2024 கோடை மழையும் தென்மேற்கு பருவமழையும் ந.செல்வகுமார் ஆய்வறிக்கை.

2024 கோடை மழையும் தென்மேற்கு பருவமழையும் ந. செல்வகுமார் ஆய்வறிக்கை.*

ஏப்ரல், மே கோடை வானிலை.

கோடை மழை இடி மின்னலுடன் பெய்யும் இடத்தில் கூடுதலாகவும், அருகே குறைவாகவும், அருகில் ஒதுக்கியும் பெய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்.
*

(1) உயர் அழுத்தம் வங்கக்கடலில் வடக்கு பகுதியில் நீடிக்கிறது.
(2)தாழ்வழுத்த காற்று சுழற்சி நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடலில் இலங்கையை ஒட்டி நீடிக்கிறது.
(3)காஷ்மீர், பஞ்சாப், சண்டிகர் ஹரியான பகுதியில் மேற்கத்திய இடையூறு தாழ்வு சுழற்சி நீடிக்கிறது.

மேற்கு மாவட்டங்களில் வெப்பம் மேலும் உயர்ந்த நிலையில் சற்று சில டிகிரி குறையும்.
கடலோர மாவட்டங்களில் இதமான வெப்பமும் மாலை இரவு குளிந்த கிழக்கு, வடகிழக்கு காற்று வீசும்.

*ஏப்ரல் 11 இரவு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மலை பகுதிகளில் aangangeமழை வாய்ப்பு.
ஏப்ரல் 12 அதிகாலை முதல் புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோர பகுதியில் ஆங்காங்கே அதிகாலை காலை ஆங்காங்கே நல்ல மழை பொழிவு தெரிகிறது
ஏப்ரல் 12 அதே நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும்.

*ஏப்ரல் 12 வடகடலோரம் வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே நனைக்கும் மழை பெய்யும்.
ஏப்ரல் 12 இரவு கேரளா, கர்நாடகா எல்லை ஓர மாவட்டங்கள் அனைத்து தென் மற்றும் மேற்கு மாவட்டங்கள் இடிமழை பெய்யும்.

ஏப்ரல் 13 முதல் கேரளா எல்லை ஓர மேற்கு தொடர்ச்சி மலையில் ஆங்காங்கே ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மாலை இரவு லேசான மழை வாய்ப்பு.
ஏப்ரல் 15 முதல் மேற்கு மாவட்டங்கள், கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் மாலை இரவு ஆங்காங்கே ஆங்காங்கே இடிமழை.

ஏப்ரல் 17,18,19 மாலை இரவு கேரளா கர்நாடகா மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே இடிமழை வாய்ப்பு.

ஏப்ரல் 12 மாலை இரவு அதிகாலை ஆங்காங்கே கொடுக்கும் மழை மேற்கு மற்றும் தென் தமிழ்நாடு,வடக்கு தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியின் மாஹே உப்பட தென் மாநிலங்களில் சற்று கூடுதல் பரப்பில் கொடுக்கும் வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 26 முடிய சூரியனின் குத்துக்கதிர் தமிழ்நாட்டில் விழும்.
ஏப்ரல் 12 முதல் காற்று சுழற்சி, வெப்பச் சலன மழை வாய்ப்பு ஏற்பட்டு தென் கடலோரம் ஒரு சில இடங்களில் தொடங்கும் மழை ஏப்ரல் 15 க்கு பிறகு எல்லா நாள்களும் வெயில், வெப்பம், புழுக்கம், வியர்வைக்கு பின்னர் மழை வாய்ப்பு.

ஏப்ரல் இறுதி வாரத்திலும் கடும் வெயிலுக்கு பின்னர் மாலை இரவு அதிகாலை ஆங்காங்கே மழை வாய்ப்பு.

மே 1 க்கு மேல் 15 க்குள் வங்கக்கடலில் வலுவான நிகழ்வு உருவாகும் இது ஒடிசா, மேற்கு வங்கம் பகுதியில் கடக்கும், நெருங்கி வந்தால் தமிழ்நாட்டிற்கு தாழ்வு மழை கிடைக்கும். இல்லாவிட்டால் வெப்பச்சலன மழை ஆலங்கட்டி மழையாகவும் காற்றுடன் மழையாகவும் ஆங்காங்கே மாலை இரவு அதிகாலை பொழியும்.

நாட்டின் அனைத்து பகுதிக்கும் இந்த ஆண்டு கோடை சராதாரிக்கும் கூடுதல் வெயில் வெப்பம் கொடுக்கும் அதே நேரத்தில் குறைவான பரப்பில் அதிக மழை பொழிந்து ஒதுக்குதல் இருந்து நல்ல இடி மின்னல் மழை கிடைக்கும்.

தென்மேற்கு பருவமழை:

மே இறுதியில் வெப்பச்சலன கோடை மழை தாழ்வு அமைவுகளால் கொடுக்கும். அது தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது போல தெரியும்.
மே 31 அல்லது ஜூன் 1,2 தேதிகளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாழ்வு அமைவுடன் தொடங்கும்.

ஜூன் 1 முதல் ஜூலை 15 முடிய பருவமழை முன்னேற்றத்தில் இருக்கும். ஜூலை 15 முடிய சீரற்ற வானிலை நிலவும், குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் மழையும் குறிப்பிட்ட இடங்களில் குறைவான மழையும் கொடுக்கும். *ஜூலை மாதம் வடக்கு கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா நல்ல மழை தெரிகிறது. கடலோரகர்நாடகா, கோவா, தெற்கு கடலோர மகாராஷ்டிரா புயல் அல்லது தாழ்வு பாதிக்கும் மழை தெரிகிறது ஜூலை இறுதிக்கு மேல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அணைகளுக்கு நீர் வரத்து கூடும்,

மேட்டூர் நிலவரம்:
ஏப்ரல் 11- 22 TMC இருப்பு உள்ளது.
ஏப்ரல் 20 இல் 20 TMC யாகவும்,
ஏப்ரல் 30இல் 18 TMC யாகவும்
மே 31 இல் 13 TMC யாகவும் கோடை மழையை கணக்கில் வைத்தாலும்
ஜூன் 12:இல் 12 TMC யாகவும் குறையும்.
12 நாள் பாசனத்திற்கு மட்டும் நீர் இருக்கும்.
குடிநீர் தேவை இருக்கும்
ஜூன், ஜூலை அணைகளுக்கு பெரிய நீர் வார்த்து கொடுக்கும் வகையில் பருவ மழை இருக்கும் ஆனால் நிரப்பும் அளவிற்கு அதிகம் இருக்காது.

டெல்டா குறுவை சாகுபடி ஆற்று பாசன வாய்ப்பு குறைவு.
ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் கொண்டு மட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியும்.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல நீர்வரத்து கொடுக்கும்.

========================

11 4.2024-4AM
விண்வெளி
அறிவியல்
ந. செல்வகுமார்
வெளியீடு

11.4.24 இன்று
தமிழ்நாட்டின்
கிழக்கு ஓரம்
மேற்கு ஓரம்
சூரியன்
உதயம் மறைவு
நேர விபரம்.

கிழக்கு ஓரம்
பழவேற்காடு
↑ 05.58AM ↓ 06:22PM
81’டிகிரி கிழக்கு.
279டிகிரி மேற்கு
சென்னை
↑ 05.59AM ↓ 06:23PM
ஊட்டி
↑ 06:13 AM ↓ 06:34 PM
மேற்கு ஓரம்
எருமாடு
(நீலகிரி மேற்கு ஓரம் )
↑ 06:14AM ↓ 06:35PM
தமிழ்நாட்டின்
கிழக்கு ஓரத்திற்கும்
மேற்கு ஓரத்திற்கும்
சூரியன் உதிப்பதில்
நேர வேறுபாடு
15 நிமிடங்கள்.

================

மன்னார்குடியில்
சூரியன், சந்திரன்

இன்று 11.4..24 பூமி -சூரியன்
இடைப்பட்ட தூரம்: 149.925 மில்லியன்
கிலோமீட்டர்.

============================

இன்றைய பகல் பொழுது
குறித்த விளக்கம்.

இன்றைய பகல் நேரம்.
06:03AM– 06:23PM
நண்பகல் நேரம்
உச்சிக்கு சூரியன் வருதல்
12.13மணி.

பகல் பொழுது 12 மணிகள் 19 நிமிடங்கள் 38 வினாடிகள்

இரவு பொழுது 11 மணிகள் 40 நிமிடங்கள் 22 வினாடிகள்

இன்றைய (11 ஏப்ரல் 2024) பகல் பொழுது
நேற்று (10 ஏப்ரல் 2024) விட 34 வினாடிகள்
பகல் பொழுது கூடுதல்.

மகர ரேகையில்
இருந்த (22 Dec 2023)விட இன்று
49 நிமிடங்கள் 26 வினாடிகள்
பகல் பொழுது கூடுதல் .

கடகரேகையில்
இருந்த (21 Jun 2023) விட இன்று
25நிமிடங்கள் 18 வினாடிகள்
பகல் பொழுது குறைவு.

இன்று நிழல் இல்லா பகுதி

திருச்செந்தூர் -தூத்துக்குடி இடையே தொடங்கி உள்ளே கங்கைகொண்டன் -நாங்குநேரி இடைப்பட்ட பகுதியில் பாபநாசம், அம்பாசமுத்திரம், கடையம், முக்கூடல், சேரன்மாதேவி, அபிஷேகபட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மணியாச்சி, திருவைகுண்டம் ஆறுமுகனேரி, பழையகாயல்,, ஏரல், காயல்பட்டினம் ஓட்டபிடாரம், பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரம், மானூர் ஆகிய பகுதிகளின் நண்பகல் 12.20 மணிக்கு 90 டிகிரி நேர் செங்குத்தாக சூரியனின் கதிர் விழுந்து அங்கே இருக்கும் பொருள்களில் நிழல் அதன் பாதத்தில் விழும்.

கன்னியாகுமரியில் அதே 12.20 மணிக்கு நிழல் தெற்கு ப்புறம் விழும்.
விருதுநகரில் அதே 12.20 மணிக்கு நிழல் வடக்குப்புறம் விழும்.
திருநெல்வேலியில் ஏப்ரல் 11 இல் நிழல் 90 டிகிரி பாதத்தில் விழும்,

===========================

சந்திரன் மன்னார்குடியில் இன்று சந்திரன்
உதயம் நேரம் காலை 7.58 மணி 68 டிகிரி கிழக்கு

இன்று சந்திரன்
மறையும் நேரம்
இரவு 9.03 மணி
295டிகிரி
வட மேற்கு

இன்று காலை 7.58 மணிக்கு
9.5 % முதல் இரவு 9.03 மணிக்கு
14 % முடிய
அளவிற்கு ஒளி வீசும் வளர்ச்சி பிறை.

நேற்று 10.4.24 சந்திரன் பூமி இடையே தூரம்
3,64,821 கிலோமீட்டர்.

இன்று 11.4.24 சந்திரன் பூமி
இடையே தூரம் 3,70,014
கிலோமீட்டர்.

நேற்று சந்திரன் இருந்த
தூரத்தை விட இன்று
5,213 கிமீ கூடுதல்.

அடுத்து அமாவாசை நேரம்
மே 8 -2024,
காலை 8.51 மணி

அடுத்த முழுநிலவு
பௌர்ணமி நேரம்.
ஏப்ரல் 24 அதிகாலை 5.18 மணி.

11.4.24 வியாழன்

மன்னார்குடி பகுதியில்
இருந்து பார்த்தால்
தெரியும் கோள்கள்
மற்றும் நேரம் :

புதன் கோள்
உதயம் 06.10AM
மறைவு 06.29PM
உச்சி மதியம் 12.20
கருத்து விளக்கம்:
பார்க்க முடியாது.
சூரியன் உதித்த பிறகு உதித்து
சூரியனுக்கு அருகே இருக்கும்
சூரியன் பிரகாச
ஒளியால் பார்க்க முடியாது.

வெள்ளி
உதயம் 05.18AM
மறைவு 05.26PM
உச்சி 11.22AM
குறிப்பு :
5.18AM முதல்
சூரியன் உதிக்கும் நேரம்
வரை அதிகாலை
கிழக்கே அடிவானில் பார்க்கலாம்.
வெளிச்சம் வரும் வரை
பிரகாசமாக பார்க்கலாம்.
பிறகு சூரியஒளி வந்துவிடும்
என்பதால் பார்க்க முடியாது.

செவ்வாய்
உதயம் 04.02AM
மறைவு 3.55PM
உச்சி 10:00AM

சூரியன் உதிக்கும் முன்
கடும் முயற்சி செய்து
கிழக்கே உதிக்கும் போது
வெள்ளி கிராகத்திற்கு
சற்று மேலே
உதிப்பதை பார்க்கலாம்.
5.15 க்கு பிறகு கிழக்கே
வெளிச்சம் வந்துவிடும்
பார்ப்பது சற்று கடினம்.

வியாழன்
உதயம் 07.49AM
மறைவு 08.19PM
உச்சம் 02.04PM

சூரியன் மறைந்த பிறகு மேற்கே
வியாழன் மறையும் நேரம்
இரவு 08.19வரை
பார்க்க நன்றாக இருக்கும்.

சனி
உதயம் 04.03AM
மறைவு 3.54PM
உச்சி 9.58 AM
உதிக்கும். போது 5.15 வரை கிழக்கே பார்க்கலாம்
பிறகு வெளிச்சம் சூரியன் ஒளியால்
பார்க்க முடியாது.

யுரேனஸ்
உதயம் 07.56AM
மறைவு 8.26PM
உச்சி 02.11PM
பார்ப்பது கடினம்.

நெப்டியூன்
உதயம் 04.48.AM
மறைவு 4.48PM
உச்சி 10.48AM
பார்ப்பது மிகவும் கடினம்.

பூமி
நாம் வாழ்வது.
அறிந்ததே.

ந.செல்வகுமார்
11.04..2024-4AM
வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *