2024 கோடை மழையும் பருவமழையும் ந. செல்வகுமார் ஆய்வறிக்கை.

14.5.2024-4AM வானிலை தகவல் தொகுப்பு:

2024 கோடை மழையும் பருவமழையும் ந. செல்வகுமார் ஆய்வறிக்கை.

தலைப்பு செய்திகள்
(1)கோடை மழை இந்த காற்று சுழற்சியால் மே 22 வரை வழக்கமான கோடை மழையை விட மிகவும் கூடுதலாக பெய்து வரலாறு படைக்கும்.
அதனை தொடர்ந்து வரும் அடுத்த அந்தமான் தீவிர நிகழ்வால் மேலும் வலிமை பெறும்.
(2)அணைகள் நீர் வரத்து சற்று கூடும்.
(3)அந்தமான் Remal புயல் தமிழ்நாட்டின் காற்று சுழற்சியுடன் மேலடுக்கில் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு மே 19 முதல் 22 முடிய தென்மேற்கு பருவமழை போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமாக பொழியும். அது கன்னியாகுமரி மாவட்ட அணைகளை நிரப்பலாம். வால்பாறை கன்னியாகுமரி இடைப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி,விருதுநகர், தென்காசி ,திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மேற்கு பகுதிகள் மிக கனமழையும் ஓரு சில இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு. அப்போதும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நல்ல மழை பொழியும்.
(4)அந்தமான் நிகழ்வு புயலாக உருவாகும் போது ஈரப்பதம் போகாது, நிறைய மழை, மிகவும் குளிர்ந்த சூழல் நிலவும்.
புயலாகி கொல்கத்தா, சிட்டகாங் பகுதியான வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்லும் போது சற்று காற்று திசைமாறி இரண்டு நாள்கள் 100-102′ F வெப்பம் எட்டும்
.

(5)மே இறுதியிலும் ஒரு காற்று சுழற்சி அமைந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரை கோடை கனமழை தொடரும். இதனால் கோடை அனல், கோடை வெப்பம் விலகி கோடையே நிறைவடைந்தது எனலாம்.
வேதாரண்யம் உப்பளங்களுக்கு விடுக்கப்பட்ட ஏப்ரல் 28, மே 8 எச்சரிக்கையின் படி நேற்று மே 13 காலை பெய்த மிக கன மழையால் உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

அதேபோல மழை பொள்ளாச்சி நகரில் பொழிந்தது.

மே கோடை வானிலை.
அனல் விலகி,வெப்பம் குறைந்து ஆங்காங்கே மழை பொழிவை கொடுத்து வரும் நிலையில் மே 14 முதல் 20 முடிய காற்று சுழற்சி மழையும், மே 21 முதல் 26 முடிய வங்கக்கடலில் Remal புயல் உருவாகி தென்மேற்கு பருவமழை போல மழையும் மே 27 முதல் 31 முடிய மேலும் ஒரு காற்று சுழற்சியும் மழையும் கொடுக்கும்.

மே 13 எதிர்பார்ப்புகள்.

அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே பெய்துகொண்டுள்ள கனமழை.
கேரளா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில்
கூடுதல் பரப்பில் பொழியும்.அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே பொழியும்.

மே 14 முதல் 20 முடிய எதிர்பார்ப்பு.

மே 14,15 தேதிகளில் நெருங்கும் மேலடுக்கு கீழடுக்கு காற்று சுழற்சிகள் மே 16 முதல் மே 20 முடிய மதியம், மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் ஒதுக்கி ஒதுக்கி பொழிந்து ஒதுக்கிய இடங்களுக்கும் அடுத்தடுத்த மணிநேரங்களில் அடுத்தடுத்த நாள்களிலும் நல்ல மழை பொழியும். இந்த நாள்களில் ஒரிரு இடங்களில் அதிகன மழை, ஆங்காங்கே கன மிககன மழை பொழியும். பரவலாக மிதமான மழை முதல் சற்று கனமழை வரை பொழியும். அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் அதி கன மழைக்கும் வாய்ப்புள்ளது.

மே 21 முதல் 26 முடிய Remal புயல் எதிர்பார்ப்பு
*வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே உருவாகும் காற்று சுழற்சி தாழ்வு பகுதி, மண்டலம், ஆழ்ந்த தாழ்வு என்று தீவிரமடைந்து Remal என்ற பெயர்கொண்ட புயலாகி , தீவிர, மிகத்தீவிர புயல் வரை தீவிரம் அடைந்து வடக்கு ஒடிசா, மேற்கு வங்கம் அல்லது வங்கதேசம் கடக்கும்.இது தமிழ்நாட்டு காற்று சுழற்சியுடன் மேலாடுக்கில் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு தென்மேற்கு பருவமழை போல மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பொழியும்.தென் நேரத்தில் தென் மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்களில் கனமழை பொழியும்.அணைகளுக்கு நீர்வரத்து கூடும். கன்னியாகுமரி அணைகளை நிரப்பவும் வாய்ப்புள்ளது.தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கு காற்று பலமாக வீசி ஆங்காங்கே மழை இருக்கும்.

மே 27 முதல் 31 முடிய எதிர்பார்ப்பு.

மே இறுதியில் தாழ்வு அமைவுகளால் கொடுக்கும். அது தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது போல தெரியும்.
மே 31 அல்லது ஜூன் 1,2 தேதிகளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாழ்வு அமைவுடன் தொடங்கும்.

தென்மேற்கு பருவமழை 2024

ஜூன் 1, 2 தேதிகளில் அரபிக்கடல் தாழ்வு பகுதியால் பருவ மழை தொடங்கும்.
அது ASNA புயலாகி மகாராஷ்டிரா அல்லது குஜராத் கடக்கும்.
அடுத்து ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரம் DANA என்ற புயல் அரபிக்கடலில் உருவாகி கோவா, மகாராஷ்டிரா,கடக்க வாய்ப்பு.

ஜூன் 1 முதல் ஜூலை 15 முடிய பருவமழை முன்னேற்றத்தில் இருக்கும். ஜூலை 15 முடிய சீரற்ற வானிலை நிலவும், புயல் நெருங்கும் குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் மழையும் குறிப்பிட்ட இடங்களில் குறைவான மழையும் கொடுக்கும். *ஜூலை மாதம் வடக்கு கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா நல்ல மழை தெரிகிறது. கடலோர கர்நாடகா, கோவா, தெற்கு கடலோர மகாராஷ்டிரா புயல் அல்லது தாழ்வு பாதிக்கும் மழை தெரிகிறது ஜூலை இறுதிக்கு மேல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அணைகளுக்கு நீர் வரத்து கூடும்,

மேட்டூர் நிலவரம்:

மே 13 இல் 18 TMC யாகவும்
*மே 24 வரை பெய்யும் மழையால் தொடக்கத்தில் வினாடிக்கு 1000 கன அடியாக இருக்கும் நீர் வரத்து மே 17,18,19,20,21,22 இல் 10,000 முதல் 15,000 கன அடிவரை வரலாம். இதனால் குடி நீர் திறப்பு போக 5TMC கிடைக்கலாம். மே 18 இல் 17 TMC இருப்பை அடைந்து மே 31 இல் 20 TMC யாகவும் கோடை மழையை கணக்கில் வைத்தாலும்
உயர்ந்தலும் ஜூன் 12:இல் 22 TMC யாக இருக்கும்.
15 நாள் பாசனத்திற்கு மட்டும் நீர் இருக்கும்.
குடிநீர் தேவை இருக்கும்.
ஜூன், ஜூலை அணைகளுக்கு நீர் வார்த்து கொடுக்கும் வகையில் பருவ மழை இருக்கும் ஆனால் நிரப்பும் அளவிற்கு அதிகம் இருக்காது.

டெல்டா குறுவை சாகுபடி ஆற்று பாசன வாய்ப்பு குறைவு.
ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் கொண்டு மட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியும்.
ஜூன், ஜூலை மாதங்களில் ஆறுகளில் பாசனத்திற்கு நீர் கிடைக்காவிட்டாலும் ஆங்காங்கே மழை இருக்கும்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல நீர்வரத்து கொடுக்கும்.

இந்தியப் பெருங்கடல் IOD செப்டம்பர் முதல் நடுநிலையில் இருந்து நெகடிவ் IOD அடையும்.

பசிபிக்கடல் எல்-நினோ செப்டம்பர் மாத லா-நினா அமைப்பை அடையும்.

ஆக பசிபிக் கடலின் ஆசிய நாடுகளின் பகுதி வெப்பம் அதிகரிக்கும்,வங்கக்கடல் , அதற்கு தெற்கே உள்ள நில நடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் வெப்பம் உயர்ந்து இருக்கும் என்பதால் 2024 செப்டம்பர் முதல் டிசம்பர் முடிய தென் சீனா கடல் நிகழ்வு வங்கக்கடலுக்கு வலுவாக வரும்.

வடகிழக்கு பருவமழை.
அக் 20,21,22 இல் தொடங்கும்.
இக்காலத்தில் வலுவான நிகழ்வுகள் வலுவான மழை தரும் வடகிழக்கு பருவமழை சராசரிக்கும் கூடுதல் தரும் என்றே தெரிகிறது.

ந. செல்வகுமார்
14.5.2024-4AM வெளியீடு.

One comment

  1. South west and North East monsoon briefly explain to North tamilnadu and this time no heavy rain in North tamilnadu and coming days possibility of very heavy rain in North tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *