10.12.22-8AM அறிக்கை:-மான்டோஸ் செயலிழந்து பரவல். நகர்வு வழி எது? மழை எங்கே?

10 12 2022 அதிகாலை வானிலை ஆய்வு அறிக்கை:மான்டோஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து ,கடக்கும் போதே செயலிழந்து கொண்டு உள்ளே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக சென்னைக்கு மேற்கு 50 கிலோமீட்டர் தொலைவிலும் மாமல்லபுரத்திற்கு வடமேற்கே 70 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு ,மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. காலை 8.30மணி அளவில் காஞ்சிபுரம் தலைநகர் பகுதியை ஒட்டி அமையும். பிறகு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பகுதிக்கு நகர்ந்து மெல்ல வேலூர் மாவட்டத்திற்கும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் மாலையில் நகர்ந்து இன்று இரவு நாளை தெற்கு கர்நாடகா வழியாக அரபிக் கடலை அடையும்.காலை 8.30 மணிக்கு தாழ்வு மண்டலமாக செயலிழந்து காலை 10.30க்குள் ராணிப்பேட்டை மாவட்டத்தை மையமாக வைத்து பறந்த தாழ்வு பகுதியாக மாறி தாழ்வு பகுதியில் தெற்கு பகுதி டெல்டா மாவட்டங்களில் அமைய வடக்கு பகுதி தெற்கு ஆந்திர பகுதியில் அமைய மையப்பகுதி ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அமையும்.இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் அரியலூர் பெரம்பலூர் கடலூர் ஆகிய மாவட்டங்களில் விட்டு விட்டு தூறல், நனைக்கும் மழை காணப்படும். புதுச்சேரி விழுப்புரம் கள்ளக்குறிச்சி , செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தென்கிழக்கு கிழக்கு காற்று மூலம் அவ்வப்பொழுது லேசான மழை பொழியும், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை வாய்ப்புள்ளது. தர்மபுரி சேலம் ஈரோடு நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலைக்கு மேல் மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பு தெரிகிறது. திருச்சி கரூர் திருப்பூர் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நனைக்கும் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தூறலாம் நனைக்கலாம்.இந்த நிகழ்வு அரபிக்கடல் சென்ற பிறகு டிசம்பர் 11 முதல் 13 வரை கிழக்கு காற்று ஈர்த்து மாலை இரவில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும்.டிசம்பர் 14 15 மழைக்கு வாய்ப்பு குறைவு.அடுத்த நிகழ்வாக தாழ்வு பகுதி அல்லது நன்கமைந்த தாழ்வு பகுதி இலங்கையை ஒட்டி வந்து தமிழக தரையேறி அரபிக் கடல் செல்லும் நிகழ்வு வரும் டிசம்பர் 16 முதல் 22 வரை நடைபெறும்.. இந்த காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கன மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒரு சில நாள் அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் புதுச்சேரி கிருஷ்ணகிரி தர்மபுரி நாமக்கல் சேலம் ஈரோடு நீலகிரி உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஒரு நாள் இடைவெளி விட்டு மழை பொழிவானது பொங்கல் வரை இருக்கிறது. டிசம்பர் 31 முடிய வடகிழக்கு பருவமழை காலம் முடிந்தாலும் குளிர்கால மழையாக ஜனவரியிலும் இரண்டு நிகழ்வால் நல்ல மழை காத்திருக்கிறது. மழையை எதிர்நோக்கி இருக்கும் விவசாயிகள் கவலை இல்லாமல் மழை உள்ளது என்ற நம்பிக்கை கொண்டு விவசாயத்திற்கு திட்டமிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.ந. செல்வகுமார்

மழையை எதிர்நோக்கி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த மாவட்டம் மக்களுக்கு அன்பான வேண்டுகோள்


இதற்கு அடுத்தபடியாக டிசம்பர் 16 17 18,19 தேதிகளில் தாழ்வு மண்டலம் அல்லது தாழ்வு பகுதி வட இலங்கை டெல்டா மாவட்டங்கள் வழி அரபிக்கடல் சென்று அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகம் மழை கொடுப்பதற்கும் அதிக வாய்ப்பு

3 comments

  1. வணக்கமும் வாழ்த்துகளும்.
    தங்களுடைய பணி சிறப்பானது. மழை விபரங்கள் எல்லாமே பாராட்டக்கூடியது ஆகும்.நீண்ட ஆயுள் &பல்லாண்டு வாழ்க.

  2. வணக்கமும் வாழ்த்துகளும்.
    தங்களுடைய பணி சிறப்பானது. மழை விபரங்கள் எல்லாமே பாராட்டக்கூடியது ஆகும்.நீண்ட ஆயுள் &பல்லாண்டு வாழ்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *