இன்றும் மழை கொட்டும். உங்களுக்கு எப்படி?

வணக்கம். செல்வகுமாரின், அதிகாலை வானிலை ஆய்வு அறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையை, பார்ப்போம். இரண்டாயிரத்தி இருபத்தி மூன்று, May இரண்டு, செவ்வாய்க்கிழமை, அதிகாலை நிலவரப்பதிவு. காற்று சுழற்சி, தமிழக நிலப்பகுதி மேல், நீடித்துக் கொண்டிருக்கிற நிலையில,

அரபிக் கடலின் உயரழுத்த காற்றும், நிலநடுக்கோட்டை இந்திய பெருங்கடல் வெப்ப நீராவி காற்றும், வங்கக்கடல் உயரழுத்தம் மற்றும் அதிலிருந்து தரை, கடல் மீது பயணிக்கக்கூடிய நீராவியை சுமந்து வரக்கூடிய காற்றும், எல்லாமே

எல்லாமே தமிழ்நாட்டுல குவியல் ஏற்பட்டிருக்கிற காரணத்தினால, அதாவது, கிழக்கு, மேற்கு காற்று, தென்மேற்கு காற்று, தெற்கு காற்று என்று, நான்கு முறையும், காற்று குவிதல், நடைபெற்றுக் கொண்டிருக்கிற காரணத்தினால, அதிக நீராவியை, சுமந்து வரக்கூடிய, காற்று இருக்கிற காரணத்தினால,

மழைப்பொழிவு பெய்யும் இடத்துல, வழுத்து, பலத்த மழையாக பொழிந்து கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி முதல், திருவள்ளூர் வரைக்கும் உள்ள, அனைத்து மாவட்டங்களிலும், நேற்று, தொடங்கிய மழை, இன்னும், தொடர்ச்சியாக, பெய்து கொண்டே இருக்கிறது. கனமழை பொழிந்து, ஓய்ந்தாலும், தூறல், தொடர்ந்து கொண்டிருக்கிறது

தூறலானது, இன்று காலையும் நீடிக்கும். குறிப்பாக, வட கடலோர மாவட்டங்கள்ல, திருவள்ளூர், சென்னை, மற்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், கடலோர பகுதிகள்ல, கனமழை பொழிவு, நீடித்துக் கொண்டிருக்கிறது. கடல் ஓர பகுதிகள்ல

அதே போல, சிவகங்கை மாவட்டத்திலேயும், பரவலாக பொழுது விடிந்தும், மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலான உள் மாவட்டங்கள்ல, ஆங்காங்கே, ஆங்காங்கே மழைப்பொழிவு, தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையில, பொழுது விடிந்ததும், சற்று தீவிரம், குறைந்து தூறலாக, ஒன்பது மணி வரை, நீடித்துக் கொண்டிருக்கும்

ஒன்பது மணிக்கு பிறகு, ஒரு சில இடங்கள்ல தூறலாம். ஆனால், தீவிரம் என்பது, காலைப் பொழுதில, சற்று குறைந்திருக்கும். பிறகு, மெல்ல வெப்பம் உயர, உயர, மதியத்திற்கு மேல், மீண்டும், மழைப்பொழிப்பு தொடங்கும். அனைத்து மாவட்டங்களிலுமே,

நேற்று போல், இன்றைக்கும் கனமழை பொழிவு உண்டு. நேற்றைய விட குறைவான மழைப்பொழிவு இருக்கும் என்று, நேற்றைய அறிக்கையில, பதிவு செய்த நிலையில, இன்றைய ஆய்வறிக்கையின்படி, நேற்றைக்கு சமமான அளவு, மழைப்பொழிவு, இன்றைக்கும் இருக்கும்

நேற்றைக்கு ஒதுக்கிய இடத்திலும், நேற்றைக்கு, குறைவாக பெய்த இடத்திலும், இன்றைக்கு கனமழை பொழிவு உண்டு. கன்னியாகுமரி முதல், திருவள்ளூர் வரைக்கும், மேற்கு நீலகிரி முதல், கோடியக்கரை முனை வரைக்கும் உள்ள, அனைத்து பகுதிகளுக்குமே, மழைப்பொழிவு, பரவலாகவே இருக்கும் இன்றைக்கும்
00:02:16
காலை, கடலோரம் தொடர்ந்து கொண்டிருக்கக்கூடிய மழை, கடலோரம் ஓய்ந்து, உள்ளே மதியம் தீவிரமடைந்து, மதியமே கடலோரமும் தீவிரமடைந்து, உள்ளே மாலை தீவிரமடைந்து, மேலும் தீவிரமடைந்து, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்ல, மாலை முன்னிரவு, முன்னிரவு நேரங்கள்ல, நேற்றைய போல்,

நேற்று போலவே, கனமழை பொழிவை கொடுத்து, மீண்டும், மேற்கிலிருந்து, கிழக்கு நோக்கி திரும்பிய, அனைத்து உள் மாவட்டங்களையும் பொழிந்து, நேற்று போல், இன்றைக்கு, அதிகாலை பொழிவது போல, மழைப்பொழிவை, அதிகாலையில, கடலோரம் வந்து கொடுக்கும். ஆக, நாளையும், இப்படி மழைப்பொழிவு, தொடர வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருந்தால்,

பொழிவு, நாளை குறைவாக இருக்கும். நேற்று போல், இன்றைக்கு மழை உறுதி என்பதில், மாற்றமில்லை. மழை ஓய்ந்து, மீண்டும் மதியத்திற்கு மேல், தீவிரமடையும். வரக்கூடிய, நான்காம் தேதி வரைக்கும், இந்த மழைப்பொழிவு, இந்த காற்று சுழற்சியால, அடுத்த காற்று சுழற்சி, ஐந்து

ஐந்தாம் தேதி உருவாக்கி, ஏழாம் தேதி வரைக்கும், மழைப்பொழிவை கொடுத்துக் கொண்டிருக்கோம். எட்டாம் தேதி வாக்கிலே, அந்த காற்று சுழற்சியால, காற்றழுத்த தாழ்வு பகுதியாக, தீவிரமடையும் பொழுது, அரபிக்கடல் காற்று, தமிழ்நாட்டிலே நுழைஞ்சு,

மழைப்பொழிவை, எட்டாம் தேதி வரை தொடர வாய்ப்பிருக்கிறது. ஆக, இந்த காற்று சுழற்சியால், நான்காம் தேதி வரைக்கும், அடுத்த காற்று சுழற்சியால், தொடர்ச்சியாக, எட்டாம் தேதி வரைக்கும், மழைப்பொழிவு இருக்கிறது. ஒன்பதாம் தேதிக்கு மேல், தீவிரமடைந்து, மழைப்பொழிவு பரப்பு குறைந்து,

மழைப்பொழிவு தொடர்ந்து கொண்டிருக்கும். பத்தாம் தேதி, அதைவிட குறைந்து, மழைப்பொழிவு, பரப்பு குறைந்து, தொடர்ந்து கொண்டிருக்கும். பதினோராம் தேதி, மண்டலமாகி, பன்னிரண்டாம் தேதி, புயல் ஆகி, பதிமூன்றாம் தேதி விலகி, வங்கதேசம் மற்றும் Myanmar பகுதியை நோக்கி, விலகிச் செல்லும்

ஆக, பன்னிரண்டாம் தேதி வரைக்கும், மழை இருக்கிறது. எட்டாம் தேதி வரைக்கும், கனமழை பொழிவு இருக்கிறது. நாலாம் தேதி வரைக்கும், பரவலான கனமழை பொழி இருக்கிறது. எட்டாம் தேதிக்கு பிறகு, மழைப்பொழிவு குறைந்தாலும், வெப்பத்திற்கு இடையே, புழுக்கத்திற்கு இடையே, ஆங்காங்கே, கனமழை பொழிவு இருக்கும்.

பரப்பில் குறைந்திருக்குமே தவிர, பெய்யும் இடத்தில, வழுத்த மழைப்பொழிவு, பன்னிரண்டாம் தேதி வரை இருக்கிறது. பனிரெண்டாம் தேதிக்கு பிறகு, வெப்ப அலை, மேற்கிலிருந்து, கிழக்கு நோக்கி வரும். அதிலும், மலைப்பகுதிகள்ல, அதாவது, கிழக்கு தொடர்ச்சி குன்றுகளிலேயும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்ல, கேரள எல்லையோர மாவட்டங்கள்லயும், மழைப்பொழிவு இருந்து கொண்டிருக்கும்.

