இன்றைய வானிலை தகவல்-விண்வெளி அற்புதம்

26.2.2024-4AM செல்வகுமார்வானிலை &விண்வெளி அறிக்கை.

பிப் 24,25 சனி ஞாயிறு ஆங்காங்கே தூறல்,
நனைக்கும் மழை,லேசான மழை
எதிர்பார்த்த நிலையில்

24.2.24 8.30 AM க்கு முன்
மீமிசல் (புதுக்கோட்டை )-2செமீ.
ஈச்சன்விடுதி (தஞ்சாவூர் )-1செமீ.

25.2.24 ஞாயிறு காலை
8.30 மணியுடன் முடிவடைந்த
கடந்த 24 மணியில் மழை அளவு.
மண்டபம் (இராமநாதபுரம்)-3செமீ.
மீமிசல் (புதுக்கோட்டை )-2செமீ.
மாஞ்சோலை (திருநெல்வேலி )-2செமீ.
நகுடி (புதுக்கோட்டை )-2செமீ.
கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை )2செமீ.
காக்காச்சி (திருநெல்வேலி )-2செமீ.
நாலுமூக்கு (திருநெல்வேலி )-1செமீ.
ஊத்து (திருநெல்வேலி )-1செமீ.

புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்
மாவட்டங்கள் இணையும் இடத்தில்
நல்ல மழை சில கிராமங்களில்
பெய்துள்ளது.

முன்னறிவிப்பு :

தமிழ்நாடு :

கிழக்கு காற்று வருகை
காரணமாக
பிப் 26 27 திங்கள் செவ்வாய்
மதிய நேரங்கள்
டெல்டா மற்றும்
தென் மாவட்டங்களில்
தூறல், நனைக்கும் மழை,
ஓரிரு இடங்களில் லேசான
மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாட்டில் வெயிலுக்கு
இடையே ஆங்காங்கே கருமேகம்
சூழும்.

பிற அனைத்து மாநிலங்கள் :
காற்று சுழற்சி காரணமாக
பிப்ரவரி 26,27,28
கிழக்கு மகாராஷ்டிரா,
சட்டிஸ்கர், ஒடிசா ஆங்காங்கே
இடிமழை வாய்ப்பு.

மேற்கத்திய இடையூறு
காஷ்மீர் வருகை.
பிப்ரவரி 29
மார்ச் 1,2,3
காஷ்மீர்,லடாக்,பஞ்சாப்,
இமாச்சலபிரதேசம்,
சண்டிகர், உத்தரகாண்ட்
மாநிலங்களில் காற்றுடன்
ஐஸ் மழை, குளிர் நீர் மழை,
பனி சரிவு ஏற்படும் வாய்ப்பு.

மார்ச் 2,3 இல் உத்திரப்பிரதேசம்
டெல்லி, வடக்கு ராஜஸ்தான்
இடிமழை வாய்ப்பு.

மார்ச் 1,2,3,4
இமயமலையில்
ஐஸ் மழை
ஒரு சில இடங்களில்
பனிச்சரிவு
ஏற்பட வாய்ப்பு.

26.02.24 இன்று தமிழ்நாட்டின் கிழக்கு ஓரம்
மேற்கு ஓரம் சூரியன் உதயம் மறைவு நேர விபரம்.

கிழக்கு ஓரம்
பழவேற்காடு
↑ 06:26AM ↓ 06:15 PM
சென்னை
↑ 06:27AM ↓ 06:16 PM
ஊட்டி
↑ 06:40AM ↓ 06:32 PM
மேற்கு ஓரம்
எருமாடு
(நீலகிரி மேற்கு ஓரம் )
↑ 06:41 AM ↓ 06:33PM
தமிழ்நாட்டின்
கிழக்கு ஓரத்திற்கும்
மேற்கு ஓரத்திற்கும்
சூரியன் உதிப்பதில்
நேர வேறுபாடு
14 நிமிடங்கள்.

================
மன்னார்குடியில்
சூரியன், சந்திரன்
இன்றைய பகல் நேரம்.
06:26AM– 06:21PM
நண்பகல் நேரம்
உச்சிக்கு சூரியன் வருதல்
12.25மணி.

11 மணிகள்
52 நிமிடங்கள்
43 வினாடிகள்
உதயம் 99°
கிழக்கு கி தெ கிழக்கு.
 மறைவு 261°
மேற்கு மே தெ மேற்கு.

இன்று 26.2.24 பூமி -சூரியன் இடைப்பட்ட தூரம் 148.072 மில்லியன் கிலோமீட்டர்.

====================

இன்றைய பகல் பொழுது
குறித்த விளக்கம்.

இன்றைய துல்லிய
பகல் நேரம்
11 மணிகள்
52 நிமிடங்கள்
43 வினாடிகள்
(26 Feb 2024).

