2023 ஜூன் 26 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை
ஒடிசா மேற்குவங்கம் இடைப்பட்ட ப தாழ்வு பகுதி ஜார்கண்ட், சட்டிஸ்கர் நோக்கி நகர்கிறது.
வட இந்திய நிலப் பகுதியிலும் காற்று சுழற்சி நீடிக்கிறது.
அதனுடன் இணைந்த ராஜஸ்தான் வரை தென் மேற்கு பருவமழையை எடுத்து செல்ல இருக்கிறது.
இரு வேறு காற்று சுழற்சிகள் குஜராத் மகாராஷ்ட்ரா கோவா வழியாகவும் காற்றை ஈர்க்கிறது.
கன்னியாகுமரி முதல் குஜராத் வரை கடலோரம் வழியாக தென்மேற்கு பருவக்காற்று பரவலாக நுழைகிறது.
இதில் வடக்கு கர்நாடகா வழியாக கூடுதல் சதவீதம் நுழைகிறது.
கேரளா கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை லேசாக தொடங்கி ஜூன்26,27 தேதிகளில் சற்று வலுவாக இருக்கும்.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்(நீலகிரி, வால்பாறை) ஜூன் 25 தொடங்கி ஜூன் 26,27 தேதிகளில் சற்று லேசான மிதமான பருவமழை இருக்கும்.
தமிழ்நாட்டில் மாலை இரவு வெப்பச்சலன மழை அனைத்து மாவட்டங்களுக்கும் இருக்கும்.
ஜூன் 27:செவ்வாய் மாலை கணவாய் பகுதிகளில் லேசான மழை தெரிகிறது.
மலை மறைக்கும் பகுதியாகிய ஈரோடு வடக்கு, மதுரை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை உறுதி.
கிருஷ்ணகிரி,தர்மபுரி தொடங்கி வங்கக் கடலோர வரை மாலை இரவு இடிமழை கூடுதல் பரப்பில் இருக்கும்.
தினசரி மாலை இரவு மழை பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே இருக்கும்.
மேற்கு மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் அனைத்து உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பொழிவு இருக்கும்.
*ஜூன் 26 காற்று பகுதி மேகம் வந்து குளிர்ந்த வானிலை தூறல் 2023 ஜூன் 25 ஞாயிறு
அதிகாலை ஆய்வறிக்கை:
வங்கக்கடல் மேலடுக்கு சுழற்சி ஒடிசா மேற்குவங்கம் இடைப்பட்ட பகுதியில் தாழ்வு பகுதியாகியது.
வட இந்திய நிலப் பகுதியிலும் காற்று சுழற்சி நீடிக்கிறது.
அதனுடன் இணைந்த ராஜஸ்தான் வரை தென் மேற்கு பருவமழையை எடுத்து செல்ல இருக்கிறது.
இரு வேறு காற்று சுழற்சிகள் குஜராத் மகாராஷ்ட்ரா கோவா வழியாகவும் காற்றை ஈர்க்கிறது.
கன்னியாகுமரி முதல் குஜராத் வரை கடலோரம் வழியாக தென்மேற்கு பருவக்காற்று பரவலாக நுழைகிறது.
இதில் வடக்கு கர்நாடகா வழியாக கூடுதல் சதவீதம் நுழைகிறது.
கேரளா கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை லேசாக தொடங்கி ஜூன் 25 26 தேதிகளில் சற்று வலுவாக இருக்கும்.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்(நீலகிரி, வால்பாறை) ஜூன் 25 26 தேதிகளில் சற்று லேசான மிதமான பருவமழை இருக்கும்.
தமிழ்நாட்டில் மாலை இரவு வெப்பநிலை அனைத்து மாவட்டங்களுக்கும் இருக்கும்.
மலை மறைக்கும் பகுதியாகிய ஈரோடு வடக்கு, மதுரை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை உறுதி.
கிருஷ்ணகிரி,தர்மபுரி தொடங்கி வங்கக் கடலோர வரை மாலை இரவு இடிமழை கூடுதல் பரப்பில் இருக்கும்.
தினசரி மாலை இரவு மழை பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே இருக்கும்.
மேற்கு மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் அனைத்து உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பொழிவு இருக்கும்.
ஜூன் 26 காற்று பகுதி மேகம் வந்து குளிர்ந்த வானிலை வாய்ப்பு தெரிகிறது.
கூடுதல் மழை வாய்ப்பு நாள்கள்
ஜூலை 1இல் அந்தமான் கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகி
ஜூலை 2ல் அந்தமான் ஆந்திர பிரதேசம் இடைப்பட்ட பகுதியில் அமைந்து ஜூலை 3 முதல் தென்மேற்கு பருவமழையை மீண்டும் தொடங்கும்
ஜூலை 3 ஆந்திர ஒடிசா இடைப்பட்ட பகுதியில் தாழ்வு நிலையாகி ஜூலை4,5,6 தேதிகளில் ஒடிசா மேற்குவங்கம் இடைப்பட்ட தாழ்வு பகுதியில் பகுதியாகி ஜூலை 4 5 6 7 தேதிகளில் தென்மேற்கு பருவமழையை கேரளாவில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரப் படுத்தும் போது தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் சாரல் மழை கிடைக்கும் காற்று பகுதிக்கும் மழை கிடைக்கும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழிவு கிடைக்கும்.
அதற்கு அடுத்த நிகழ்வு
ஜூலை 10 தேதி வாக்கில் புதிய நிகழ்வு உருவாகி ஜூலை 12 முதல் 15 வரை மீண்டும் கேரளாவில் தென்மேற்கு பருவமடைய தீவிரப்படுத்தும் அப்போதும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் மலைப்பகுதிகள் காற்று பகுதிகளில் மழை கிடைக்கும்.
ஜூலை 15 வரை சீரான மிதமான சற்று கனமான தென்மேற்கு பருவமடைக்கு மட்டுமே வாய்ப்பு.
டெல்டா உள் பகுதி உட்பட ஒதுக்கி ஒதுக்கி நல்ல மழை கிடைக்கும்.
காற்றுப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் வறண்ட வானிலையும் உண்டு வானிலை மாறி மழையும் உண்டு என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் மாறும் எல்லாம் கலந்து இருக்கும். பிபப்பர் ஜாய் புயல் தற்பொழுது உங்களை குழப்பத்தில் தள்ளி இருக்கிறது. படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை.
வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.
குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.
வாய்ப்பு தெரிகிறது.*
ந. செல்வகுமார்.
26.6.2023-4AM வெளியீடு