ஆக, Kerala பகுதிக்கும், Karnataka பகுதிக்கும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கும், மழைப்பொழிவிற்கு எல்லை இல்லை. இந்த மாதம், அடுத்த நிகழ்வு உருவாகும் வரைக்கும் கூட, தொடர்ந்து கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அனைத்து உள் மாவட்டங்கள்லயும், பனிரெண்டாம் தேதி வரைக்கும், மழை இருக்கிறது. கடலோரம்

கடலோர மாவட்டங்களை பொறுத்தவரைக்கும், பனிரெண்டாம் தேதிக்கு பிறகு, வெப்ப ஆலை, மேற்கிலிருந்து வரும். புழுக்கம், வியர்வை அதிகமாக இருக்கும். இம்மாத இருபதாம் தேதிக்கு பிறகு, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அதுவும் நிகழ்வாகி, தீவிரமடைய வாய்ப்பிருக்கிறது. இருபதிலிருந்து, இருபத்தைந்துக்குள் உருவானால்,

இப்படிப்பட்ட மழைப்பொழிவை, மேலும் ஒரு சுற்று கொடுக்கும். தாமதமாக உருவானால், அரபிக் கடலில் உருவாகி, தென்மேற்கு பருவமழையே தொடக்கும். இருபதில், அடுத்த நிகழ்வு எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஒரு மழை காலம், இருபதாம் தேதிக்கு மேல், இங்கே தெரிகிறது.

ஆக, மே மாதம் முதல் வாரத்தில், இரண்டாவது வாரத்திலும், நல்ல மழைப்பொழிவு, மூன்றாவது வாரத்தில் தீவிரம் குறைந்திருக்கும். நான்காவது வாரத்தில், மீண்டும் தீவிரம் அடையும். ஆக, மூன்றாவது வாரத்தில், வெப்பத்தின் அளவு அதிகமாகும். முதல் வாரத்திலும், நான்காவது வாரத்திலும், மழையின் அளவு அதிகமாகும்.

தென்மேற்கு பருவமழை, மாத இறுதி நாளாம், முப்பது, முப்பத்தி ஒன்று, ஜூன் ஒன்று, இரண்டு தேதிகள்ல தொடங்கும். பருவமழை தொடங்கும் பொழுது, தென்மேற்கு பருவமழையா? அல்லது, வெப்ப சலன மழையா? என்பது, வித்தியாசம் தெரியாத அளவிற்கு,

மாத இறுதியில, வழுத்த பலத்த மழை பொழிவு, கேரளா, கர்நாடகாவிலும், தமிழ்நாட்டின் அனைத்து உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் இருக்கும். ஆகவே, நல்ல மழைப்பொழிவு இருக்கிறது, மே மாதம். சராசரிக்கு கூடுதலான மழைப்பொழிவு, சராசரிக்கு கூடுதலான வெயிலும் இருக்கிறது, இடையில

கூடுதலான புழுக்கம், எல்லாமே அதிகம்தான். பெய்தால் மழை. ஒதுங்கினால், வெயில் புழுக்கம். இப்படித்தான், சில வாரங்கள் போகும். அதாவது, ஒரு வாரம் வெயில், இரண்டு வாரம், கனமழை, ஒரு வாரம் மிதமான முதல், சற்று கனமழை வரை இருக்கிறது.

ஆகவே, வானிலை அறிக்கை கூட இணைந்திருங்க. வரக்கூடிய வங்கக்கடல் நிகழ்வு, எட்டாம் தேதி நிகழ்வு, நெருங்கி உருவானால், மழைப்பொழிவு கூடுதலாக வாய்ப்பிருக்கிறது. ஆனால், இலங்கைக்கு நெருக்கமாக உருவாகி, மையம் கொள்வது, அந்தமானுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியாக இருக்கும் என்பது, இப்பொழுது ஆய்வறிக்கை. அதனால, இந்த ஆய்வு முடிவு.

நெருங்கி உருவானால், மழைப்பொழிவு அளவு கூடுதலுக்கு வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து வானிலை அறிக்கையோடு இணைந்திருந்து, திட்டமிட்ட வேளாண்மை செய்ய, அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *