மெல்ல வரும் தாழ்வு டிச 19 முதல் 31 முடிய கரையோரம் காத்திருக்கும். கனமழை எப்பொழுது?

2022 டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை

தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையை நெருங்கி வந்திருக்கிறது.

இலங்கை வானிலை:
டிசம்பர் 18 ஞாயிறு இலங்கைக்கு மழையை தொடுக்கும். தொடக்கத்தில் வெப்ப குளிர் காற்று சந்திப்பு கடலில் அமைந்திருக்கும் இதனால் கடலில் மழை பொழிவை கொடுத்த பிறகு மாலைக்கு மேல் இலங்கையில் மழை தொடக்கும்.
ஒரே நேரத்தில் பரவலான மழயை கொடுக்காது, நிகழ்வு அங்கும் இங்கும் நகர்ந்து நகர்ந்து மழை பொழிவு இடத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும். டிசம்பர் 31 வரை இலங்கையின் ஒட்டுமொத்த பகுதிக்கும் மழைப்பொழிவு இருந்து கொண்டிருக்கும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும். டிசம்பர் 24க்குள் குறைவாக கிடைத்தாலும் டிசம்பர் 27 க்கு மேல் நிறைய மழைப்பொழிவு தீவிர நிகழ்வால் கிடைக்கப்பெறும்.

தமிழக வானிலை:
டிசம்பர் 18 ஞாயிறு நள்ளிரவு அல்லது டிசம்பர் 19 திங்கள் அதிகாலை, காலை ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்ட கடலோரம், நாகப்பட்டினம் மாவட்ட வேதாரண்யம் பகுதியில் முதல் மழையை தொடக்கும்.


டிசம்பர் 19 திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் மாலை இரவு டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் மழை பொழிவு பரவலாகும்.

டிசம்பர் 19 திங்கட்கிழமை இரவு அனைத்து மாவட்டங்களிலும் மழை தொடங்கி விடும்.

டிசம்பர் 20 முதல் 24 முடிய தமிழக கடலோரம் நெருங்கி வந்த அமைய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் காற்று ஓரளவு ஈர்த்து கிடைக்க பெற தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அமைகிறது குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் தென் கடலோர மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்கள் வடகடலோர மாவட்டங்கள் நல்ல மழை பொழிவு பெறும்.

டிசம்பர் 19 திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் நல்ல மழை பொழிவு கிடைக்க, டிசம்பர் 20 செவ்வாய் முதல் வெள்ளி வரை நடக்கவுள்ள பள்ளிகளின் (அரையாண்டுத்தேர்வு) இரண்டாம் பருவத் தேர்விற்கு இடையூறு கொடுக்கும் என்று தெரிகிறது.

மிக முக்கிய குறிப்பு

நிலநடுக்கோட்டை ஒட்டி தெற்கே உருவாகியுள்ள தென் அறைக்கோள ஆழ்ந்த தாழ்வு மண்டலம், வட அரைக்கோள குளிர் காற்றை ரஷ்யா, மங்கோலியா ,சீனா ,வியட்நாம் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் ,மலேசியா, அந்தமான் தெற்கு வங்க கடல் வழியாக ஈர்க்கிற காரணத்தால் வட துருவ காற்று வங்கக்கடல் வழியாகநிலநடுக்கோட்டை தாண்டியும் பயணிக்கிறது.

அந்தமான் சுமத்ரா இலங்கை இடைப்பட்ட பகுதியில் நிலை கொண்டிருக்கும் தாழ்வு பகுதி வடதுருவ காற்றை தனக்குள் ஈர்த்து அனுப்பி வைக்கிறது.

நிலநடுக்கோட்டை ஒட்டி தெற்கு பகுதியில் நீடிக்கும் தாழ்வு மண்டலம் தெற்காக மகர ரேகை நோக்கி விலகி செல்லும் என்பதால் நிலநடுக்கோட்டு காற்று இலங்கை நெருங்கும் தாழ்வு பகுதிக்கு வரும்.

டிசம்பர் 27க்குள் மேலும் ஒரு நிகழ்வு தற்போதைய வங்கக்கடல் நிகழ்வுடன் இணைய வரும் என்பதால், இணைய வரும் முன் தென் சீனா கடற்பகுதி மற்றும் தாய்லாந்து வளைகுடா பகுதியுடன் வட துருவ குளிரலை வருவது தடைபடும் என்பதால் வெப்ப நீராவி காற்று மற்றும் அளவான குளிர் காற்று கிடைத்து தமிழகத்திற்கு நல்ல மழை பொழிவு கிடைக்கப்பெறும்.

டிசம்பர் 19 தமிழகத்திற்கு மழையை கொண்டு வரும் தாழ்வு பகுதி டிசம்பர் 29 வரை இலங்கை அருகே நீடித்து தீவிரமடைந்து பிறகு இலங்கை கடந்து தென்தமிழகம் வழியாகவோ குமரி கடல் வழியாகவோ அரபிக் கடலுக்கு பயணிக்கும் இதனால் ஜனவரி 1 முடிய மழை பொழிவு தொடரும்.

டிசம்பர் 24 வரை மழை பொழிவை கொடுத்து பிறகு அடுத்த நிகழ்வு இணைவதற்கு விலகி சென்று இணைந்து வரலாம்.இணைவதற்கு விலகி சென்று இணைந்து வரும் இடைப்பட்ட காலத்தில் மழை இடைவெளி கொடுத்து குளிரையும் கொடுக்கும். இணைந்து வந்து மீண்டும் கனமழையை கொடுக்கும்.

எந்த மாவட்டத்திற்கு எப்பொழுது எவ்வளவு மழை என்பதை இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு மட்டுமே அறிவிக்க முடியும்.

டிசம்பர் இறுதிக்குள் ஒரே நிகழ்வு இரண்டாவது நிகழ்வுடன் இணைந்து ஜனவரி 2 வரை மழை கொடுக்கும் நிலையில் , ஜனவரி 6 முதல் 14 முடிய அடுத்த நிகழ்வு தமிழகம் வந்து மழை பொழிவு கொடுக்கும். ஒட்டுமொத்த அனைத்து தமிழக மாவட்டங்கள்,ஆந்திர பிரதேசம் ,கர்நாடகா, கேரளா, புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிக்கும் பொங்கலுக்குள் நிறைய மழை பொழிவு கொடுக்கும்.


வறட்சியான பகுதியில் என்று எதுவுமே இருக்காது .
கண்டிப்பாக பொங்கலுக்குள் நிறைய மழை பொழியும். பல மாவட்டங்களில் சராசரிக்கு மிகவும் கூடுதல் மழையும், மேலும் பல மாவட்டங்களில் சராசரிக்கு கூடுதல மழையும், சில மாவட்டங்களில் சராசரி மழை என்ற நிலையை அடையும். குழப்பிக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் இருந்து திட்டமிட்ட வேளாண்மை செய்யுங்கள்.

ந.செல்வகுமார்.

அப்டேட்ஸ் பெற
இணைய தளம்:
www.Selvakumarweather.Com
யூ-டியூப் vaanilai ariviyal.
youtube.com/@NammaUzhavan

https://youtu.be/_T_5N9n1ktY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *