ஜனவரி 11 முடியமழை, கனமழைமிக கனமழைஎங்கெங்கே?

4.1.2024 வியாழன் அதிகாலை நிலவர வானிலை அப்டேட்:

நேற்று மாலை, முன்னிரவு நீலகிரி மாவட்டத்தில் நல்ல மழை.கொடைக்கானல் மலை பகுதிகளில் மழை.தேனி மாவட்டத்தில் தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உட்பட சற்று பரவலாக மழை முதல் கனமழை. மதுரை மேற்கு பகுதிகள் ஆங்காங்கே மழை, விருதுநகர் மேற்கு பகுதியில் ஆங்காங்கே நல்ல மழை பெய்தது.

நிகழ்வு 1
கடந்த டிசம்பர் 29,30,31 தேதிகளில் மாலத்தீவு வழியாக மேற்கு நோக்கி நகர்ந்த காற்று சுழற்சி ஜன 3 கேரளா கரையுடன் இணைப்பு சுழற்சியை பெற்றுள்ளது.

இது ஜன 4,5,6 கர்நாடகா கரையுடனும் இணைப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கர்நாடகாவின் கார்வார் வரை இணைப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக இன்று ஜன 4 வியாழன் கேரளாவின் வயநாடு, வடக்கு கேரளா உட்பட , கடலோர கர்நாடகா மங்களூரு, உடுப்பி வரை உள்ளே குடகு, மைசூரு, பெங்களூரு, கோலார் வரை மழை பொழிவை கொடுக்கும்.

2024 ஜனவரி 4,5,6 தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பொழியும்.
ஜன 4,5 இல் ஏதேனும் சில மணிநேரம் ஈரோடு வடக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான, மிதமான மழை கொடுக்க வாய்ப்பு தெரிகிறது.

குறிப்பாக நீலகிரி , தேனி மாவட்டங்களில் மேற்கு பகுதிகள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மேற்கு பகுதிகளில் நல்ல மழை உறுதி.
அதேபோல மாஞ்சோலை, நாலுமூக்கு, ஊத்து, காக்காச்சி, முல்லை பெரியார், தேக்கடி, பம்பை,இடுக்கி ஏலக்காய் சாகுபடி பகுதிகள், கொடைக்கானல் மேற்கு, வால்பாறை தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பொழியும்.

ஜன 4,5,6 குமரி முதல் நீலகிரி வரை தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை இருக்கும்.

நிகழ்வு 2

அடுத்து வரும் காற்று சுழற்சி ஜன 6,7,8,9 தேதிகளில் இலங்கைக்கு தெற்கே மேற்கு நோக்கி பயணிக்கும் என்பதால் *கீழ்கண்டபடி வானிலை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜன 6,7 சென்னை வானிலை :

ஜனவரி 6 சனிக்கிழமை சில மணி நேரம் லேசான அல்லது நனைக்கும் மழை.
ஓரிரு இடங்கள் மிதமான மழை இருக்கலாம்.
ஜனவரி 6:சனிக்கிழமை தாமதமாக கூட இரவு மழை தொடங்கலாம்.

ஜனவரி 7 ஞாயிறு சில மணி நேரம் மிதமான மழை.
ஓரிரு இடங்களில் சற்று கனமழையும் சில நிமிடங்கள் கனமழை இருக்கலாம்.

ஜன 8,9 சென்னை வானிலை.
அவ்வப்போது ஆங்காங்கே மழை முதல் மிதமான மழை இருக்கும்.

ஜன 6,7,8,9 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட வானிலை.

ஜனவரி 6 மாலை இரவில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உட்பட கடலோரம் தொடங்கும் மழை, அன்று நள்ளிரவு கடலோர மாவட்டங்களில் தொடங்கும்.

ஜன 7,8,9 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, கேரளா, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு எல்லையோர ஆந்திரா என்று ஒட்டு மொத்த தமிழ்நாடு, ஒட்டுமொத்த கேரளா, புதுச்சேரியின் மூன்று பகுதிகள் உட்பட நல்ல மழை பொழியும்.

இந்த மழை ஜன 7,8,9 தேதிகளில் ஆங்காங்கே
அவ்வப்போது விட்டு விட்டு பொழியும்.
பெரும்பாலான இடங்கள் சற்று கனமழை பொழியும். ஒருசில இடங்களில் கன மிக கன மழை பொழியும்.

ஜனவரி 10,11 தேதிகளிலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அவ்வப்போது ஆங்காங்கே மழை தொடர வாய்ப்புள்ளது.

சுருக்கம்
ஜனவரி 4,5, கேரளா, கடலோர கர்நாடகா (வயநாடு, குடகு உட்பட ) தமிழ்நாட்டின் கேரளா எல்லை ஓரம் மற்றும் மலை மாவட்டங்கள் நல்ல மழை உறுதி.

ஜனவரி 6 மலை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள்.

ஜன 7,8,9 ஒட்டு மொத்த தமிழ்நாடு, ஒட்டுமொத்த கேரளா, புதுச்சேரி, காரைக்கால், மாஹே தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு எல்லையோர ஆந்திர மாவட்டங்கள் நல்ல மழை பொழியும்.

ஜன 10,11 தென் கோடி மாவட்டங்களில் ஆங்காங்கே அவ்வப்போது மழை இருக்கும்.

ஜனவரி 11 முடியமழை, கனமழைமிக கனமழை எங்கெங்கே?

வானிலை சுருக்கம்:-ஜன 4 முதல் 11 முடிய மழை எங்கெங்கே?உங்களுக்கு எப்போது?

கடலில் காற்று எப்படி?கடல் தொழில் செய்வது எங்கே?4.1.24-4AM அறிக்கை

சிங்கப்பூர்,மலேசியா,மாலத்தீவு இலங்கை வானிலை

ந. செல்வகுமார்.
மன்னார்குடி
வெளியீடு 4.1.24-4AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *