*01.01.2023 அதிகாலை ஆய்வறிக்கை.*
*காற்று சுழற்சி சுமத்திரா தீவு மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் உருவாகி இருக்கிறது.*
*பசிபிக் பெருங்கடலின் நிகழ்வு ஜனவரி 7,8,9 தேதிகளில் அந்தமான் கடற்பகுதிக்கு வந்து சுமத்திரா காற்று சுழற்சியுடன் இணைந்து ஜனவரி 10 11 12 13 தேதிகளில் இலங்கைக்கு மழை கொடுக்கும் வகையில் அமைந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கும் மழையை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.*
*இந்த காற்று சுழற்சி போராடி பொங்கல் வரை தமிழகத்தை நெருங்கும்.*
*இதன் காரணமாக ஜனவரி 5க்கு மேல் டெல்டா கடலோரம் தென்கடலோரம் குழப்பமான வானிலை மேகமூட்டம் ஆங்காங்கே தூறல் இருக்கும்.*
ஜனவரி 5 முதல் இலங்கையில் ஆங்காங்கே நனைக்கும் மழை காணப்படும்.
ஜனவரி 8ககு மேல் 14 க்குள் இலங்கை நெருங்கக்கூடிய தாழ்வு அமைவு தமிழகத்திற்குள் எந்த அளவிற்கு முன்னேறி மழை பொழிவை கொடுக்கும் என்பது ஆய்வில் உள்ளது.
*வட துருவத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைந்த அழுத்த பனிப்புயல் வட துருவ நாடுகள் அனைத்தையும் பாதிப்படையை செய்திருக்கிறது. குறிப்பாக கனடா அமெரிக்கா ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் வடகொரியா தென்கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத குளிர் காற்று வரலாறு காணாத பனிப்பொழிவு காரணமாக மாதக்கணக்கில் அனைத்தும் முடங்கி இருக்கிறது.*
*வடக்கு பசுபிக் பெருங்கடல் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய இரு வேறு பகுதிகளில் உருவாகும் உயர் மற்றும் தாழ்வு அழுத்தங்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தொடங்கி மெக்சிகோ வளைகுடா ஒட்டி உள்ள அமெரிக்க மாகாணங்களில் உறைந்து இருக்கக்கூடிய பனிப்பொழிவை வெள்ளப்பெருக்காக மாற்றும் அளவிற்கு வானிலை மாறி அமையும் மேலும் மழையுடன் கூடிய பனிப்பொழிவு வானிலை அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா தொடங்கி நியூயார்க் வாஷிங்டன் கனடாவின் ஒட்டாவா வரைக்கும் வெள்ள பாதிப்பு தெரிகிறது.*
*அதேபோல் மத்திய தரைக் கடல் பகுதி மேற்கத்திய இடையூறு இமயமலை வரும் வழியில் பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் அருகில் இருக்கக்கூடிய அரபுநாடுகளின் பனிப்பொழிவுக்கிடையே கனமழை வாய்ப்பு தெரிகிறது. இதில் சவுதி அரேபியாவின் மெக்கா மதினா ஜெட்டா ரியாத் குவைத் ஈராக் ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஜனவரி 4 முதல் 8 வரை அதிகம் மழை பொழிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.*
*இந்த குளிர் காற்று தான் பசிபிக் பெருங்கடல் தென் சீனக்கடல் தாய்லாந்து வளைகுடா வழியாக தென் அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியா வரை பயணிக்கிறது.*
*இந்தக் குளிர் காற்று வங்கக்கடலிலும் இந்த ஆண்டு இரண்டு முறை நுழைந்து மழை பொழிவின் வழக்கமானகுணத்தையும் தீவிர தன்மையையும் நகர்வையும் மாற்றி அமைத்தது.*
*இந்த நிலை தொடர்கிற காரணத்தால் 2023 ஜனவரி 8 முதல் 14 வரை எதிர்ப்பார்க்கும் நிகழ்வையும், ஜனவரி 16 முதல் 24 வரை எதிர்பார்க்கும் நிகழ்வையும் தீவிர ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.*
*2023 ஜனவரி 8 முதல் 14 வரை இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் தென் கிழக்கு பகுதிக்கு நிகழ்வு வரும்.*
*2023 ஜனவரி 16 முதல் 24 வரை இடைப்பட்ட காலத்தில் தென் இலங்கை குமரிக்கடல் மாலத்தீவு பகுதிக்கு நிகழ்வு வர வாய்ப்பு இருக்கிறது.*
*மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் நெருங்குவது உறுதி அது தமிழகத்திற்கும் இலங்கைக்கும் மழை பொழிவை எந்த அளவிற்கு கொடுக்கும் .எந்த அளவிற்கு முன்னேறும் என்பதை வரக்கூடிய நாள்களில் உறுதிப்படுத்தலாம்.*
நம்முடைய துல்லிய வானிலை (அதிகாலை இரவு இரு நேரங்கள்) அறிக்கையை ஆண்டு முழுவதும் பார்த்து திட்டமிட்ட துல்லிய வேளாண்மை செய்து லாபம் அடையுங்கள்.
ந. செல்வகுமார்