6.1.24-சனிக்கிழமை அதிகாலை செல்வகுமார் ஆய்வறிக்கை.
கேரளா, லட்சத்தீவு பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக
கேரளா, கர்நாடகா கரையோரம் மட்டும் நல்ல மழை.
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று ஜன 6 மாலை இரவில் மழை இருக்கும்.
நிகழ்வு அதே இடத்தில் இருந்தாலும் காற்று குவிக்கும் அமைப்பை மாற்றியுள்ளது.
அடுத்த நிகழ்வு மழை இதனை தொடர்ந்து தொடரும்.
புதிய காற்று சுழற்சி ஜன 6,7,8,9,10 தேதிகளில் இலங்கைக்கு தெற்கு புறமாக குமரிக்கடலின் தெற்கு புறமாக மேற்கு நோக்கி நகரும் என்பதால்
ஜன 6 சனிக்கிழமை அதிகாலை காலை *விழுப்புரம் கடலோரம், செங்கல்பட்டு கடலோரம் நல்ல மழை கொடுக்கும். காலை 9 மணி வரை தீவிரமாக இருந்து பிறகு கடற்கரை ஓரம் மாமல்லபுரம் முதல் மரக்கானம் வரை மட்டும் லேசான மழை கொடுக்கும்.
மீண்டும் மதியம் மாலை கடலோரம் மழை தொடங்கும்.
ஜன 6 சனிக்கிழமை மாலை இரவு ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் தொடங்கும்.
ஜன 6 சனிக்கிழமை நள்ளிரவு தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் கேரளா, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு எல்லையோர ஆந்திரா எங்கும் ஆங்காங்கே மழை தொடங்கும்.
ஜன 7 ஞாயிறு மதியம் வரை படிப்படியாக பரவலாகும்.
ஜன 7 ஞாயிறு மாலை, இரவு
ஜன 8,9 திங்கள், செவ்வாய் ஒட்டு மொத்த
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, கேரளா, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு எல்லையோர ஆந்திரா
ஆங்காங்கே ஆங்காங்கே அவ்வப்போது மழை முதல் கனமழை வரை விட்டு விட்டு பொழியும்.
ஜன 7,8,9 ஆகிய தினங்களின் மாலை இரவு, அதிகாலை நேரங்களில் கனமழை வாய்ப்பு.
இதில் ஜன 8,9 டெல்டா, தென் மாவட்டங்கள் பிற மாவட்டங்களை ஒப்பிடும் பொழுது நிறைய மழை தெரிகிறது.
இந்த நிகழ்வால் மழை பற்றாக்குறை மாவட்டங்களுக்கும் சிறப்பான மழை கிடைக்கும்.
டெல்டா மாவட்டங்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும்.
தயவுசெய்து தண்ணீரை ஆற்றில் வடிய விட்டு கடலுக்கு அனுப்பாமல், முடிந்த வரை வயலில் தேக்கி அறுவடை வரை நீர் பற்றாக்குறையை சமாளித்திடுங்கள்.
கூடுதல் நீரை பண்ணைக்குட்டைகளில் சேமித்திடுங்கள்.
ஜன 10,11 அடுத்த காற்று சுழற்சி வருகையும், முதல் சுழற்சி நீடிப்பும்
ஜன 10,11 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் மிதமான மழை இருந்து படிப்படியாக விலகும்.
தென் மாவட்டங்களில் ஜன 8,9 மழை எப்படி அப்டேட்ஸ் அவசியம் பார்க்கவும்.
ஜனவரி 11 முதல் குளிர் காற்று, குளிர் வானிலை நிலவும்.
ந. செல்வகுமார்
6.1.24-4AM
வெளியீடு.