9.1.24-4AM செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை.
வானிலை அமைப்பு
(1)உயரழுத்தம்:
வட இந்திய நிலப்பகுதியில் நீடிக்கும் உயர் அழுத்த குளிரலை தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவின் வடக்கு பகுதி , திருச்சி வடக்கு, கரூர் வடக்கு, நாமக்கல் வடக்கு, ஈரோடு வடக்கு பகுதி,கோயம்புத்தூர் ஓரம், நீலகிரி பகுதிகள் வரை ஆக்கிரமித்துள்ளது.
(2) நிலநடுக்கோட்டு தாழ்வு சுழற்சி.
இலங்கையை நெருங்கி வந்த காற்று சுழற்சி தென் மேற்காக சற்று விலகி மாலத்தீவுவிற்கு தெற்கு பகுதியாக செல்ல விலகுகிறது.
ஜனவரி 11 வரை மாலத்தீவு பகுதியை நோக்கி நகரும்.
(3)அரபிக்கடல் காற்று சுழற்சி.
அரபிக்கடலில் கேரளா, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா கரைக்கு சற்று அப்பால் மெலிந்த, நீண்ட சுழற்சி நீடிக்கிறது.
(4) இருவேறு காற்று இணைவும் மழையும்.
வட இந்திய குளிர் காற்றும், வடகிழக்கு, கிழக்கு குறைந்த நீராவி காற்றும் கீழேகண்ட மாவட்ட பகுதிகளில் சந்திப்பை ஏற்படுத்துகிறது.
நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு பகுதி, திருவாரூர் மாவட்ட தெற்கு பகுதி, தஞ்சாவூர் மாவட்ட தெற்கு பகுதி, புதுக்கோட்டை மாவட்ட தெற்கு பகுதி, திருச்சி மாவட்ட தெற்கு பகுதி, நாமக்கல் தெற்கு பகுதி, ஈரோடு தெற்கு பகுதி, திருப்பூர் தெற்கு முக்கால் பகுதி,கோயம்புத்தூர் மாவட்ட தெற்கு பகுதி, திண்டுக்கல், இராமநாதபுரம்,சிவகங்கை, மதுரை, தேனி விருதுநகர்,தூத்துக்குடி,திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரு காற்றுகள் இணைவு நடந்து மழை பொழிவை இன்று ஜனவரி 9 செவ்வாய் ஏற்படுத்தும்
இன்று காலைக்கு மேல் மதியம், மாலை திண்டுக்கல், தாராபுரம், மடத்துக்குளம், அமராவதி, திருமூர்த்திமலை, உடுமலைப்பேட்டை, முக்கோணம், தொட்டம்பட்டி, கொங்கல்நகரம், பொள்ளாச்சி,நெகமம், காட்டம்பட்டி உள்ளிட்ட மழை பற்றாக்குறை பகுதிகளுக்கும் நல்ல மழை பொழியும்.
அதே நேரத்தில் அச்சமூட்டும் மழை இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொழியும்.
(5)படிப்படியாக விலகும் மழை.
இன்று ஜனவரி 9 இரவுடன் இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளும் அதற்கு வடக்கு உள்ள பகுதிகளிலும் மழை விலகும்.
ஜனவரி 10 மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் மழை நீடிக்கும்.
நாளை ஜனவரி 10 திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி கடலோரமும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் தேனி மலையோரமும் கனமழை வாய்ப்புள்ளது.
ராதாபுரம், திசையன்விளை, திருச்செந்தூர்,ஆரல்வாய்மொழி, மாஞ்சோலை, நாலுமூக்கு, ஊத்து பகுதிகளில் மிககனமழை தெரிகிறது.
(6) அடுத்து தொடங்கும் குளிர் காற்று.
ஜனவரி 11 முதல் குளிர் காற்றும், பனிப்பொழிவும் பொங்கலுக்கு மழை இல்லை. இரவில் குளிர் கூடுதலாக இருக்கும்.
(7)அடுத்த மழை வாய்ப்பு.
2024 ஜனவரி 23,24,25 இல் இலங்கைக்கு தெற்கு பகுதியில் ஒரு காற்று சுழற்சி வரலாம்
இது தொடர்பாக ஆய்வு தொடர்கிறது.
அப்டேட்ஸ் பார்த்து இருக்கவும்.
ந. செல்வகுமார்
9.1.2024 அதிகாலை
வெளியீடு.