ஜன 23,24 மிதமான மழை ஜன 27 முதல் கனமழை.இவை எங்கெங்கே? எப்போது?

2023 ஜனவரி 22 இரவு ஆய்வறிக்கை

2023 ஜனவரி 22 அதிகாலை ஆய்வறிக்கை

இன்றே மழை ஆரம்பம்,எங்கெங்கே? அறிக்கை.அறுவடைக்கு ஆலோசனை.
2023 மழை & வானிலை எப்படி?

2023 ஜனவரி 22 அதிகாலை ஆய்வறிக்கை.

ஜனவரி 22
இன்று ஜனவரி 22 ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மேகம் சேர்ந்து காணப்படும்.
மதியம் மாலை இரவு கடலூர் மயிலாடுதுறை காரைக்கால் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை திருச்சி தெற்கு ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே நனைக்கும் மழை முதல் மிதமான மழை வரை பெய்யும்.
ஜனவரி 23
ஜனவரி 23 கடலூர் மயிலாடுதுறை காரைக்கால் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் அரியலூர் பெரம்பலூர் திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை இராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி விருதுநகர் கன்னியாகுமரி தேனி மதுரை திண்டுக்கல் திருப்பூர் , கோயமுத்தூர் , ஈரோடு சேலம் நாமக்கல் ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும்.
ஜனவரி 24
ஜனவரி 24 இராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி விருதுநகர் மதுரை தேனி திண்டுக்கல் திருச்சி தெற்கு சிவகங்கை திருப்பூர் கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை வரை பெய்யும்.

டெல்டா மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்கள் தூறல் நனைக்கும்ழைக்கு வாய்ப்பு.

ஜனவரி 25 26
தற்போதைய நிகழ்வு புதிய நிகழ்வுடன் இணைய விலகி சென்று வரும் என்பதால் 26 27 மழைக்கு வாய்ப்பு குறைவு.
வானம் மேகம் சூழ்ந்து காணப்படும் ஒரு சில இடங்களில் தூறல் காணப்படலாம்.

ஜனவரி 27 க்கு மேல்
ஜனவரி 27 க்கு மேல் தீவிரமடைந்து இலங்கையை நெருங்கி வரும் என்பதால் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு.
தென் மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ,வட கடலோர மாவட்டங்கள் மிதமானது முதல் சற்று கனமழை வாய்ப்பு தெரிகிறது.

மேற்கத்திய இடையூறு:
மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் மேற்கத்திய இடையூறு காஷ்மீர் இமாச்சல்பிரதேசம், உத்தரகாண்ட் சிக்கிம் ஆகிய இந்திய மாநில பகுதிகளுக்கும், அண்டை நாடான நேபாளம் பூட்டான் பகுதிகளுக்கும் பனி மழை பொழிவு, கடும் குளிர் காற்று , உறைபனியை உருக செய்யும் மழை வரக்கூடிய வாரத்தில் அமையும். இது பஞ்சாப் ஹரியானா டெல்லி உத்திரப்பிரதேசம் பீகார் சண்டிகர் போன்ற பகுதிகளுக்கும் வரும் வாரம் மழை பொழிவை கொடுக்கும். அதே நேரத்தில் பனிச்சரிவையும் ஏற்படுத்தலாம்.

குளிர் மற்றும் மழைக்கு செட்டாகும் செட்டிங்:

மேற்கத்திய இடையூறு, இந்திய நிலப்பகுதி உயர் அழுத்தம்,வட இந்திய நிலப்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் காற்று சுழற்சி ,இவைகளுக்கு இடையே வெப்ப குளிர் காற்று சதவீதம் சரியாக அமைந்து தமிழ்நாட்டின் கர்நாடக ஆந்திர கேரளா எல்லையோரம் வரை ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி அவ்வப்பொழுது அருகருகே கூடுதல் குறைவாகவும் மழை பொழிவிற்கு சாதக அமைப்பு அமைகிறது.

குளிருக்கு இடையே அனைத்து மாநிலங்கள் மழை
வட இந்திய நிலப்பகுதி காற்று சுழற்சி இலங்கை காற்று சுழற்சியுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு குமரி முதல் காஷ்மீர் வரை, குமரி முதல் அருணாச்சல் பிரதேசம் வரை
அனைத்து இடைப்பட்ட மாநிலங்களுக்கும் ஓரிரு நாள் கனமழை வாய்ப்பை கொடுக்கும்.
கேரளா தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு சில நாட்கள் நல்ல மழை தெரிகிறது.

பரவலாகவும் மழைப்பொழிவு
ஜனவரி 27 முதல் பரவலான மழை பொழிவிற்கும் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

பாதிக்கும் மழையாக இருக்காது. ஆனால் ஜனவரி 27 க்கு மேல் சற்று கனமழை வாய்ப்பு
அறுவடை செய்தபின் வைக்கோல் சேமிப்பதில் உலர்த்துவதில் இடையூறு செய்ய வாய்ப்பிருக்கிறது.
அறுவடை நாளை குறிப்பதில் குழப்பம் தொடர்ந்து நீடிக்கும். மழை பொழிவு தொடர்ந்து பெய்யாது. மழை குறிக்கீடு இருக்கும் .குழப்பம் அதிகம் இருக்கும். ஆங்காங்கே ஆங்காங்கே கூடுதல் மழைக்கு வாய்ப்பு தெரிகிறது.
அச்சமின்றி,
இடைவெளி அறிந்து ,
ஆறுவடை செய்க.

பிப்ரவரி மார்ச் மழை

வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடங்கிய அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்ச்சியாக பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் சரியாக வெப்ப நீராவி, குளிர் நீராவி, வெப்பம், குளிர், இந்த செட்டிங் சரியாக செட்டாகும் பொழுது அவ்வப்பொழுது மழை கொடுக்கும்.

ஏப்ரல் மே கோடை மழை

ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை 2023

தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
21.1.2023 -4AM வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *