MANDOUS Cyclone மாண்டஸ் புயல் அச்சம் தீர்க்கும் ஆய்வறிக்கை: வங்கக் கடலின் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகியுள்ள தாழ்வு பகுதி, படிப்படியாக தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வு மண்டலம் என்று தீவிரமடைந்து, டிசம்பர் 7 ல் புயலாக உருவெடுக்கும். புயலாக மாறினாலும் கரையை தொடும்பொழுது செயலிழந்து தாழ்வு பகுதியாக கரை கடக்கும். கடலில் புயல் இருக்கும் என்பதாலும்,அது நெருங்கி வந்து கடலூர், புதுச்சேரி ,விழுப்புரம் மாவட்டங்களுக்கு இடையே செயலிழந்து கடக்கும் என்பதாலும், டிசம்பர் 7,8 ல் இலங்கையின் தமிழர் பகுதிகளாம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தரைக்காற்றுடன் அதீத கன மழை பொழியும். டிசம்பர் 8 9 10 தேதிகளில் தமிழகத்தில் மேற்கு ,வட மேற்கு திசை காற்றுடன் கனமழையும் ஆங்காங்கே ஆங்காங்கே அதிக கன மழை பொழியும். புயல் வராது, புயல் காற்று வராது, தரைக்காற்று மட்டும் புயலுக்குள் போகும் . தரைக்காற்று கடல் நோக்கி போகும் என்பதால் அது அச்சம் ஊட்டும்.அச்சம் வேண்டாம். மேலும் விளக்கம் பெற ஆடியோ அறிக்கை கேட்கவும்.
வானிலை ஆய்வுகளை மிகச்சிறப்பாக இது நாள் வரை தொய்வின்றி தொடர்ந்து சேவை செய்தும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் சரியான தகவல்களை தினந்தோறும் கொடுத்து வருவதற்கு வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.