2023 ஜனவரி 7 அதிகாலை ஆய்வறிக்கை
காற்று சுழற்சி இலங்கைக்கு நிலநடுக்கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்கிறது.
அடுத்தடுத்து பசிபிக் பெருங்கடல் முதல் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் குமரிக்கடல் பகுதி வரை (பசிபிக் பெருங்கடல், தென் சீனக்கடல், தாய்லாந்து வளைகுடா, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ) நிகழ்வுகள் நீடிக்கின்ற காரணத்தினால் தென் அரைக்கோளம் நோக்கிச் செல்லும் வட துருவ குளிர் அலை பிரிக்கப்பட்டு தென் அரைக்கோளம் நோக்கி பயணிக்கிறது.
நாளை டிசம்பர் 7 தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்கள் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் தூறல் மழை கொடுக்கும் .
ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதிக்கு நனைக்கும் மழை தெரிகிறது.
ராமேஸ்வரம் பகுதிக்கு மிதமான மழை வரை தெரிகிறது.
தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே நனைக்கும் மழைக்கு வாய்ப்பு.
ஜனவரி 8 தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் தூறல் மழைக்கு வாய்ப்பு.
அடுத்த நிகழ்வு
ஜனவரி 12 13 14 15 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு தெற்கே மேற்கு நோக்கி நகரும்.
இதனால் கடலோர மாவட்டங்களில் குழப்பமான மேகமூட்டம் வானிலை ஆங்காங்கே லேசான நனைக்கும் மழை வரை இருக்கும்.
தென் கடலோரம் ஜனவரி 14 15 நனைக்கும் மழை முதல் லேசான மழை தெரிகிறது.
அதற்கு அடுத்த நிகழ்வு
காற்று சுழற்சி ஜனவரி 18 19 20 21 22 தேதிகளில் இலங்கைக்கு தெற்கு புறமாக இலங்கைக்கு மிக நெருக்கமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடலோர மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் மத்திய உள் மாவட்டங்களுக்கும் லேசான மழைப்பொழிவு முதல் மிதமான மழைப்பொழிவு வரை ஆங்காங்கே கொடுக்க தெரிகிறது. இதை வரக்கூடிய நாட்களில் உறுதிப்படுத்தலாம். அது பாதிக்கும் மழையாக அமையாது. நீடித்து நின்றும் பெய்யாது.
ஜனவரி இறுதி வார நிகழ்வு
ஜனவரி இறுதிவரை நிகழ்வு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் நகர்ந்து கடலோரம் குழப்பமான வானிலை தூறல் மழை பொழிவையும் கொடுக்கும் என்று தெரிகிறது.
அனைத்து நிகழ்வுகளுக்கும் இன்னும் நாட்கள் இருக்கின்றன. வரக்கூடிய நாட்களில் துல்லியம் தெரியவரும்.
எது எப்படியோ அறுவடையை பாதிக்காத மழையாக இருக்கும். குழப்பும் வானிலை நனைக்கும் மழை ஆகியவற்றிற்கு மட்டுமே கூடுதல் வாய்ப்பு.
அச்சமின்றி இடைவெளி அறிந்து ஆறுவடை செய்க.
ந. செல்வகுமார்.
Well done sir. Keep it up.