இரவு பொழுது
12 மணிகள்
7 நிமிடங்கள்
12 வினாடிகள்

இன்றைய (26 Feb 2024)
பகல் பொழுது
நேற்று (25 Feb 2024) விட
33 வினாடிகள்
பகல் பொழுது கூடுதல்.

நிலநடுக்கோட்டில்
இருந்த (22 Dec 2023)விட இன்று
22 நிமிடங்கள் 32 வினாடிகள்
பகல் பொழுது கூடுதல் .

கடகரேகையில்
இருந்த (21 Jun 2023) விட இன்று
52 நிமிடங்கள் 12 வினாடிகள்

பகல் பொழுது குறைவு

சந்திரன் மன்னார்குடியில் இன்று சந்திரன்
உதயம் நேரம் 7.49PM 89 டிகிரி கிழக்கு

இன்று சந்திரன் மறையும் நேரம் காலை 7.33 மணி
274 டிகிரி மேற்கு

இன்று 98 % அளவிற்கு ஒளி வீசிம்.

நேற்று முன்தினம்:25.2.24 சந்திரன் பூமி இடையே தூரம் 4,05,090 கிலோமீட்டர்.

இன்று 26.2.24 சந்திரன் -பூமி இடையே தூரம் 4,06,298 கிலோமீட்டர்.

மன்னார்குடியில் இருந்து நேற்று சந்திரன் இருந்த
தூரத்தை விட இன்று 1,208 கிமீ கூடுதல்

அடுத்த அமாவாசை நேரம்
மார்ச் 10- 2024, மதியம் 02.30 மணி.

அடுத்த முழுநிலவு (பௌர்ணமி) நேரம்.
மார்ச் 25- 2024,மதியம் 12.30 மணி

26.2.24 திங்கள்

சூரியக்குடும்பம் தகவல்.

சூரியன்
உதயம் 06:26AM
மறைவு 06:21PM
நண்பகல் நேரம்
உச்சிக்கு சூரியன் வருதல்
12.25மணி.

மன்னார்குடி பகுதியில் இருந்து பார்த்தால் தெரியும் கோள்கள் மற்றும் நேரம் :

புதன் கோள்
உதயம் 06.27 AM
மறைவு 06.15 PM
உச்சி மதியம் 12.21
கருத்து விளக்கம்:
பார்க்க முடியாது.

காலை 6.26 க்கு
சூரியன் உதிக்கும்
அதே நேரத்தில் புதனும்
உதிக்கும். பிரகாச
ஒளியால் பார்க்க முடியாது.

வெள்ளி
உதயம் 04:58 AM
மறைவு 04:36 PM
உச்சி 10:47 AM
குறிப்பு :
4.58 AM முதல்
சூரியன் உதிக்கும் நேரம்
வரை அதிகாலை
கிழக்கே பார்க்கலாம்.
வெளிச்சம் வரும் வரை
பிரகாசமாக பார்க்கலாம்.
பிறகு சூரியஒளி வந்துவிடும்
என்பதால் பார்க்க முடியாது.

செவ்வாய்
உதயம் 04.53AM
மறைவு 4:28 PM
உச்சி 10:40 AM
பார்ப்பது கடினம்.
சூரியன் உதிக்கும் நேரம்
காலை 6.26 க்கு முன்
கடும் முயற்சி செய்து
கிழக்கே உதிக்கும் போது
வெள்ளி கிராகத்திற்கு
சற்று மேலே வெள்ளி உதிக்க
5நிமிடங்களுக்கு முன்னர்
உதிப்பதை பார்க்கலாம்.
5.45 க்கு பிறகு கிழக்கே
வெளிச்சம் வந்துவிடும்
பார்ப்பது சற்று கடினம்.

வியாழன்
உதயம் 10.14 AM
மறைவு 10.39 PM
உச்சம் 04.26 PM

சூரியன் மறைந்த பிறகு
மாலை 6.21 முதல்
வியாழன் மறையும் நேரம்
இரவு 10.39 வரை
பார்க்க நன்றாக இருக்கும்.

சனி
உதயம் 06.45AM
மறைவு 6.33 PM
உச்சி 12.39 PM
6.21சூரியன் பிறகு
சற்று இருள் சூந்ததும்
இரவு 6.33 முடிய மேற்கே
மறையும் போது பார்க்கலாம்.

யுரேனஸ்
உதயம் 10.46 AM
மறைவு 11.16 PM
உச்சி 05.01 PM
பார்ப்பது கடினம்.

நெப்டியூன்
உதயம் 07.43 AM
மறைவு 07.42 PM
உச்சி 01.42 PM
பார்ப்பது மிகவும் கடினம்.

பூமி
நாம் வாழ்வது.
அறிந்ததே.

ந.செல்வகுமார்
26.2.2024-4AM
வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *