2022 டிசம்பர் 26 திங்கட்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை
இலங்கை தரை மீது நீடித்துக் கொண்டிருந்த தீவிரத்தாழ்வு பகுதி மன்னார் வளைகுடாவின் தெற்கு பகுதியில் இறங்கியது .இன்று இரவு குமரிக்கடலை அடைந்து ,நாளை அரபிக் கடலின் லட்சத்தீவுவின் தெற்கு பகுதிக்கு செல்லும். பிறகு படிப்படியாக விலகிச் செல்லும்.
நேற்று உள் மாவட்டங்களில் நீடித்த வெப்பநிலை காரணமாக சேலம் ,நாமக்கல் ஈரோடு ,நீலகிரி ,கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ,கரூர் ,திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் ,தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ,ஆகிய மாவட்டங்களில் இரவு நள்ளிரவு அதிகாலை நேரங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழிவை கொடுத்தது.
26.12.22 வானிலை எதிர்பார்ப்பு.
டெல்டா, கடலோர மாவட்டங்கள், வடகடலோர,வட உள் மாவட்டங்கள் பகுதியில் நேற்று பகலில் கொடுத்த மழை போதிய வெப்பமின்மை காரணமாக ஓய்ந்து இருக்கிறது.
தற்பொழுது நிகழ்வு மன்னார் வளைகுடாவின் தெற்கு பகுதி குமரி கடல் பகுதியில் நீடித்துக் கொண்டிருக்கிற காரணத்தினால், கிழக்கு வடகிழக்கு காற்றும் தெற்கு தென்கிழக்கு காற்றும் தமிழகத்தில் நுழைந்து வெயில் வந்த பிறகு, வெப்பம் உயர்ந்த பிறகு ,வெயிலுக்கு இடையே வெளிச்சத்திற்கு இடையே அவ்வப்பொழுது மேகம் உருவாகி விட்டு விட்டு மழை பொழிவை கொடுக்கும்.
கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி விருதுநகர் ராமநாதபுரம் மதுரை தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் காலைக்கு பிறகு மேகம் உருவாகத் தொடங்கி வெயிலுக்கு இடையே விட்டுவிட்டு குறைந்த இடைவெளியில் நல்ல மழை பொழிவு இருக்கும்.
நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் காரைக்கால் மயிலாடுதுறை அரியலூர் பெரம்பலூர் திருச்சி நாமக்கல்,சிவகங்கை புதுக்கோட்டை மதுரை திண்டுக்கல், கரூர் திருப்பூர் கோயம்புத்தூர் நீலகிரி ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பம் உயர்ந்த பிறகு விட்டு விட்டு மழை பொழிவு கொடுக்கும் . அதாவது மதியம் கடலோரம் தொடங்கும் மழை, விட்டு விட்டு மாலை வரை நீடிக்கும் . மதியம் மாலை உள் மாவட்டங்களுக்கும் கடலோர மாவட்டங்களுக்கும் மழை பொழிவை கொடுத்து, இரவு மாலை நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் வரைக்கும் விட்டுவிட்டு மழை பொழிவை கொடுக்கும்.
திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் புதுச்சேரி கடலூர் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி தர்மபுரி. ஆகிய மாவட்டங்களில் மதியம் மாலை நேரங்களில் வெப்பச்சலன மழை போல் இடி மழை ஆங்காங்கே ஆங்காங்கே கொடுக்கும். பரவலாக இருக்காது ஒரு சில இடங்களில் மட்டும் இருக்கும்
27.12.22 வானிலை எதிர்பார்ப்பு:
குமரி கடலில் இருந்து அரபிக் கடலை நோக்கி நிகழ்வு நகர்ந்து சென்று கிழக்கு காற்றை ஈர்க்கும் என்பதால் டிசம்பர் 27 செவ்வாய் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் விட்டு விட்டு நல்ல மழை பொழிவு இருக்கும் .பெரும்பாலும் மதியம் மாலை இரவு மழையாக இருக்கும்.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய உள் மாவட்டங்களில் வெப்ப சலன இடி மழை போல் மதியம் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் இருக்கும்
வட மாவட்டங்கள் வட உள்மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு குறைவு
28.12.22 வானிலை எதிர்பார்ப்பு
தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் மிதமான மழை இரவில் இருக்கும்.தென் மாவட்டங்களில் ஆங்காங்கே நனைக்கும் மழை வாய்ப்பு.
டெல்டா மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளின் வடக்கு பகுதி மற்றும் மத்திய உள் மாவட்டங்களில் மேகம் உருவாகி குழப்பும் வானிலை நீடிக்கும். ஒரு சில இடங்களில் தூறலாம்.
நீண்டகால வானிலை அறிக்கை
2022 டிசம்பர் 29 முதல் ஜனவரி 7 முடிய உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். இரவு நேர பனிப்பொழிவு காணப்படும்.
இந்த காலகட்டத்தில் விதைப்பு அறுவடை செய்யலாம்.
2023 ஜனவரி 4 முதல் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் காற்று சுழற்சி நீடிக்கும் என்பதால் தமிழக கடலோரத்தில் டெல்டா மாவட்டங்கள் தென் கடலோரம் மற்றும் இலங்கை பகுதிகளில் மேகமூட்டம் உருவாகும், குழப்பமான வானிலை நிலவும் ஆனால் மழைக்கு வாய்ப்பு குறைவு. கடல் ஓரம் ஒரு சில இடங்களில் தூறல் காணப்படலாம்.
டிசம்பர் 8 முதல் 14 க்குள் நிகழ்வு உருவாகி இலங்கையை நெருங்க வாய்ப்பு இருக்கிறது. இதே நேரத்தில் வட துருவ குளிரலையின் ஆதிக்கம் இந்திய பெருங்கடல் வரை நீடிப்பதால் இடையூறும் இருக்கிறது.அந்த நேரத்தில் இடையூறு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை பொருத்து மழை வாய்ப்பு அமையும்.
இது தமிழகத்திற்கு எந்த அளவு முன்னேறி மழை கொடுக்கும் என்பது ஆய்வில் உள்ளது.
ஜனவரி 1 க்குள் முடிவு அறிவிக்கலாம்.