2022 டிசம்பர் 24 மாலை இரவு டிசம்பர் 25 அதிகாலை மழை பெய்த இடங்களும்அளவுகள்
2022 டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தின அதிகாலை ஆய்வறிக்கை
அனைவரையும் இனிய கிறிஸ்துமஸ் திருநாளில் வணங்கி மகிழ்கிறேன்
இந்த நிகழ்வால் மழை பொய்த்து விடும் போல் தெரியலாம்
பனி தூறல் போன்ற மழைப்பொழிவு கொடுக்கலாம்
பெய்யும் என்ற நம்பிக்கையை இழக்க வைக்கலாம்
நம்பிக்கையுடன் இருங்கள் .
நல்ல மழை கிடைக்கும்.
பொழியும் தவிர பொய்க்காது.
எல்லாம் மதியத்திற்குப் பிறகு படிப்படியாக மாறத் தொடங்கும்
இலங்கை கரை கடந்து மன்னார்வளைகுடாவின் தெற்கு பகுதியில் இறங்கி நிலநடுக்கோட்டு வெப்பக் காற்றை ஓரளவு பெற்று மீண்டும் தீவிரமடைந்து வடகிழக்கு காற்றை கிழக்கு காற்றை ஈர்த்து கண்டிப்பாக தமிழகத்தில் மழை பொழிவை டிசம்பர் 27 வரை கொடுக்கும்
டெல்டா மாவட்டங்களின் தெற்கு பகுதிக்கும் தென் மாவட்டங்களின் கடலோர பகுதிக்கும் தென் மாவட்டங்களின் உள்பகுதிக்கும் தென் மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கும் கண்டிப்பாக நல்ல மழை பொழிவு கொடுக்கும்.
பாலக்காடு கணவாய் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கும் மத்திய உள் மாவட்டங்களுக்கும் வடக்கு டெல்டாவிற்கும் அதனை ஒட்டிய வடமாவட்டங்களுக்கும் மழை பொழிவை கொடுக்கும்.
கர்நாடக எல்லையோரம் ,ஆந்திர எல்லையோரம் வரை மழை முன்னேறும் என்றால் உங்களுக்கும் மழை கிடைக்கும் என்று அர்த்தம்.
ஆக குறைந்தபட்சம் நனைக்கும் லேசான மழை முதல் மிதமான மழை வரை கர்நாடக ஆந்திரா எல்லையோரம் கிடைக்கும்.
பிற மாவட்ட பகுதிகளுக்கு இதைவிட கூடுதல் மழை தான் என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் சென்றதும் டிசம்பர் 26,27 தேதிகளில் தென் கடலோரம் மிதமான காற்றுடன் கனமழை இருக்கும்.
நிகழ்வு எந்த அளவிற்கு இலங்கையின் வடக்கு முனையில் கடக்கிறதோ அந்த அளவிற்கு டெல்டா மாவட்டங்களின் மழைப்பொழிவு கூடும் அதேபோல் குமரிமுனையை எந்த அளவிற்கு நெருங்கி வருகிறதோ அந்த அளவிற்கு தென்மாவட்டம் மழை பொழிவு கூடுதலாகும்.
இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையின் வடக்கு பகுதியில் கரை கடக்கும் என்றாலும் இலங்கையின் வடக்கு பகுதியில் நல்ல மழை பொழிவை கொடுக்கும் அதே நேரத்தில் இலங்கையின் மத்திய தெற்கு பகுதி கல்முனை தொடங்கி கொழும்பு வரை அனுராதாபுரத்திற்கு தெற்கே மலை பகுதிகள் ரத்னபுரா கண்டி, கல்முனை அம்பாறை போன்ற பகுதிகளுக்கு பாதிக்கும் மழை தெரிகிறது. இலங்கையின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படலாம்
ந.செல்வகுமார்.