இன்று நாளை கனமழை எங்கே? அடுத்த நிகழ்வு வழித்தடம் எது? மழை எப்படி?

2022 டிசம்பர் 12 அதிகாலை ஆய்வறிக்கை:

மாமல்லபுரம் கரைகடந்த மான்டோஸின் செயலிழந்த பகுதி காற்று சுழற்சியாக கர்நாடகாவின் மங்களூரு கேரளாவில் கோழிக்கோடு இடைப்பட்ட பகுதியில் அரபிக் கடலில் இன்று காலை இறங்கவுள்ளது.
அரபிக்கடலை அது தொட்டுவிட்டது முழுமையாக இன்று காலை இறங்கி மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரமடைந்து, டிசம்பர் 13 14 தேதிகளில் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும். பிறகு விலகி சென்று, தாழ்மண்டலமாக தீவிரமடைந்து ஆப்பிரிக்க பகுதியை நோக்கி விலகி செல்லும்.
இதன் காரணமாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மேற்கு காற்று நுழைய, தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாக கிழக்கு காற்று ஈர்க்கப்பட, தமிழக உள் மாவட்டங்களில் கிழக்கு மேற்கு காற்றுகள் குவிய,தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெப்ப சலன மழை போல டிசம்பர் 14 வரை ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மழை பொழியும்.
மழை பெய்யும் இடத்தில் கனமடையாக பெய்யும். அதிகபட்சமாக ஒரு மணி நேரம் நீடிக்கும். கடலோரத்தில் அதிகாலையிலும் காலையிலும் உள் மாவட்டங்களில் மதியம் மாலை நேரங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மாலை இரவு நள்ளிரவு அதிகாலை நேரங்களிலும் மழை பொழியும்.

டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 16 முற்பகல் மட்டும் இடைவெளி கிடைக்கும். டிசம்பர் 15 16 தேதிகளில் இடைவெளி கொடுத்தாலும் நல்ல வெயில் காணப்பட்டாலும் ஓரிரு இடங்களில் கிழக்கு காற்று வருகை காரணமாக நனைக்கும் மழைக்கு வாய்ப்பு தெரிகிறது. உலர்த்துபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் போதும்.

டிசம்பர் 13 தெற்குஅந்தமான் கடற் பகுதிக்கு வரும் தென் சீனக் கடல் காற்று சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி டிசம்பர் 16ஆம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்று இலங்கையை தொட்டு டிசம்பர் 17 டெல்டா மாவட்ட கரையை நெருங்கி வந்து வட இலங்கை மற்றும் டெல்டா மாவட்டங்கள் இடைப்பட்ட பகுதிக்கு வந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கன மிக கனமழையை கொடுப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.


பிறகு டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்கள் வழியாக டிசம்பர் 21வரை மேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 22,23,24 இல் அரபிக் கடலில் இறங்கி கிழக்கு காற்றை ஈர்த்தும் டிசம்பர் 24 வரை மழை பொழிவை கொடுக்கும். டிசம்பர் 24 க்கு முன் ஒரு காற்று சுழற்சி அமைந்து கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் வரை மழை பொழிவை கொடுக்கும். கிறிஸ்மஸ்க்கு இடைவெளி கொடுத்து கிறிஸ்மஸுக்கு பிறகு வரக்கூடிய நாட்களில் தீவிர நிகழ்வு தமிழகம் நெருங்கி டிசம்பர் 28 29 30 31 ஜனவரி 1,2,3 தீவிர நிகழ்வால் மழைப்பொழிவு கொடுக்கும். டிசம்பர் இறுதி நாள்கள் நிகழ்வு புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இப்படி பொங்கலுக்கு முன் ஒரு நிகழ்வும் பொங்கலுக்கு பின் ஒரு நிகழ்வும் என ஜனவரி 20 வரை நிகழ்வுகளால் வடகிழக்கு பருவமழை தொடரும்.
நல்ல மழைப்பொழிவு இருக்கிறது, வறட்சியான பகுதியில் என்று எதுவுமே இருக்காது .
அனைத்து ஏரி குளங்களும் நிரம்பும் பெய்ய வேண்டிய மழை தாமதமாக பொழிய காத்திருக்கிறது. கண்டிப்பாக பொங்கலுக்குள் நிறைய மழை பொழியும். பல மாவட்டங்களில் சராசரிக்கு மிகவும் கூடுதல் மழையும், மேலும் பல மாவட்டங்களில் சராசரிக்கு கூடுதல மழையும், சில மாவட்டங்களில் சராசரி மழை என்ற நிலையை அடையும். குழப்பிக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் இருந்து திட்டமிட்ட வேளாண்மை செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *