய சீரற்ற வானிலை நிலவும், குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் மழையும் குறிப்பிட்ட இடங்களில் குறைவான மழையும் கொடுக்கும். ஜூலை இறுதிக்கு மேல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அணைகளுக்கு நீர் வரத்து கூடும்,
மேட்டூர் நிலவரம்
ஏப்ரல் 4 24’TMC இருப்பு உள்ளது.
ஏப்ரல் 20 இல் 21 TMC யாகவும்,
ஏப்ரல் 30இல் 20 TMC யாகவும்
மே 31 இல் 17 TMC யாகவும் கோடை மழையை கணக்கில் வைத்தாலும்
ஜூன் 12:இல் 16 TMC யாகவும் குறையும்.
16 நாள் பாசனத்திற்கு மட்டும் நீர் இருக்கும். குடிநீர் தேவை இருக்கும்
ஜூன், ஜூலை அணைகளுக்கு பெரிய நீர் வார்த்து கொடுக்கும் வகையில் பருவ மழை இருக்காது. டெல்டா குறுவை சாகுபடி ஆற்று பாசன வாய்ப்பு குறைவு.
ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் கொண்டு மட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியும்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல நீர்வரத்து கொடுக்கும்.
========================
5.4.2024-4AM விண்வெளி அறிவியல் ந. செல்வகுமார் வெளியீடு
5.4.24 இன்று தமிழ்நாட்டின்
கிழக்கு ஓரம் மேற்கு ஓரம் சூரியன்
உதயம் மறைவு நேர விபரம்.
கிழக்கு ஓரம் பழவேற்காடு ↑ 06:03AM ↓ 06:21PM
84 ‘டிகிரி கிழக்கு. 276 டிகிரி மேற்கு
சென்னை ↑ 06:04AM ↓ 06:20PM
ஊட்டி ↑ 06:18 AM ↓ 06:34 PM
மேற்கு ஓரம்
எருமாடு {நீலகிரி மேற்கு ஓரம் )
↑ 06:19 AM ↓ 06:35PM
தமிழ்நாட்டின் கிழக்கு ஓரத்திற்கும் மேற்கு ஓரத்திற்கும்
சூரியன் உதிப்பதில் நேர வேறுபாடு 15 நிமிடங்கள்.
================
மன்னார்குடியில் சூரியன், சந்திரன் இன்றைய பகல் நேரம்.
06:07AM– 06:22PM நண்பகல் நேரம் உச்சிக்கு சூரியன் வருதல் 12.15மணி.
12 மணிகள் 15 நிமிடங்கள் 34 வினாடிகள் உதயம் 84 டிகிரி
கிழக்கு மறைவு 276 டிகிரி மேற்கு
இன்று 5.4..24 பூமி -சூரியன்
இடைப்பட்ட தூரம்:149.673மில்லியன் கிலோமீட்டர்.
============================
இன்றைய பகல் பொழுது
குறித்த விளக்கம்.
இன்றைய துல்லிய பகல் நேரம்
12 மணிகள் 15 நிமிடங்கள் 34 வினாடிகள்
(5 ஏப்ரல் 2024).
இரவு பொழுது 11 மணிகள் 44 நிமிடங்கள் 26 வினாடிகள்
இன்றைய (5 ஏப்ரல் 2024) பகல் பொழுது
நேற்று (4 ஏப்ரல் 2024) விட 35 வினாடிகள்
பகல் பொழுது கூடுதல்.
நிலநடுக்கோட்டில் இருந்த (22 Dec 2023)விட இன்று
45 நிமிடங்கள் 22 வினாடிகள் பகல் பொழுது கூடுதல் .
கடகரேகையில் இருந்த (21 Jun 2023) விட இன்று
29நிமிடங்கள் 22 வினாடிகள் பகல் பொழுது குறைவு.
சந்திரன் மன்னார்குடியில் இன்று சந்திரன்
உதயம் நேரம் அதிகாலை 3.14 மணி 114 டிகிரி கிழக்கு தென் கிழக்கு
இன்று சந்திரன் மறையும் நேரம் மாலை 3.13 மணி 248டிகிரி
மேற்கு தென் மேற்கு
இன்று அதிகாலை 3.14 மணிக்கு
18.3 % முதல் மாலை 3.13 மணிக்கு
12 % முடிய அளவிற்கு ஒளி வீசும் தேய்பிறை.
நேற்று 4.4.24 சந்திரன் பூமி இடையே தூரம்
3,68,996 கிலோமீட்டர்.
இன்று 5.4.24 சந்திரன் பூமி இடையே தூரம்
3,64,404 கிலோமீட்டர்.
நேற்று சந்திரன் இருந்த தூரத்தை விட இன்று 4,592கிமீ குறைவு
அடுத்து அமாவாசை நேரம்
ஏப்ரல் 8 -2024, 11.50PM மணி. ஏப்ரல் 8 இரவு 9.12 மணி முதல்
ஏப்ரல் 9 அதிகாலை 2.22 மணி முடிய பூமி -சந்திரன் -சூரியன்
ஒரே நேர் கோட்டில் வந்து சூரிய கிரகணம் ஏற்படுத்தும்.
இரவு 9.12 மணிக்கு மேல் என்பதால் சூரியன் இந்தியாவில் மறைந்திருக்கும் இந்தியாவில்
அந்த நிகழ்வை காணமுடியாது. UK மேற்கு பகுதி முதல் கிரிபாட்டி வரை காணமுடியும்.
வட அமெரிக்க கண்டத்தில் காணமுடியும்.
அடுத்த முழுநிலவு பௌர்ணமி நேரம்.
ஏப்ரல் 24 அதிகாலை 5.18 மணி.
5.4.24 வெள்ளிக்கிழமை மன்னார்குடி பகுதியில் இருந்து பார்த்தால் தெரியும் கோள்கள் மற்றும் நேரம் :
புதன் கோள்
உதயம் 06.43AM
மறைவு 07.05PM
உச்சி மதியம் 12.54
கருத்து விளக்கம்:-பார்க்க முடியாது. சூரியனுக்கு அருகே இருக்கும் சூரியன் பிரகாச ஒளியால் பார்க்க முடியாது.
வெள்ளி
உதயம் 05.17AM
மறைவு 05.20PM
உச்சி 11.18AM
குறிப்பு : 5.17AM முதல் சூரியன் உதிக்கும் நேரம் வரை அதிகாலை கிழக்கே அடிவானில் பார்க்கலாம்.வெளிச்சம் வரும் வரை பிரகாசமாக பார்க்கலாம். பிறகு சூரியஒளி வந்துவிடும் என்பதால் பார்க்க முடியாது.
செவ்வாய்
உதயம் 04.10AM
மறைவு 4:00PM
உச்சி 10:05AM
சூரியன் உதிக்கும் முன் கடும் முயற்சி செய்து கிழக்கே உதிக்கும் போது
வெள்ளி கிராகத்திற்கு சற்று மேலே உதிப்பதை பார்க்கலாம்.
5.45 க்கு பிறகு கிழக்கே வெளிச்சம் வந்துவிடும் பார்ப்பது சற்று கடினம்.
வியாழன்
உதயம் 08.08AM
மறைவு 08.37PM
உச்சம் 02.22PM
சூரியன் மறைந்த பிறகு
வியாழன் மறையும் நேரம்
இரவு 08.37வரை
பார்க்க நன்றாக இருக்கும்.
சனி
உதயம் 04.25AM
மறைவு 4.14PM
உச்சி 10.20AM
சூரியன் ஒளியால்
பார்க்க முடியாது.
யுரேனஸ்
உதயம் 08.18AM
மறைவு 8.49PM
உச்சி 02.33PM
பார்ப்பது கடினம்.
நெப்டியூன்
உதயம் 05.11.AM
மறைவு 5.10PM
உச்சி 11.10AM
பார்ப்பது மிகவும் கடினம்.
பூமி
நாம் வாழ்வது.
அறிந்ததே.
ந.செல்வகுமார்
05.04..2024-4AM
வெளியீடு