இடம் மாறிய அதிக மழை பகுதிகள்,எச்சரிக்கை எங்கே?

8.1.24 திங்கள் அதிகாலை நிலவர செல்வகுமார் ஆய்வறிக்கை.

கேரளா, லட்சத்தீவு பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாகவும் இலங்கைக்கு தெற்கே நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாகவும் மேலும் இந்த காற்று சுழற்சி இலங்கைக்கு தெற்கு புறமாக குமரிக்கடலின் தெற்கு புறமாக ஜனவரி 8,9,10,11 தேதிகளில் மேற்கு நோக்கி நகரும்.

கடந்த 24 மணியில்
சிதம்பரம் 221 மிமீ,
சீர்காழி 220மிமீ,
திருவாரூர் 212 மிமீ,
நாகப்பட்டினம் 167 மிமீ.
என்று பல இடங்களில் மிக கனமழை பொழிந்துள்ளது.

இந்த அதிகாலை முதல் விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி பகுதிகளில் தொடர் கனமழை பொழிந்து வருகிறது.

இனி திருவள்ளூர், காஞ்சிபுரம்,சென்னையில் சற்று கனமழைக்கு மட்டும் வாய்ப்பு.
செங்கல்பட்டு முதல் நாகப்பட்டினம் வரை
செங்கல்பட்டு,விழுப்புரம்,புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் உள்ளிட்ட வடக்கு பகுதிகள்,அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பொழிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காலைக்கு மேல் திருவண்ணாமலை,, கள்ளக்குறிச்சி பெரம்பலூர் கடலூர் மேற்கு பகுதிகளுக்கும்
மதியத்திற்கு மேல் படிப்படியாக உள்ளேயும் தொடங்கி மதியம் மாலை உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தொடங்கி மாலை இரவில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கிழக்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை
மாவட்டங்களுக்கும் மழை இருக்கும்.

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர்,தேனி திண்டுக்கல்,கரூர், திருப்பூர்,ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் தெரிகிறது.

ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் தொடங்கும் மழை தெற்கே, மேற்கே தொடங்கி தொடங்கி தீவிரமாகி அனைத்து மாவட்டங்களில் ஜனவரி 8,9 தீவிரமாக இருக்கும்.
ஜனவரி 10 டெல்டா, தென்மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்களில் தொடரும்.

இதில் ஜன 8,9 மத்திய கடலோரம் டெல்டா, தென் மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்களில் பிற மாவட்டங்களை ஒப்பிடும் பொழுது நிறைய மழை தெரிகிறது.

இந்த நிகழ்வால் மழை பற்றாக்குறை மாவட்டங்களுக்கும் சிறப்பான மழை கிடைக்கும்.

டெல்டா மாவட்டங்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும்.

தயவுசெய்து தண்ணீரை ஆற்றில் வடிய விட்டு கடலுக்கு அனுப்பாமல், முடிந்த வரை வயலில் தேக்கி அறுவடை வரை நீர் பற்றாக்குறையை சமாளித்திடுங்கள்.

கூடுதல் நீரை பண்ணைக்குட்டைகளில் சேமித்திடுங்கள்.

ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்த வரலாற்றில் இடம் பிடித்த மழை மீண்டும் இப்போதைக்கு பெய்யாது என்ற போதிலும் சில மாவட்டங்களின் ஏரிகள் குளங்கள்,ஆறுகள் கரையோரம் மட்டும் முன்னெச்சரிக்கை அச்சப்படாமல் சற்று தேவை.

ஏரி, குளங்கள், அணைகள் நிரம்பியுள்ள மாவட்டங்களில் அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, கோவை வடக்கு, திருப்பூர் வடக்கு, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் நீர்நிலை அருகே வசிப்பவர்கள் மற்றும் வால்பாறை, கொடைக்கானல்,
நீலகிரி, சபரிமலை, பம்பை பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டிருப்பவர்கள் அச்சப்படாமல், பீதி அடையாமல், நிதானமாக சிந்தித்து முன்னெச்சரிக்கை யுடன் இருந்தால் போதுமானது.

அதே போல தென் மாவட்டங்களில் ஜன 8,9,10 மழை எப்படி அப்டேட்ஸ் அவசியம் பார்க்கவும்.

ஜன 10,11 அடுத்த காற்று சுழற்சி வருகையும், முதல் சுழற்சி நீடிப்பும் ஜனவரி 10,11 தேதிகளில்
தென் மாவட்டங்களில் மிதமான மழை ஆங்காங்கே தரும்.

ஜனவரி 12 முதல் குளிர் காற்று, குளிர் வானிலை நிலவும்.

ந. செல்வகுமார்
8.1.24-6AM
வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *