2022 டிசம்பர் 3 இரவு நிலவர வானிலை சுருக்கம்
இன்று தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே மழை பொழிவு காணப்பட்டது.
தென் மாவட்டங்களில் பரவலாக கூடுதல் இடங்களில் கன மழை காணப்பட்டது.தற்பொழுது இம் மழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் நோக்கி முன்னேறி வருகிறது. இரவுக்குள் திருப்பூர் கோயம்புத்தூர் ஈரோடு தேனி உள்ளிட்ட மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே நல்ல மழை பொழிவை கொடுக்கும் நாளை டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை டெல்டா மாவட்டங்கள் வடகடலோர மாவட்டங்கள் வட உள் மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பரவலான மழை பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி பொழியும். ஒதுக்கிய இடங்களில் அடுத்தடுத்த மணி நேரங்களில் வந்து பொழியும்.குறைந்தபட்சம் உயிர் கொடுக்கும் மழை முதல் கனமழை வரை இருக்கும்.
டிசம்பர் 5 தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மழைப்பொழிவு காணப்படும் .
டிச 8 9 10 & டிச 15 16 17 தேதிகளிலும் வரக்கூடிய தீவிர நிகழ்வு குறித்து கீழே உள்ள ஆடியோ அறிக்கையில் அறியவும்.