இலங்கை நெருங்கும் தாழ்வு மண்டலம். கனமழை எங்கெங்கே? எப்பொழுது?

2022 டிசம்பர் 24-5PM ஆய்வறிக்கை:
(விளக்க ஆடியோ அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது)


வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென் மேற்காக நகர்ந்து டிசம்பர் 24 மாலை 5 மணி நிலவரப்படி கோடியக்கரைக்கு கிழக்கு தென்கிழக்கு 380 கிலோ மீட்டர் தொலைவிலும் திருகோணமலைக்கு கிழக்கு வட கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

வரும் மணி நேரங்கள் தொடர்ந்து தென் மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 25 காலை வட இலங்கை வரும்.

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று வடஇலங்கை வழியாக கரை கடந்து நன்கமைந்த தாழ்வு பகுதியாக செயலிழந்து இலங்கையின் மேற்கு பகுதியை அடைத்து மன்னார் வளைகுடாவின் தெற்கு பகுதி வழியாக நகர்ந்து மீண்டும் தீவிரமடைந்து குமரிக்கடல் வழியாக அரபிக் கடலுக்கு செல்லும்.

டிசம்பர் 24 சனிக்கிழமை நள்ளிரவு திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் புதுச்சேரி கடலூர் மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சாரல் காற்றுடன் மழை பொழிவு தொடங்கும்.


டிசம்பர் 25 அதிகாலை முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக டிசம்பர் 25 26 27 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் கனமழை காத்திருக்கிறது.
மத்திய மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது. கர்நாடக எல்லையோரம் ஆந்திர எல்லை வரும் வரை ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும். வடகடலோரம் கூட நல்ல மழை பொழிவு எதிர்பார்க்கலாம்.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் சென்றதும் டிசம்பர் 26,27 தேதிகளில் தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளின் தெற்கு பகுதி மாவட்டங்கள் லேசான காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும்.

இந்த நிகழ்வின் காரணமாக கனமழை பொழியும் என்று கண்டறியப்பட்டுள்ள பகுதிகள் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி இராமநாதபுரம் ,புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடலோரம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி விருதுநகர் ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை திண்டுக்கல் திருச்சி கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்பகுதிகளிலும் நல்ல மழை பொழிவு தெரிகிறது.

மேலும் டிசம்பர் 26 27 தேதிகளில் கன்னியாகுமரியில் திருநெல்வேலி இடைப்பட்ட மலைப்பகுதி அணைகள் நீர்பிடிப்பு பகுதிகள் கனமழை பொழிவு பெறும். கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி விருதுநகர் தேனி மாவட்டங்களின் மேற்கு கேரளா எல்லை ஓரம் கனமழை தெரிகிறது.

நீலகிரி ,கோயம்புத்தூர், திருப்பூர்,திண்டுக்கல் மதுரை திருச்சி கரூர் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் டிசம்பர் 25 26 27 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே கனமழையும் பரவலான மழையும் தெரிகிறது.

ஈரோடு சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் வேலூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 25 26 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை விழுப்புரம் புதுச்சேரி கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய முதலில் மழை தொடங்கிய மாவட்டங்களுக்கும் டிசம்பர் 27 முடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

அரியலூர் பெரம்பலூர் கடலூர் மேற்கு பகுதி டிசம்பர் 25 26 27 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கனமழையும் பரவலான மழையும் இருக்கும்.

குற்றால அருவியில் டிசம்பர் 26 27 28 தேதிகளில் கூடுதல் நீர் பெருக்கு ஏற்பட்டு குளிப்பதற்கு தடை விதிக்கப்படலாம்.

டிசம்பர் 28 தேதி அரபிக்கடலில் சென்று கிழக்கு காற்றில் ஈர்க்கும் என்பதால் மழை பொழிவு டிசம்பர் 28 வரை ஆங்காங்கே ஆங்காங்கே தொடரும்.

*டிசம்பர் 25 நிகழ்வு நெருங்கி கரை ஏறும் வரை நல்ல மழை பொழிவை கொடுக்கும். பிறகு
நிகழ்வு டிசம்பர் 25 பிற்பகல் அல்லது இரவு இலங்கை தரை ஏறி நிற்கும் பொழுது தீவிரம் குறைந்து இருந்தாலும் மன்னார் வளைகுடாவில் இறங்கி குமரி கடல் செல்லும் வரை நிறைய மழைப்பொழிவு வாய்ப்பு இருக்கிறது.
நிகழ்வு எந்த அளவிற்கு இலங்கையின் வடக்கு முனையில் கடக்கிறதோ அந்த அளவிற்கு டெல்டா மாவட்டங்களின் மழைப்பொழிவு கூடும் அதேபோல் குமரிமுனையை எந்த அளவிற்கு நெருங்கி வருகிறதோ அந்த அளவிற்கு தென்மாவட்டம் மழை பொழிவு கூடுதலாகும்.

டிசம்பர் 25 26 27 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் லேசான சாரல் காற்று இருக்கும். காற்று அச்சம் வேண்டாம் . நிகழ்வு இலங்கை கடந்து மன்னார் வளைகுடா கடந்து குமரி கடல் வழி அரபிக்கடல் செல்லும் என்பதால் வடகிழக்கு கிழக்கு காற்றின் நுழைவு இருக்கும் . மழைக்கு முன் தொடங்கும் லேசான காற்றை கண்டு துளியும் அச்சப்பட வேண்டாம்.

இலங்கைக்கு எச்சரிக்கை

இலங்கையின் வடக்கு பகுதியில் கரை கடக்கும் என்றாலும் இலங்கையின் வடக்கு பகுதியில் நல்ல மழை பொழிவை கொடுக்கும் அதே நேரத்தில் இலங்கையின் மத்திய மற்றும் தெற்கு பகுதி கல்முனை தொடங்கி கொழும்பு வரை அனுராதாபுரத்திற்கு தெற்கே மலை பகுதிகள் ரத்னபுரா கண்டி, கல்முனை அம்பாறை போன்ற பகுதிகளுக்கு பாதிக்கும் மழை தெரிகிறது. இலங்கையின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படலாம்

மேலும் விபரம் பெற விளக்க ஆடியோ அறிக்கை கேட்கவும்👇

ந.செல்வகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *