2023 ஜனவரி 8 காலை ஆய்வறிக்கை
காற்று சுழற்சி இலங்கைக்கும் நிலநடுக்கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்கிறது.
நேற்று இரவு சென்னை கடலோரம் தூறல் காணப்பட்டது.
பிறகு கடலூர் மாவட்ட கடலோரம் மயிலாடுதுறை மாவட்ட கடலோரம்
காரைக்கால் மாவட்ட பகுதிகள்
நள்ளிரவுக்கு பின் மழைப்பொழிவு தொடங்கியது.
கடலூர் கடலோர மழை கடலூரின் உள்பகுதிக்கும், மயிலாடுதுறை மாவட்ட கடலோர மழை அரியலூர் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு பகுதி வரைக்கும், காரைக்கால் மழை திருவாரூர் மாவட்ட வடக்கு பகுதி மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட வடக்கு பகுதிக்கும் கடும் மூடுபனிக்கு இடையே தூறல் நனைக்கும் மழையை அதிகாலை காலை நேரங்களில் கொடுக்கலாம்.
இன்று ஜனவரி 8 அதிகாலை காலை நேரங்களில் கடலூர் கடலோரம் மயிலாடுதுறை மாவட்ட கடலோரம் குறிப்பாக பிச்சாவரம், பரங்கிப்பேட்டை , முடசலோடை, சிதம்பரம், சின்னக்காரமேடு, புவனகிரி ,கொள்ளிடம், பழையாறு, திருமுல்லைவாசல் ,பெருந்தோட்டம், திருநகரி ,சீர்காழி ,பூம்புகார், திருக்கடையூர், மங்கைமடம் ,தரங்கம்பாடி, பொறையார் ஆகிய பகுதிகளில் மிதமான மழையாக சில மணி நேரம் நீடித்து நின்று பெய்யலாம்.
ஜனவரி 8 ஞாயிறு காலைக்குள் கும்பகோணம் மயிலாடுதுறை நன்னிலம் திருவாரூர் வலங்கைமான் நீடாமங்கலம் போன்ற பகுதிகளுக்கு கடும் மூடு பனிக்கு இடையே திடீர் தூறல் அல்லது லேசான மிதமான மழை பொழிவை கொடுக்கலாம் .
இன்று பகல் டெல்டா மாவட்டங்களில் லேசான மரங்கள் அசையும் காற்றுடன் மேகம் சூழ்ந்த வானிலைக்கு இடையே தூறல் காணப்படலாம்.
தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மத்திய உள் மாவட்டங்களிலும் கடும் கருமேகம் சூழும். ஒரு சில இடங்களில் தூறல் நனைக்கும் மழை வாய்ப்பு.
அறுவடை விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். பாதிப்பு மழையல்ல. நனைத்தாலும் தூறினாலும் நீண்ட நேரம் நீடிக்காது.
இன்று ஜனவரி 8 நாளை ஜனவரி 9 மட்டுமே இந்த வானிலை.
அடுத்தடுத்த நிகழ்வுகள்
அடுத்தடுத்து பசிபிக் பெருங்கடல் முதல் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் குமரிக்கடல் பகுதி வரை (பசிபிக் பெருங்கடல், தென் சீனக்கடல், தாய்லாந்து வளைகுடா, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ) நிகழ்வுகள் நீடிக்கின்ற காரணத்தினால் தென் அரைக்கோளம் நோக்கிச் செல்லும் வட துருவ குளிர் அலை பிரிக்கப்பட்டு தென் அரைக்கோளம் நோக்கி பயணிக்கிறது.
அடுத்த நிகழ்வு
ஜனவரி 12 13 14 15 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு தெற்கே மேற்கு நோக்கி நகரும்.
இதனால் கடலோர மாவட்டங்களில் குழப்பமான மேகமூட்டம் வானிலை ஆங்காங்கே லேசான தூறல் மழை வரை இருக்கும். பரவலாக இருக்காது .பெரும்பாலும் குளிர் வானிலை மேகம் சூழ்ந்து காணப்படும்.
தென் கடலோரம் ஜனவரி 14 15 நனைக்கும் மழை முதல் லேசான மழை தெரிகிறது.
அதற்கு அடுத்த நிகழ்வு
காற்று சுழற்சி ஜனவரி 18 19 20 21 22 தேதிகளில் இலங்கைக்கு தெற்கு புறமாக இலங்கைக்கு மிக நெருக்கமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடலோர மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் மத்திய உள் மாவட்டங்களுக்கும் லேசான மழைப்பொழிவு முதல் மிதமான மழைப்பொழிவு வரை ஆங்காங்கே கொடுக்க தெரிகிறது. இதை வரக்கூடிய நாட்களில் உறுதிப்படுத்தலாம். அது பாதிக்கும் மழையாக அமையாது. நீடித்து நின்றும் பெய்யாது.
ஜனவரி இறுதி வார நிகழ்வு
ஜனவரி இறுதிவரை நிகழ்வு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் நகர்ந்து கடலோரம் குழப்பமான வானிலை தூறல் மழை பொழிவையும் கொடுக்கும் என்று தெரிகிறது.
அனைத்து நிகழ்வுகளுக்கும் இன்னும் நாட்கள் இருக்கின்றன. வரக்கூடிய நாட்களில் துல்லியம் தெரியவரும்.
எது எப்படியோ அறுவடையை பாதிக்காத மழையாக இருக்கும். குழப்பும் வானிலை நனைக்கும் மழை ஆகியவற்றிற்கு மட்டுமே கூடுதல் வாய்ப்பு.
அச்சமின்றி இடைவெளி அறிந்து ஆறுவடை செய்க.
ந. செல்வகுமார்.