இருக்கும் 2023 தென்மேற்கு பருவமழை நாள்கள் எப்படி?-2023 வடகிழக்கு பருவமழை கால மழை எப்படி?

இருக்கும் 2023 தென்மேற்கு பருவமழை நாள்கள் எப்படி?
*2023 வடகிழக்கு பருவமழை கால மழை எப்படி?

அக்டோபர் 20 வரை தொடரும் தென்மேற்கு பருவமழை:

வானிலை அமைப்பான இரு வேறு காற்று சுழற்சிகள்;
அரபிக்கடலில் லட்சத்தீவிற்கு தெற்கு புறம் கடலோடு இணைந்த காற்று சுழற்சி நீடிக்கிறது.

அதேபோல் இலங்கை மற்றும் தென் தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களை ஒட்டி கீழ் அடுக்கு சுழற்சி நீடிக்கிறது.

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் இருவேறு சுழற்சிக்கு இடையே இணைப்பு சுழற்சியும் தமிழ்நாட்டின் நீடிக்கிறது.

வட இந்திய நிலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக ஒரே வலுவான உயர் அழுத்தம் நீடிக்கிறது.

உயர்அழுத்த குளிரலை தமிழ்நாட்டின் ஆந்திர எல்லையோர மாவட்டங்கள் வழியாக தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக அரபிக் கடல் நோக்கி பயணிக்கிறது.

அரபிக்கடலில் இருந்து தெற்கு கேரளா, கன்னியாகுமரி மற்றும் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை வழியாக கடல் நீராவி க்காற்று இலங்கை தென்தமிழக காற்று சுழற்சி நோக்கி பயணிக்கிறது.

இதனால் தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் டெல்டா மாவட்டங்கள் காற்று புகாத சுழலும் மையப் பகுதியாக உள்ளது.

வானிலை அமைப்பு எதிர்பார்ப்பு

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் காற்று சுழற்சிகளை இணைக்கும் இணைப்பு சுழற்சி
இன்று விலகும்.

இதன் காரணமாக அரபிக் கடல் சுழற்சிக்கு தனியாக மாநில குளிர் காற்று பிரிந்து கிருஷ்ணகிரி தர்மபுரி மற்றும் தெற்கு கர்நாடகா வழியாக அரபிக் கடலை நோக்கியும் வட உள் மாவட்டங்கள் வழியாக பாலக்காடு கணவாய் வழியாக அரபிக்கடல் நோக்கியும் தென்மாவட்டங்கள் வழியாக அரபிக் கடல் நோக்கியும் பயணிக்கும்.

இலங்கை அருகே நீடிக்கும் காற்று சுழற்சிக்கு வடகடலோரம் வழியாக டெல்டா மாவட்டங்கள் , கடலோரம் வழியாக இலங்கைக்கு தெற்கு புறமாக சுழல பயணிக்கும்.

இரு வேறு நிகழ்வும் விலகி செல்ல தொடங்கும்.
அரபிக்கடல் தாழ்வு நிலை வடக்கு கேரளா தெற்கு கர்நாடகாவிற்கு மேற்கு புறமாக அப்பால் அமைந்து அக்டோபர் 17 தாழ்வு பகுதியாகி ஓமன் நாட்டை நோக்கி திசை மாறி தீவிரமடைந்து அக்டோபர் 24 இல் தேஜ் புயலாக ஓமன் நாட்டை கடக்கும்.

வங்கக்கடல் காற்று சுழற்சி அந்தமான் பகுதி நோக்கி விலகி பிறகு தீவிரமடைந்து அக்டோபர் 23,24, 25 இல் ஒடிசா பகுதியை நோக்கி சாதாரண நிகழ்வாக திசை மாறிச் செல்லும்.

வடகிழக்கு பருவமழையை தொடக்கும் நிகழ்வு:

அக்டோபர் 25க்கு மேல் அந்தமான் கடற்பகுதியில் தாழ்வு பகுதி உருவாகி அக்டோபர் 28 29 தேதிகளில் வடகிழக்கு பருவ மழையை தொடக்கும் நிகழ்வு தாழ்வு பகுதியாக தமிழகம் நெருங்கும்.

அக்டோபர் 15 16 17 மழை வாய்ப்பு மாவட்டங்கள்:

அக்டோபர் 14 கேரளா தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வட உள் மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்கள் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பொழிவை கொடுத்திருக்கும் நிலையில்,

*அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடஉள் மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி
மழை பொழிவை பெறும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கும் தென்மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும்.

*அக்டோபர் 16, 17 ஆகிய நாட்களில் கிருஷ்ணகிரி தர்மபுரி மற்றும் தெற்கு கர்நாடகா உட்பட கேரளா மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் தென் மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்கள் அதனை ஒட்டி உள்ள வடமாவட்டங்கள் வட உள் மாவட்டங்கள் நல்ல மழை பொழிவு பெறும்.

அக்டோபர் 16 17 டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்கள் கனமழைக்கு வாய்ப்பு.

ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பொழியும்.

அக்டோபர் 16 17 டெல்டா மாவட்டங்களில் உறுதியாக மழை பொழியும்.

அக்டோபர் 18 முதல் 26 வரை தீவிரமழைக்கோ தொடர்மழைகோ பரவலான மழைக்கோ வாய்ப்பில்லை.

அக்டோபர் 18 முதல் 25 வரை இரவில் பனிப் பொழிவும் பகலில் தெளிவான வானமும் காணப்படும்.

கடல் சார்ந்த அமைப்பு எல்-நினோ நேர்மறை IOD மற்றும் கடல் நீரோட்டங்கள் அமைப்பு எப்படி?

பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பக்கம் அதாவது வட அமெரிக்கா தென் அமெரிக்கா இடைப்பட்ட மெக்ஸிகோ பனாமா கால்வாய் பகுதிகளில் வெப்பநிலை உயர்ந்திருக்கிறது. இப்படி உயரும் . இதனை எல் நினோ என்று அழைக்கப்படும்.

பொதுவாக எல்- நினோ இருந்தால் ஆசியாவில் மழை குறையும் என்று மக்களிடம் பொதுவான என்ன ஓட்டமாக இருக்கிறது.

எல்- நினோ இருந்தாலும்
ஆசிய பகுதியில் வெப்பம் உயர்ந்தே காணப்படுகிறது. குறிப்பாக பிலிப்பைன்ஸ் ஒட்டிய பசிபிக் கடல் பகுதி,
தென் சீன கடற்பகுதி மற்றும் தாய்லாந்து வளைகுடா பகுதி வெப்பநிலை உயர்ந்தே காணப்படுகிறது. இந்த வெப்ப உயர்வு தாழ்வு நிகழ்வுகள் உருவாக சாதக அமைப்பை ஏற்படுத்தும்.

அதேபோல் அந்தமான் இலங்கை இடைப்பட்ட கடற் பகுதியும் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது.
கடல் நீரோட்டமும் வெப்பநிலையை உயர்த்த சாதக ஓட்டமாக அமைந்திருக்கிறது.

குமரிக்கடல் பகுதி நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதி குறிப்பாக மாலத்தீவு சுற்றுவட்டார கடற்பகுதி மாலத்தீவு சோமாலியா இடைப்பட்ட கடற் பகுதி வெப்பநிலை மிகவும் உயர்ந்திருக்கிறது.
இந்த கடல் அமைப்பு வடகிழக்கு பருவமழையை தீவிரமாகவே வைத்திருக்கும்.

இந்தக் கடல் அமைப்பு அடுத்தடுத்த நிகழ்வுகள்
தென்சீனக்கடல் பகுதியில் இருந்து உருவாகி அந்தமான் பகுதிக்கு வந்து தீவிரமடைந்து நல்ல மழை பொழிவை கொடுத்து அரபிக்கடல் குமரிக்கடல் இலங்கை மாலத்தீவு என்று கடந்து நல்ல மழை பொழிவை கொடுக்கும் அமைப்பாகவே இருக்கும்.

2023 வடகிழக்கு பருவமழை தொடக்கம்.

அக்டோபர் 28 29 தேதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும்.

தொடக்கத்தில் சாதாரண காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவ மழையை தொடக்கிவிட்டு நிகழ்வு அரபிக் கடல் நோக்கி பயணிக்கும்.

2023 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவ மழை:

நவம்பர் மாதத்தில் மூன்று நிகழ்வுகளுக்கு சாதகம் உண்டு.

முதல் நிகழ்வு சாதாரண நிகழ்வாக அமைந்து நல்ல மழை பொழிவை கொடுத்து தொடங்கும்.

பத்து நாட்களுக்கு ஒரு நிகழ்வு வீதம் உருவாகி நீடித்து நின்று மழை பொழிவை கொடுக்கும்.

நிகழ்வுக்கு நிகழ்வு இடைவெளியும் உண்டு. நிகழ்வு நெருங்கி வரும் பொழுது மழை படிவை தீவிரப்படுத்தி நல்ல மழை பதிவை கொடுத்து தமிழகம் ஊடாக பயணித்து அரபிக் கடலிலும் பயணிக்கும் சாதக அமைப்பாக வளிமண்டலம் மற்றும் கடல் அமைப்புகள் இருக்கிறது.

நவம்பர் 10 தேதிக்கு மேல் உருவாகும் நிகழ்வும் நவம்பர் 20 தேதிக்கு மேல் உருவாகும் நிகழ்வும் தமிழ்நாடு புதுச்சேரி கேரளா , ஆந்திரப் பிரதேசம், தெற்கு கர்நாடகா அடங்கிய ஒட்டுமொத்த பகுதிக்கும் சிறப்பான மழை பொழிவை கொடுக்க வாய்ப்பு தெரிகிறது.

டிசம்பர் முன் 15 தேதிகளில் வலுவான நிகழ்வு உருவாக்கி அனைத்து மாவட்டங்களுக்கும் நல்ல மழை பதிவை கொடுக்கும் அமைப்பு தெரிகிறது.

நவம்பரில் மூன்று நிகழ்விற்கும் டிசம்பரில் இரண்டு நிகழ்விற்கும் அதாவது டிசம்பர் 15 வரை பனிப்பொழிவு இடையூறு முற்றிலுமாக இருக்க வாய்ப்பு இல்லை.

இதன் காரணமாக நவம்பர் மற்றும் டிசம்பர் 15 தேதி உருவாகும் நிகழ்வுகள் தமிழகம் ஊடாக பயணித்து அரபிக் கடலிலும் பயணிக்கும் இதனால் அனைத்து மாவட்டங்களுக்கும் நல்ல மழை பொழிவு கிடைக்கும்.

பனிப்பொழிவு இடையூறு இருக்குமா?.

டிசம்பர் 15க்கு மேல் இமயமலையில் அமைய இருக்கும் மேற்கத்திய இடையூறு பனிப்பொழிவை
ஆந்திர பிரதேசம் கர்நாடகம் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் கேரளாவின் வடகோடி மாவட்டங்களில் ஏற்படுத்தும் என்று தெரிகிறது.


அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் தென்கடலோர மாவட்டங்கள் தென் உள் மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் பனிப்பொழிவின் பாதிப்பு
நிகழ்வு நெருங்கும் நேரத்தில் விலகி இருக்கும்.

டிசம்பர் 20க்கு மேல் தொடங்கும் நிகழ்வுகள் இலங்கை மன்னார்வளைகுடா குமரிக்கடல் தென் தமிழ்நாடு வழித்தடத்தை அமைத்துக் கொண்டு அரபிக் கடல் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பயணிக்கும். டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் நல்ல மழை பதிவை கொடுக்கும்..

2024 ஜனவரி 10 வரை மழை தொடர வாய்ப்பு:

இலங்கை , குமரிக்கடல் நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் ,மாலத்தீவு வழியாக நிகழ்வு மேற்கு நோக்கி பயணித்து 2024 ஜனவரி 10 வரை தென் தமிழ்நாட்டில் நல்ல மழை பொழிவையும், டெல்டா உள்ளிட்ட கடலோரம் மழை பொழிவையும் கொடுக்கும்.

2023 அக்டோபர் 28 முதல் டிசம்பர் 15 வரை பனிப்பொழிவின் இடையூறு இருக்காது என்பதால் ஆந்திரப்பிரதேசம் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், கர்நாடகா, கேரளா, மாஹே, ஏனாம் அடங்கிய ஒட்டுமொத்த பகுதி சராசரிக்கு கூடுதல் மழை பொழிவை கொடுக்கும்.

டிசம்பர் 15 க்கு மேல் பனிப்பொழிவு இடையூறு அவ்வப்பொழுது இருக்கும் என்பதால் அது நிகழ்வு வரும் நேரத்தில் பனிப்பொழிவை பின்னுக்கு தள்ளி தென் தமிழ்நாட்டிற்கும் டெல்டா விற்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் மத்திய தமிழ்நாட்டிற்கும் நல்ல மழை பொழிவை கொடுக்கும்.

2023 வடகிழக்கு பருவமழை காலத்தில் வலுவான நிகழ்வு ஒன்றும்
பிற நிகழ்வுகள் தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதி என்ற அமைப்பை ஏற்படுத்தி அதிகம் மழை பதிவை தரும்.

ஒட்டுமொத்த 2023 வடகிழக்கு பருவமழை
கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் சராசரி மழை பொழிவையும் பிற அனைத்து மாவட்டங்களும் சராசரிக்கு கூடுதல் மழை பொழிவையும்
டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் சராசரிக்கு மிகவும் கூடுதலான மழை பொழிவையும் கொடுக்கலாம்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளின் மேற்கு கிழக்கு உச்சி உட்பட அணைகள் நீர் பிடிப்பு பகுதிகள் உட்பட நல்ல மழை பதிவை பெறும். அது தென்மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிகவும் கூடுதலாக இருக்கும். தென்மேற்கு பருவ மழை பற்றாக்குறையை வடகிழக்கு பருவமழை சரி செய்து சராசரிக்கு கூடுதல் மழை கொடுக்கும்.

ந செல்வகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *