குவியும் காற்றுமிக கனமழை எச்சரிக்கையுடன் மதிய அறிக்கை

இதன் இறுதியில் 6.1.24 மதிய நிலவர வானிலை எச்சரிக்கையும், வானிலை அறிக்கையும் உள்ளது.

Last 24 hours till 2024 JAN 6-8.30AM.
CHIEF AMOUNT OF RAINFALL IN CENTIMETERS:
TAMILNADU,PUDUCHERRY & KARAIKAL


Kakkachi (dist Tirunelveli), Nalumukku (dist
Tirunelveli) 10 each, Manjolai (dist Tirunelveli) 9, Ottapadiram (dist Thoothukudi) 5, Oothu (dist
Tirunelveli), Kovilpatti AWS (dist Thoothukudi) 4 each, Maniyachi (dist Thoothukudi),
Manimutharu (dist Tirunelveli), Geddai (dist The Nilgiris), Veerapandi (dist Theni) 3 each, Servalar
Dam (dist Tirunelveli), Papanasam (dist Tirunelveli), Alakarai Estate (dist The Nilgiris), Kannadaian
Anicut (dist Tirunelveli), Uttamapalayam (dist Theni), Ambasamudram (dist Tirunelveli),
Uthagamandalam (dist The Nilgiris) 2 each, Thenkasi (dist Tenkasi), Vedanatham (dist Thoothukudi),
Coonoor PTO (dist The Nilgiris), Kadambur (dist Thoothukudi), Gadana Dam (dist Tenkasi),
Kinnakorai (dist The Nilgiris), Ramanadhi Dam Section (dist Tenkasi), Kodaikanal (dist Dindigul),
Kunda Bridge (dist The Nilgiris), Chamraj Estate (dist The Nilgiris), Bodinaickanur (dist Theni), Burliar
(dist The Nilgiris), Sothuparai (dist Theni), Marakkanam (dist Villupuram), Mettupalayam (dist
Coimbatore), Chinnakalar (dist Coimbatore), Periyakulam (dist Theni), Adar Estate (dist The Nilgiris)
1 each.

KERALA
Perumbavur & Aluva (both in Ernakulam district) 7 each, Kodungallur (Thrissur district)
& Poonjar AWS (Kottayam district) 6 each, C.I.A.L. Kochi (Ernakulam district) 5, Myladumpara
(Idukki district) 4, Thodupuzha (Idukki district) 3, Ernakulam South, Thodupuzha ARG (Idukki
district) & Neeleswaram ARG (Ernakulam district) 2 each and NAS Kochi & Piravam (both in
Ernakulam district), Chalakkudy & Irinjalakuda (both in Thrissur district), Thalassery (Kannur
district), North Paravur AWS & Keerampara ARG (both in Ernakulam district) 1 each.

6.1.24-சனிக்கிழமை மதிய நிலவர செல்வகுமார் ஆய்வறிக்கை.

கேரளா, லட்சத்தீவு பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாகவும் இலங்கைக்கு தென் கிழக்கே நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாகவும் ஜனவரி 6,7,8,9,10 ஆகிய நாள்கள் தமிழ்நாட்டில் கன மிக கனமழை வாய்ப்பு.

காற்று சுழற்சி இலங்கைக்கு தெற்கு புறமாக குமரிக்கடலின் தெற்கு புறமாக மேற்கு நோக்கி நகரும்.

*ஜன 6 சனிக்கிழமை மதியம் கடலூர் மயிலாடுதுறை காரைக்கால் ஆகிய மாவட்ட கடலோரம் தொடங்கும் மழை, பிறகு டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே தொடங்கும்.
மாலை கடலூர் மேற்கு, மயிலாடுதுறை உள்பகுதி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் இரவு நள்ளிரவு புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர்,தேனி திண்டுக்கல்,கரூர், திருப்பூர்,ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் தெரிகிறது.
நீலகிரி குந்தா நீர்பிடிப்பு பகுதிகள், அவலாஞ்சி வால்பாறை, அமராவதி நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளிட்ட ஓரு சில சுற்று வட்டார பகுதிகளின் ஓரிரு இடங்களில் அதிகன மழை வாய்ப்பு தெரிகிறது.
இதே நேரத்தில் சேலம், நாமக்கல்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை அதிகாலைக்குள் நல்ல மழை பொழியும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களுக்கும் இன்று இரவு, நாளை அதிகாலை மழை வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட வட கோடி மாவட்டங்களை ஒதுக்கினால் அம் மாவட்டங்களில் ஜனவரி 7,8 கூடுதல் மழை வாய்ப்பு.

ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் தொடங்கும் மழை தெற்கே, மேற்கே தொடங்கி தொடங்கி தீவிரமாகி உள்ளே, வடக்கேயும் தொடங்கி அனைத்து மாவட்டங்களில் ஜனவரி 7,8 தீவிரமாக இருக்கும்.
ஜனவரி 9,10 டெல்டா, தென்மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்களில் தொடரும்.

இதில் ஜன 8,9 டெல்டா, தென் மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்களில் பிற மாவட்டங்களை ஒப்பிடும் பொழுது நிறைய மழை தெரிகிறது.

வரும் ஜனவரி 10 வரை
4 நாள்கள் பெய்யும் மழை கீழ்கண்ட மாவட்டங்களில் நிறைய மழை தெரிகிறது.
அவை.
கன்னியாகுமரி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை,தேனி,இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகியமாவட்டங்கள் ஆகும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கும் மழை உண்டு.
அதையும் தாண்டி நெல்லூர், திருப்பதி சித்தூர், நகரி, குப்பம், கோலர், பெங்களூரு, கார்வார், உடுப்பி, மங்களூரு வரை கன மழை உண்டு.
தமிழ்நாடு போல மாஹே,கேரளாவிலும் கனமழை பொழியும்.

இந்த நிகழ்வால் மழை பற்றாக்குறை மாவட்டங்களுக்கும் சிறப்பான மழை கிடைக்கும்.

டெல்டா மாவட்டங்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும்.

தயவுசெய்து தண்ணீரை ஆற்றில் வடிய விட்டு கடலுக்கு அனுப்பாமல், முடிந்த வரை வயலில் தேக்கி அறுவடை வரை நீர் பற்றாக்குறையை சமாளித்திடுங்கள்.

கூடுதல் நீரை பண்ணைக்குட்டைகளில் சேமித்திடுங்கள்.

ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்த வரலாற்றில் இடம் பிடித்த மழை மீண்டும் இப்போதைக்கு பெய்யாது என்ற போதிலும் சில மாவட்டங்களின் ஏரிகள் குளங்கள்,ஆறுகள் கரையோரம் மட்டும் முன்னெச்சரிக்கை அச்சப்படாமல் சற்று தேவை.

ஏரி, குளங்கள், அணைகள் நிரம்பியுள்ள மாவட்டங்களில் அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, கோவை வடக்கு, திருப்பூர் வடக்கு, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் நீர்நிலை அருகே வசிப்பவர்கள் மற்றும் வால்பாறை, கொடைக்கானல்,நீலகிரி, சபரிமலை, பம்பை பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டிருப்பவர்கள் அச்சப்படாமல், பீதி அடையாமல், நிதானமாக சிந்தித்து முன்னெச்சரிக்கை யுடன் இருந்தால் போதுமானது.

அதே போல தென் மாவட்டங்களில் ஜன 8,9 மழை எப்படி அப்டேட்ஸ் அவசியம் பார்க்கவும்.

ஜன 10,11 அடுத்த காற்று சுழற்சி வருகையும், முதல் சுழற்சி நீடிப்பும் ஜனவரி 10,11 தேதிகளில்
தென் மாவட்டங்களில் மிதமான மழை ஆங்காங்கே தரும்.

ஜனவரி 12 முதல் குளிர் காற்று, குளிர் வானிலை நிலவும்.

ந. செல்வகுமார்
6.1.24-2PM
வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *