28. 12. 2022 அதிகாலை ஆய்வறிக்கை.
குமரிக்கடலை விட்டு விலகிய காற்று சுழற்சி மேலும் செயலிழந்து மெலிந்த சுழற்ச்சியாக லட்சத்தீவு, மாலத்தீவு இடைப்பட்ட பகுதியில் நீடிக்கிறது.
கடலோர ஆந்திர பகுதியை மையமாகக் கொண்டு உயரழுத்தம் வடதமிழகம் வரை பரவி நீடிக்கிறது.
இன்று தென் மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் மழைக்கு கூடுதல் வாய்ப்பு
குறிப்பாக கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது
புதுக்கோட்டை திண்டுக்கல் மாவட்டங்களுக்கு தெற்கே உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மிதமான மழை பெய்யும்.
மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதி மாவட்டங்கள் திருப்பூர் ,கோயமுத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை.
திருச்சி கரூர் நாமக்கல் சேலம் ஈரோடு அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை காரைக்கால் கடலூர் ஆகிய மாவட்டங்களில் எங்காவது ஓரிரு இடத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.
வடகடலோரம் வடஉள் மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு மிகவும் குறைவு.
வடகடலோரம் மற்றும் வடஉள் மாவட்டங்களில் இன்று முதல் பகலில் தெளிவான வானம் இரவில் மூடுபனி காணப்படும். வரும் நாள்களில் காலை வரை நீடிக்கும்.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய உள் மாவட்டங்களில் டிசம்பர் 29 முதல் பகலில் தெளிவான வானமும் இரவில் மூடுபனி அதிகாலை வரை நீடிக்கும்.
தென் மாவட்டங்களில் டிசம்பர் 30 முதல் தெளிவான வானம் இரவில் மூடுபனி அதிகாலை வரை நீடிக்கும்.
அடுத்த நிகழ்வு காற்று சுழற்சியாக சுமத்திரா தீவு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் உருவாகி இருக்கிறது.
இந்த காற்று சுழற்சி போராடி பொங்கல் வரை தமிழகத்தை நெருங்கும்.
இதன் காரணமாக ஜனவரி 5க்கு மேல் டெல்டா கடலோரம் தென்கடலோரம் குழப்பமான வானிலை மேகமூட்டம் தூறல் இருக்கும்.
ஜனவரி 5 முதல் இலங்கையில் ஆங்காங்கே நனைக்கும் மழை காணப்படும்.
ஜனவரி 8ககு மேல் 14 க்குள் இலங்கை நெருங்கக்கூடிய தாழ்வு அமைவு தமிழகத்திற்குள் எந்த அளவிற்கு முன்னேறி மழை பொழிவை கொடுக்கும் என்பது ஆய்வில் உள்ளது.
வட துருவத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைந்த அழுத்த பனிப்புயல் வட துருவ நாடுகள் அனைத்தையும் பாதிப்படையை செய்திருக்கிறது. குறிப்பாக கனடா அமெரிக்கா ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் வடகொரியா தென்கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத குளிர் காற்று வரலாறு காணாத பனிப்பொழிவு காரணமாக மாதக்கணக்கில் அனைத்தும் முடங்கி இருக்கிறது.
இந்த குளிர் காற்று தான் பசிபிக் பெருங்கடல் தென் சீனக்கடல் தாய்லாந்து வளைகுடா வழியாக தென் அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியா வரை பயணிக்கிறது.
இந்தக் குளிர் காற்று வங்கக்கடலிலும் இந்த ஆண்டு இரண்டு முறை நுழைந்து மழை பொழிவின் வழக்கமானகுணத்தையும் தீவிர தன்மையையும் நகர்வையும் மாற்றி அமைத்தது.
இந்த நிலை தொடர்கிற காரணத்தால் 2023 ஜனவரி 8 முதல் 14 வரை எதிர்ப்பார்க்கும் நிகழ்வையும், ஜனவரி 16 முதல் 24 வரை எதிர்பார்க்கும் நிகழ்வையும் தீவிர ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
2023 ஜனவரி 8 முதல் 14 வரை இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் தென் கிழக்கு பகுதிக்கு நிகழ்வு வர வாய்ப்புள்ளது.
2023 ஜனவரி 16 முதல் 24 வரை இடைப்பட்ட காலத்தில் தென் இலங்கை குமரிக்கடல் மாலத்தீவு பகுதிக்கு நிகழ்வு வர வாய்ப்பு இருக்கிறது.
மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் நெருங்குவது உறுதி அது தமிழகத்திற்கும் இலங்கைக்கும் மழை பொழிவை எந்த அளவிற்கு கொடுக்கும் .எந்த அளவிற்கு முன்னேறும் என்பதை வரக்கூடிய நாட்களில் உறுதிப்படுத்தலாம்.
ந. செல்வகுமார்