25.11.2024-4AM வெளியீடு.காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் மழை வானிலை மாறி அமையும்.

*ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை. அதிகாரப் பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும். 25.11.2024-4AM வெளியீடு.
காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் மழை வானிலை மாறி அமையும்.

நீண்ட கால அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்ற போதிலும் இதில் சற்று விளக்கமாக வானிலை அறிக்கை சமர்ப்பிக்கிறேன்
*
A-வானிலை அமைப்பு :

வங்கக்கடலுக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் MJO வந்தது
,நவம்பர் இறுதி வாரம் முதல் டிசம்பர் இறுதி வாரம் முடிய அடுத்தடுத்த வலுவான நிகழ்வுகளால் நிறைய மழை தரும்.

அதன் அடிப்படையில் அடுத்தடுத்த நிகழ்வு நெருங்கும் நாள்கள்
*
*நவம்பர் 18 சுமத்ரா தீவு வந்த வளிமண்டல சுழற்சி நவம்பர் 23 சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்தது, நவம்பர் 24 நன்கமைந்த தாழ்வு பகுதி அதாவது தீவிர தாழ்வு பகுதியாக உருவெடுத்தது, இது நவம்பர் 25 திங்கள் அதிகாலை 2.30 மணியளவில் ஹம்மந்தோட்டா துறைமுகத்திற்கு கிழக்கு தென் கிழக்கே 500கிலோமீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு தென் கிழக்கே 675 கிலோமீட்டர் தொலைவிலும், யாழ்பாணத்திற்கு தென் கிழக்கே 850 கிலோமீட்டர் தொலைவிலும் வேதாரண்யத்திற்கு தென் கிழக்கே 925 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு தென் கிழக்கே 1050 கிலோமீட்டர் தொலைவிலும்,சென்னைக்கு தெற்கு தென் கிழக்கே 1175 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வேதாரண்யத்திற்கு 850 கிலோமீட்டர் தொலைவில் நவம்பர் 25 மதியம் அல்லது மாலை வந்ததும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் கடலோரம் மழை தொடங்கும்.

நாகப்பட்டினத்திற்கு 650 கிலோமீட்டர் தொலைவில் நவம்பர் 26 அதிகாலை இருக்கும் போது சென்னை, கள்ளக்குறிச்சி,திருச்சி, மதுரை, தேனி வரை மழை முன்னேறி இருக்கும். அதே நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர்,தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை தொடங்கிவிடும்.

நவம்பர் 26 மதியம் மாலை வேதாரண்யத்திற்கு தென் கிழக்கே 500 கிலோமீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலமாக இருந்துகொண்டு தமிழ்நாடு முழுவதும் மழை தொடக்கும் அதே நேரத்தில் கடலோர மாவட்டங்கள் திருவள்ளூர் முதல் தூத்துக்குடி வரை வரையும் உள்ளே சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை வரை தொடர் கன, மிக கனமழையை தொடக்கி,
விழுப்புரம் முதல் இராமநாதபுரம் வரை இடைப்பட்ட புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொடர் மிக கனமழையை கொடுக்கும்.

நவம்பர் 27 காலை வேதாரண்யத்திற்கு தென் கிழக்கே இருந்துகொண்டு தமிழ்நாட்டில் தொடர் மழை பொழிவை கொடுத்துக்கொண்டு சென்னை முதல் இராமநாதபுரம் வரையும் உள்ளே திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை வரை இடைப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தொடர் கனமழை முதல் அதிகன மழை வரை பொழியும். அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் தொடர் அதீத மழை பொழியத்தொடங்கி நிகழ்வு டெல்டா மாவட்டங்களை நெருங்கி நவம்பர் 29 செயலிழக்கும் வரை டெல்டா மாவட்டங்கள் & வட கடலோர மாவட்டங்களில் நவம்பர் 27,28,29 தொடர் கனமழை பொழிவை கொடுக்கும். குறிப்பாக புதுச்சேரி கடலூர் அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர்,டெல்டா மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 26 முதல் 29 முடிய நான்கு நாள்கள் தொடர் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு நாள்கள் அதிகன மழை பொழிவை கொடுக்கும் என்பதால் வெள்ளம் பாதிக்க அதிக வாய்ப்பு. விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு வெள்ளம் பாதிக்க வாய்ப்பு.

உச்சபட்ச எச்சரிக்கை தேவைப்படும் பகுதிகள்.

நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் வழியாக உள் மாவட்ட வெள்ள நீர் வடிய வேண்டும் என்பதாலும், இந்த மாவட்டங்களில் 4 நாள்கள் தொடர் கனமழை, மிககன, அதிககன மழை பொழிவு இருக்கும் என்பதால் மேற்கண்ட மாவட்டங்களில் கடும் முன் எச்சரிக்கை தேவைப்படுகிறது.
குறிப்பாக கடலூர் முதல் புதுக்கோட்டை வரை உள்ள மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் கடும் வெள்ளம் பாதிக்கும்

நவம்பர் 25 முதல் டிசம்பர் 2 முடிய நிகழ்வு தமிழ்நாடு நெருங்கி, நீடித்து நின்றும், கடந்தும், அரபிக்கடல் சென்றும் தொடர்ச்சியாக எல்லா நாள்களும் மழை பொழியும் இதில் 4 நாள்கள் இடைநில்லா கனமழை தரும்.இதில் பாதிக்கும் மாவட்டங்கள் பெயர் மட்டும் குறிப்பிட்டுள்ளேன் ஆனால் அனைத்து மாவட்டங்களுக்கும் நிறைய மழை பொழியும்.

நிகழ்வு FENGAL (உச்சரிப்பு Feinjal ) புயலாக உருவெடுத்தாலும் கடைக்கும் முன் செயலிழந்து தமிழ்நாடு கடந்து அரபிக்கடல் போகும் பாதிக்கும் காற்று இல்லை, காற்று அச்சம் வேண்டாம்.

(2)தொடர்ந்து வரும் அடுத்த நிகழ்வு.டிசம்பர் 4 முதல் 13 முடிய.-அதுவும் வலுவான மழை தருவதே
அதுவும் தற்போதைய நிகழ்வு போலவே அதிக மழை, நிறைய மழை தரும்.

(6)டிசம்பர் 13 முதல் 24 முடிய வலுவானது

(7)டிசம்பர் 26 முதல் 30 முடிய சற்று வலுவானது.

வானிலை அறிவியல் மற்றும் உழவன் Youtube இல் விரிவாக அறிக்கை பார்த்து பயன்பெறவும்.

ந. செல்வகுமார்,
மன்னார்குடி.
25.11.2024-4AM

One comment

  1. Sir.ungaloda vanilai arikkai migavum sirappaga ulladhu.melum thodarattum vazhththu gal… thank you.by s.vetrivel.dhatsamayam Malaysia.+601151711043.nirandaram.mannargudi614717.kandakkirayam

Leave a Reply to S.vetrivel Cancel reply

Your email address will not be published. Required fields are marked *