பருவமழை இன்று எங்கே?அடுத்த மேலடுக்கு சுழற்சியால் இடிமழை எங்கெங்கே?

2023 ஜூலை 7 வெள்ளி அதிகாலை ஆய்வறிக்கை

வங்க கடல் மேலடுக்கில் நீடித்த காற்று சுழற்சி வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா இடைப்பட்ட கடற் பகுதியில் மேலடுக்கு சுழற்சியாகவே நுழைந்து மத்திய பிரதேசம் உத்திர பிரதேசம் பகுதியில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இனிமேல் கேரளா கர்நாடகா வழியாக நுழையும் காற்று கோவா மகாராஷ்டிரா குஜராத் வழித்தடத்தில் மாறும்

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் கணவாய் பகுதிகளிலும் காற்று பகுதிகளிலும் தொடரும் மழை இன்று காலை முதல் படிப்படியாக குறைந்து இன்று மதியம் இந்த சுற்று மழை முற்றிலும் விலகும்.

அதற்கு அடுத்த நிகழ்வு

ஜூலை 9 தேதி வாக்கில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகி ஜூலை 9 முதல் 14 வரை தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் முதல் வங்கக் கடலோரம் வரை மாலை இரவு இடி மழை ஆங்காங்கே ஆங்காங்கே கூடுதல் பரப்பில் கிடைக்கும். காற்று பகுதிக்கும் லேசான மழை பொழிவு கிடைக்கும்.

ஜூலை 9 முதல் ஜூலை 13 வரை நீலகிரி தொடங்கி திருவள்ளூர் வரை திருச்சிக்கு வடக்கே உள்ள மாவட்டங்கள் ஈரோடு நாமக்கல் திருச்சி வடக்கு கடலூர் மயிலாடுதுறை பகுதிகளும் அப்பகுதிக்கு வடக்கேயும் கூடுதல் பரப்பில் நல்ல மழை வாய்ப்பு இருக்கிறது.

காற்றுப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் வறண்ட வானிலையும் உண்டு வானிலை மாறி மழையும் உண்டு என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் மாறும் எல்லாம் கலந்து இருக்கும்.

ஜூலை 9 முதல் புதிய மேலடுக்கு சுழற்சி தமிழ்நாட்டில் வெப்ப சலன மழையை கூடுதல் பரப்பில் அங்கங்கே ஒதுக்கி ஒதுக்கி கொடுக்கும். அந்த மழை மேற்கு மாவட்டங்களில் தொடங்கி வங்க கடலோரம் நிறைவடையும். ஜூலை 9 முதல் கோயம்புத்தூர் வடக்கு, ஈரோடு, திருப்பூர் வடக்கு , கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் திருச்சி டெல்டா மாவட்டங்கள் அரியலூர் பெரம்பலூர் கடலூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் நல்ல வழி தெரிகிறது.

அடுத்தடுத்த நாட்களில் புதுக்கோட்டை சிவகங்கை விருதுநகர் தேனி மாவட்டங்களுக்கும் மழை பொழிவு கிடைக்கும்.

அதைவிட ஆகஸ்ட் சிறந்த மழை கொடுக்கும்.

செப்டம்பர் அக்டோபர் உபரி நீர் கொடுக்கும் வகையில் மழை இருக்கும்.

படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை.*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *